Monday, December 23, 2024
Homecomputer tricksWi-Fi பாஸ்வேர்ட் மறந்து விட்டதா?

Wi-Fi பாஸ்வேர்ட் மறந்து விட்டதா?

இது ஒரு அருமையான மென்பொருள். நீங்கள் மறந்துவிட்ட வைஃபை பாஸ்வேர்ட்டை மீட்டு தந்து, மீண்டும் இணைய இணைப்பைப் பெற்றிட உதவும் சிறந்த மென்பொருள்.

 ஒரே ஒரு கண்டிசன் என்னவென்றால், நீங்கள் இதற்கு முன்பு அந்த வைபை நெட்வொர்க்கை ஒரு முறையாவது  பயன்படுத்தியிருக்க வேண்டும். பொதுவாக பள்ளி, கல்லூரி, அலுவலகம் போன்றவற்றில் இந்த மென்பொருள் பயன்படும். பொது இடங்களில் இலவச வைபை இருந்தாலும் இதை பயன்படுத்தலாம்.

நண்பர்களின் இணைப்பை பயன்படுத்தியிருந்தாலும், மீண்டும் அவற்றை பெற்றுவிடலாம்.

wifi password recovery software

அந்த மென்பொருள் எது தெரியுமா? Wireless Key View என்ற மென்பொருள் தான்.

பயன்படுத்தும் முறை:

இந்த மென்பொருளை திறந்து பயன்படுத்துவதற்கு முன்பு,

1. உங்களுடைய லேப்டாப்  WiFi ஏரியாவுக்குள் நீங்கள் இருக்க வேண்டும்.
2. லேப்டாப்பில் WiFi கட்டாயம் ஆன் செய்து வைத்திருக்க வேண்டும்
3. இதன்பிறகு மென்பொருளை  ஓப்பன் செய்துகொள்ளுங்கள்.
4. ஓப்பன் செய்ததும் அந்த ஏரியாவில் கிடைக்கும் வைஃபை நெட்வொர்க்குகளை காட்டும்.
5. அவைகள் Network, KeyType, Password போன்ற வரிசையில் இருக்கும்.

நீங்கள் இதற்கு முன்பு அதில் காட்டும் வைஃபை நெட்வொர்க்கை பயன்படுத்தி இருந்தால், அதற்கான பாஸ்வேர்ட்டை கணினியிலிருந்து மீட்டு எடுத்து தந்துவிடும். 🙂

வேலை செய்யும் இடம், பள்ளி, கல்லூரிகளில் கண்டிப்பாக இந்த சாப்ட்வேர் பயனுள்ளதாக இருக்கும். பயன்படுத்திப் பாருங்கள்.

வயர்லஸ் கீ வியூ சாப்ட்வேர் டவுன்லோட் செய்யச் சுட்டி: Download Wireless Key View

RELATED ARTICLES

Most Popular

Recent Comments