Thursday, January 23, 2025
HomeAndroidதொலைந்து போன மொபைல் போனை கண்டுபிடிக்க 5 வழிகள் !

தொலைந்து போன மொபைல் போனை கண்டுபிடிக்க 5 வழிகள் !

தொலைந்துபோன மொபைல் போனை கண்டுபிடிக்க 5 வழிகள் இருக்கிறது. அவற்றைப் பயன்படுத்தி மிக எளிதாக தொலைந்துபோன/திருடுபோன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை கண்டுபிடிக்கலாம்.  மொபைல் போனை தொலைத்து விட்டு (Lost Mobile)  அதை திருடு கொடுத்துவிட்டு தேடுவது என்பது மரண வேதனையாக இருக்கும். பல ஆயிரங்கள் கொடுத்து ஆசை ஆசையாய் வாங்கிய போன் திடீரென கையை விட்டுப் போனால் சோகம் அப்பிக்கொள்ளாதா என்ன?

அதுவும் வாட்சப், பே|ஸ்புக், இமெயில், போன் கால் செய்வது போன்ற அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய இயலாமல் தவிப்பது என்பது மிக க் கொடுமையான விஷயம். இளைஞர்கள் என்றால் சொல்லவே தேவையில்லை. ஏதோ வீட்டில் ஒருவரை இழந்து துக்கமாக இருப்பது போலவே காணப்படுவர். அந்தளவிற்கு போன் மீதி அதீத காதல் வைத்திருப்பவர். அப்படிப்பட்ட சூழ்நிலையில் வெகு விரைவாக மொபைல் போனை கண்டறிய இந்த 5 வழிகளைப் பயன்படுத்தலாம்.

காணாமல் போன அல்லது திருடு போன மொபைல் போனை எப்படி கண்டுபிடிப்பது? 

இருக்கிறது 5 வழிகள். இவற்றை பின்பற்றினால் கண்டிப்பாக காணாமல் போன மொபைல் போனை கண்டுபிடித்துவிடலாம். குறைந்த பட்சம் அந்த போனை மற்றவர்கள் பயன்படுத்த முடியாதவாறு “லாக்” செய்துவிட முடியும்.

way to find lost mobile phone
1. ஆன்ட்ராய்ட் போன்கள் பொறுத்தவரை அதனுடைய அனைத்து தகவல்களையும் அணுகும் மையம் Google Device Manager தான். உங்களுடைய ஆன்ட்ராய்ட் போனின் டிவைஸ் அட்மினிஸ்ட்ரேட்டராக “கூகிள் டிவைஸ் மேனேஜர்” இருந்தால், பிரௌசர் மூலம் போனை கட்டுப்படுத்த முடியும். 
எப்படி கட்டுப்படுத்துவது? அதற்கு என்னென்ன செட்டிங்ஸ் செய்வது?
  • உங்கள் ஆன்ட்ராய்ட் போனில் Settings ==> Security என்ற ஆப்சனை தேர்வு செய்யுங்கள். 
  • அதில் Device Administrators என்ற ஆப்சனின் கீழ் Android Device Manager என்பதை தேர்வு செய்யுங்கள். 
இந்த அமைப்பை ஏற்படுத்துவதன் மூலம், மொபைல் உங்கள் கையில் இல்லாத பொழுது பிரௌசர் வழியாக 
    • மொபைல் லாக் செய்யலாம்
    • மொபைலில் உள்ள தகவல்களை அழிக்கலாம்
    • மொபைல் ஸ்கிரீன்லாக் பாஸ்வேர்டை மாற்றலாம். 
மூன்றாவது நபர் யாரிடமாவது உங்கள் மொபைல் சிக்கிக்கொண்டால், மேற்சொன்ன வழிமுறைகளைப் பின்பற்றி மொபைலை அவர் பயன்படுத்த முடியாமல் செய்திட முடியும். 
2. உங்களுக்கு பழக்கமான இடங்களில் , (உ.ம். அலுவலகம், வீடு, நண்பர்களின் வீடு) மொபைலை வைத்துவிட்டு காணாமல் தேடும்பொழுது இந்த உத்தி பயன்படும். சாதாரணமாக மொபைலை வைத்துவிட்ட, தேட மிஸ்டுகால் கொடுத்து தேடுவார்கள். போன் “Silent Mode” ல் இருந்தால், கண்டுபிடிப்பது கஷ்டம். அதற்குதான் இந்த ட்ரிக் பயன்படும்.

how to find theft mobile phone

அது என்ன ட்ரிக்? எப்படி பயன்படுத்துவது?
ஆன்ட்ராய்ட் டிவைஸ் மேனேஜர் வழியாக, மொபைல் போன்  சைலன்ட் மோடில் (Silent Mode) இருந்தாலும், அதை ரிங்டோன் ஒலிக்குமாறு செய்து கண்டுபிடித்துவிடலாம். அதற்கும் ஒரு தந்திரம் உண்டு. 
  • உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள கூகிள் குரோம் பிரசரில் இந்த முகவரியில் செல்ல வேண்டும். 
  • https://www.google.com/android/devicemanager
  • அல்லது கூகிள் சர்ச் பாக்சில் Find Your Phone என கொடுத்து, பிறகு அந்த முகவரிக்கு செல்ல முடியும். 
  • அதன் பிறகு உங்கள் ஆன்ட்ராய்ட் போன் இணைக்கப்பட்ட மெயில் முகவரியை கொடுத்து லாகின் செய்ய வேண்டும். 
  • லாகின் செய்து முடித்தவுடன் உங்களுக்கு இதுபோல ஒரு பக்கம் தோன்றும்.
  • அதில் Ring என்பதை அழுத்தினால், உங்கள் மொபைல் போனில் Default ஆக உள்ள Ring Tone ஒலிக்கும்.
அப்போது மொபைல் வைத்திருக்கும் இடத்தின் எளிதாக கண்டுபிடித்துவிடலாம்.  இது ஒரு மிகச்சிறந்த அருமையான வசதி..!
3. ஆன்ட்ராய்டு போன் தொலைந்து போய்விட்டது. அல்லது வேறு யாரோ திருடிவிட்டார்கள். அது எந்த இடத்தில் உள்ளது என்பதை எப்படி கண்டுபிடிப்பது? 
மேற்குறிப்பிட்ட முறையில் கம்ப்யூட்டரில் பிரௌசர் வழியாக டிவைஸ் மேனேஜரை அணுக்க வேண்டும்.   அதற்கு முன்பு நீங்கள் ஆன்ட்ராய்ட் போனில் இதை கட்டாயம் செய்திருக்க வேண்டும். 
  • அதாவது  போனில் GPS வசதி ஆன் செய்திருக்க வேண்டும்.   
  • இப்பொழுது டிவைஸ் மேனேஜரை இயக்க வேண்டும். 
  • அதில் Locate Device என்ற பட்டனை அழுத்த வேண்டும்.
அவ்வளவுதான். உங்களுடைய மொபைல் இப்பொழுது எங்கு உள்ளது. எந்தெந்த இடத்தில் பயன்படுத்தப்பட்டது என்பதை தெரிந்துகொள்ள முடியும். 
மொபைல் எங்கெல்லாம் பயன்படுத்தபட்டது என்பதை தெரிந்துகொள்ள “Location History” வசதி உதவும்.
android device manager to fine lost mobile
4. மொபைல் தொலைந்துவிட்டது. அது நமக்கு கிடைக்காது என்பது உறுதியாகிவிட்டது. அப்படியானால், கண்டிப்பாக அதில் உள்ள டேட்டாக்களை வேற யாரும்தவறாக பயன்படுத்த கூடாது இல்லையா? அதனால் அந்த டேட்டாக்களை அழிப்பது நல்லது. அந்த காரியத்தையும் இந்த டிவைஸ் மேனேஜர் வழியாக செய்து முடித்துவிடலாம். 
எப்படி மொபைல் டேட்டாவை அழிப்பது?
  • மொபைல் போனில் டேட்டா ஆன் செய்யப்பட்டிருக்க வேண்டும். (கட்டாயம்)
  • டிவைஸ் மேனேஜர் – லாகின் செய்து – Erase கொடுத்தால் போடும்.
  • மொபைலில் உள்ள அனைத்து டேட்டாக்களும் “ஸ்வாகா” ஆகிவிடும். (Delete ஆகிவிடும்.) இதைத்தான் துன்பத்திலும் இன்பம்னு நம்ம சொல்லிக்கிறது. 🙂

மொபைல் லாக் செய்வது எப்படி?

தொலைந்தபோன மொபைலை லாக் செய்ய DIVICE MANAGER -ல் வழி உண்டு. அதில் உள்ள தகவல்களை எவரும் பயன்படுத்தி விடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையில் அதிலுள்ள தகவல்களை பெற முடியாத வண்ணம் “மொபைல் போனை” “லாக்” செய்திடலாம். அதற்கான வழிமுறைகள் கீழே. 
எப்படி லாக் செய்வது?
  • டிவைஸ் மேனேஜரில் லாகின் செய்ய வேண்டும்.
  • லாக் (Lock) ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும்.
  • திரை தோன்றும். அதில் புதிய பாஸ்வேர்ட் கொடுக்க வேண்டும்.
  • பிறகு ஆல்டர்நேட் தொடர்பு எண் (வேறு மொபைல் நம்பர்) கொடுக்க வேண்டும்.
அவ்வளவுதான். திருடியவன் உங்களை போனை பயன்படுத்தனும்னா, அதை உடைச்சா கூட முடியாது. அதையும் மீறி பயன்படுத்த நினைச்சா, ஸ்கிரீனில் ஒரு திரை வரும். அதில் உள்ள கால் பட்டனை அழுத்தினால், நீங்கள் கொடுத்த ALTERNATE MOBILE NUMBER க்கு போன் கால் வரும். அதன் மூலம் போனை எடுத்தவரிடம் பேசி, உங்களுடைய மொபைல் போனை கண்டுபிடித்துவிடலாம்.
5. இந்த வசதிகள் அனைத்தும் செயல்படுத்திட வேண்டுமானால் கட்டாயம் உங்களுடைய மொபைல் போன் இன்டர்நெட் தொடர்பு வசதியுடன் இருக்க வேண்டும். இல்லையென்றால் இந்த முறை பயனளிக்காது. பிறகு மொபைல் போன் தொலைந்து விட்டது என காவல் நிலையம் சென்று புகார் அளிக்க வேண்டியதிருக்கும்.

மொபைல் போன் திருட்டு குறித்து எப்படி காவல் நிலையத்தில் புகார் அளிப்பது?

சாதாரணமாக காவல் நிலையத்தில் என்னுடைய மொபைல் போன் தொலைந்து விட்டது என்று எழுதிக் கொடுத்துவிட்டு வந்துவிடும் வேலை இல்லை அது.

  • உங்களோட பெயர், 
  • முகவரி, 
  • போன் மாடல், 
  • தயாரித்த நிறுவனப் பெயர், 
  • கடைசியா போன் செய்த நம்பர், 
  • கான்ட்டாக் இமெயில், 
  • தொலைந்து போன தேதி, 
  • நாள், இடம்,  
  • போனின் IMEI நம்பர் 

இப்படி பல தகவல்களை cop@vsnl.net  என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பிறகு அவர்கள் GPRS, இன்டர்நெட் வழியாக உங்களுடைய போன் எங்கு, எந்த இடத்தில் இருக்கிறது என்பதை கண்டுபிடித்து, உரிய நபரை அணுகி, அவரிடமிருந்து உங்களுடைய போனை கைப்பற்றி கொடுப்பார்கள்.

முதலில் நீங்கள் செய்ய வேண்டியது, புதிய போன் ஒன்றினை வாங்கிய உடன் அது பற்றிய தகவல்கள் அனைத்தையும் எழுதி சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். போன் வாங்கிய BILL ஐ பத்திரப்படுத்தி வைக்க வேண்டும். அந்த தகவல்கள் அத்தனையும் உங்களுக்கு நிச்சயம் இதுபோன்ற சூழ்நிலைகளில் உதவும்.

இப்பதிவு பயனுள்ளதாக இருந்தால், பேஸ்புக், ட்விட்டர், வாட்சப் -ல் பகிர்ந்து உதவவும்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments