ஆன்ட்ராய்ட் என்றால் என்ன?
ஆன்ட்ராய்ட் என்பது ஸ்மார்ட்போன் இயங்குவதற்கு தேவையான ஒரு மென்பொருள்? (இயங்குதளம்).
ஆன்ட்ராய்ட் இயங்குதளம் எப்படிப்பட்டது?
மிகச்சிறப்பானது. தொட்ட உடன் துலங்கிடும். அதனால்தான் அது இயக்கும் போனை ஸ்மார்ட் என்றார்கள்.
ஆன்ட்ராய்ட் போன் என்பது என்ன?
ஆன்ட்ராய்ட் இயங்குதளத்தின் மூலம் இயக்கப்படும் போனைத்தான் ஆன்ட்ராய்ட் போன் என்கிறார்கள். பல்வேறு நிறுவனங்கள், பல வேறுபட்ட வசதிகளுடன், வித்தியாசமான விலைகளில் ஆன்ட்ராய்ட் போனை தயாரித்து விற்பனை செய்கின்றனர்.
ஆன்ட்ராய்ட் ஆப்ஸ்களில் முக்கியமானவைகள் எது?
ஆன்ட்ராய்ட் போன் இயங்க ஆன்ட்ராய்ட் OS தேவை. அதன் மூலம் பல்வேறு தேவைகளைப் பெற்றுக்கொள்ள உதவுபவை ஆன்ட்ராய்ட் ஆப்ஸ். அடிப்படை ஆப்ஸ்கள் போனில் இன்ஸ்டால் செய்யப்பட்டு கிடைக்கும்.
மேலும் பொதுவாக அனைவருக்கும் தேவையான பயனுள்ள ஆப்ஸ்கள் உண்டு. அவற்றைப் பற்றித் தெரிந்துகொள்ள இந்த இணைப்பை அழுத்தவும்.
சில நேரங்களில் ஆன்ட்ராய்ட் போன் மிக குறைவான வேகத்தில் இயங்கிறது. அதன் வேகத்தை எப்படி அதிகப்படுத்துவது?
சுலபமான விஷயம்தான். அதில் உள்ள தேவையற்ற ஆப்ஸ்களை நீக்க வேண்டும். பின்னணியில் இயங்கும் தேவையற்ற ஆப்ஸ்களின் இயக்கத்தை நிறுத்தி வைக்க வேண்டும். வைரஸ் பாதிப்பு இருப்பதாக தோன்றினால் வைரஸ் கேனர் கொண்டு ஸ்கேன் செய்து, அதில் உள்ள வைரசை நீக்க வேண்டும். பிறகு ஒருமுறை போனை ரீஸ்டார்ட் செய்து உபயோகித்தல் புது போனை போல வேகமாக செயல்படும்.