Monday, December 23, 2024
HomeFree softwareஉள்ளங்கையில் உலகை காட்டும் Google Earth Pro

உள்ளங்கையில் உலகை காட்டும் Google Earth Pro

கூகிள் எர்த் ப்ரோ (Google Earth Pro)

எர்த் வியூவர் (earth viewer) என அழைக்கப்படும் கூகிள் எர்த் என்பது விர்ச்சுவல் குளோப் (virtual globe), வரைபடம் மற்றும் புவியியல் (geographic) தகவல்களை பயனர்களுக்கு அளிக்கும் சாஃப்ட்வேர் ஆகும்.

கூகுள் எர்த், பூமியில் உள்ள நகரங்கள், வீடுகள், காடுகள், மலைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களின், செயற்கைக்கோள் புகைப்படங்களை மக்களுக்கு அளிக்கின்றது. பிரமிக்க வைக்கும் பல இடங்களை முப்பரிமாண (3D) புகைப்படங்களாக காணவும் வழி வகுக்கிறது.

தற்பொழுது கூகிள் எர்த் மேம்படுத்தப்பட்டு, கூகிள் ப்ரோ (Google Earth Pro) என்ற வகையில் இலவசமாக கிடைக்கிறது.

google pro softwareshops

400 அமெரிக்க டாலர் மதிப்பு கொண்ட கூகிள் எர்த் தற்பொழுது இலவசமாக டவுன்லோட் செய்திடலாம். இதன் மூலம் கணினி முன்பு உட்கார்ந்து கொண்டே உலகத்தில் உள்ள இடங்களை பார்த்தறியலாம்.

இது வரை பார்த்திராத காட்சிகள், இடங்கள், மலைகள், பிரபலமான கட்டிடங்கள், வளைகுடா, பெருங்கடல்கள் என உலகின் எந்த ஒரு பகுதியையும்  பார்த்துக் கண்டுகளிக்கலாம்.

புதிய கூகிள் எர்த் ப்ரோவில் அசத்தும் இரண்டு புதிய  அம்சங்கள் : 

1. வாயேஜர் (Voyager)

2. விரிவு படுத்தப்பட்ட உலக வரைபட தொகுப்பு ( the Earth View image collection)

வியக்க வைக்கும் ’வாயேஜர்’:

’வாயேஜர்’ தற்போது, கூகுள் எர்த்தின் டெஸ்க்டாப் பதிப்பில் மட்டுமே பயன்படுத்த முடிகிறது. இதன் மூலமாக உலகில் உள்ள பல சுவாரஸ்யமான இடங்களை உடனே அணுக முடியும்.

மேலும், ’வாயேஜர்’ சேவை, ஐந்து பகுதிகளில் கிடைக்கின்றது.

1. வீதிக் காட்சிகள் (Street View) – உலகின் முக்கிய நகரங்களின் வீதிகளின் தோற்றத்தை 360 டிகிரி கோணத்தில் கண்டு ரசிக்க முடியும்.

2. புவி வரைபடம் (Earth View)- விண்ணில் இருந்து பூமியைப் பார்க்கும் அனுபவத்தைப் பெற முடியும்.

3. 3D நகரங்கள் (3D cities) – முப்பரிமாண நோக்கில் பார்க்கப்படக் கூடிய நகரங்களின் பட்டியலை தருகிறது

4. அன்றாட செயற்கைக் கோள் வரைபடம் (Satellite imagery updates) : பல்வேறு பகுதிகளின் அப்போதைய வானிலையை அறிய உதவும்.

5. உலகின் முக்கிய இடங்களின் சிறப்புப் பார்வை (Highlight tour)

1,500 பிரமிக்க வைக்கும் நிலப்பரப்புகளின் தொகுப்பு :

கூகுள் எர்த்தின் மற்றொரு புதிய அம்சமான ’உலக வரைபட தொகுப்பு’, உலகின் ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள 1,500 பிரம்மாண்ட நிலப்பரப்புகளின் புகைப்பட தொகுப்பை அளிக்கின்றது. இதை மக்கள் வெப் கேலரி (web gallery) அல்லது குரோம் எக்ஸ்டன்ஷன் (Chrome extension) மூலம் காணலாம்.

மேலும் இதுவரை பணம் செலுத்தி பெறும் சேவையாக இருந்த ‘கூகுள் புரோ’ எனப்படும் அம்சம் தற்போது இலவசமாக்கப்பட்டுள்ளது. கூகுள் எர்த்தின் இந்த புதிய அம்சங்கள் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

கூகிள் எர்த் ப்ரோ டவுன்லோட் செய்ய சுட்டி:

Download Google Pro Earth for Free

கூகிள் எர்த் ப்ரோ பற்றி முழுமையாக அறிந்துகொள்ள இங்கு சொடுக்கவும்.

கூகிள் எர்த் பற்றிய சுவராஷ்ய தகவல்கள்: 

கூகிள் எர்த் பார்த்திருப்போம். அதில் எர்த் லைவ் கூட தற்பொழுது உண்டு. கூகிள் எர்த்திற்கான படங்களை எடுத்துத் தள்ளும் சாட்டிலைட் பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா?

கூகிள் எர்த் மூலம் நாம் பார்க்கும் படங்களை அந்த சாட்டிலைட்கள் எடுத்து அனுப்புகின்றன.

முதன் முதலில் கூகிள் எர்த் படங்கள் இந்த சாட்டிலைட் (Quick Bird) மூலம்தான் பெறப்பட்டது.

satellite for google earth
Quick Bird Satellite (Image credit @DigitalGlobe)

கூயிக் பேர்ட் (Quick Bird) விண்ணில் ஏவப்பட்ட நாள் அக்டோபர் 18, 2001
இதற்கு அடுத்து அனுப்பட்ட சாட்டிலைட் WorldView I.
இது புதிய தொழில்நுட்படதுடன் படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பியது. ஏவப்பட்ட நாள் செப்டம்பர் 18, 2007.
இதற்கு அடுத்து ஏவப்பட்ட செயற்கைகோள் WorldView II.

கூகிள் எர்த் படங்களை கீழுள்ள நிறுவனங்கள் – இமேஜரி சப்ளையர்ஸ் – Imagery suppliers மூலம் வாங்குகிறது.

http://www.spatialenergy.com/
http://www.digitalglobe.com/
http://www.geoeye.com/CorpSite/
http://www.satimagingcorp.com/gallery.html
http://www.usgs.gov/pubprod/aerial.html

கூகிள் எர்த்தில் மறைக்கப்பட்ட பகுதிகள்:

உலகத்தின் மூலை முடுக்கை கூட கூகிள் எர்த் வழி பார்க்கலாம் என்று தான் இத்தனை நாட்களாக நினைத்திருப்பீர்கள். ஆனால் உலகின் குறிப்பிட்ட பகுதிகளை பார்க்க முடியாதவாறு கூகிள் எர்த் மறைத்து வைத்துள்ளது. உதாரணமாக வடகொரியா. ஈராக்கில் உள்ள பாபிலோன் போன்றவற்றை குறிப்பிடலாம்.

மேலும்,

  • Baker Lake, NU, the Inuit nation in northern Canada
  • Ramstein Air Force Base, Germany
  • Pacific Northwest, USA
  • Szazhalombatta Oil Refinery, Hungary
  • Huis Ten Bosch Palace, Netherlands
  • Unknown area, Russia
  • Mobil Oil Corporation, Buffalo, NY, USA
  • North Korea
  • Reims Airbase, France
  • Indian Point Power Plant, New York, USA
  • Volkel Airbase, Netherlands
  • HAARP Site, Gakona, Alaska, USA
  • Babylon, Iraq
  • Tantauco National Park in Chile
  • “The Hill” aka Elmira Correctional Facility
கூகிள் எர்த்தில் மறைக்கப்பட்ட பேக்கர் ஏரி – வட கனடா. 

hiding part of northern Canada
Baker Lake – வட கனடா

போன்ற பகுதிகள் கூகிள் எர்த்திலிருந்து மறைகப்பட்டுள்ளது. இதை உறுதி செய்ய கூகிள் எர்த்தில் குறிப்பிட்ட பகுதியின் பெயரை காப்பி பேஸ்ட் செய்து சர்ச் செய்து பார்த்தால் அந்த பகுதி மறைக்கப்பட்டிருப்பது (Hide) தெரியும்.

கூகிள் எர்த்திற்கு படங்கள் எடுக்க செயற்கை சுற்றும் முறையை பாருங்கள்.

வீடியோ :

மேலும் சில கூகிள் எர்த் பற்றிய தகவல்கள் பதிவில் எதிர்காலத்தில் சேர்க்கப்படும். உங்களுக்கும் கூகிள் எர்த் பற்றிய புதிய தகவல்கள் தெரிந்தால் கமெண்ட் வழியாக தெரிவிக்கவும்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments