Tuesday, December 24, 2024
Homedifferent websiteபிரபல வெப்சைட்டுகளின் 10 வருட பழைய தோற்றத்தைப் பார்க்க

பிரபல வெப்சைட்டுகளின் 10 வருட பழைய தோற்றத்தைப் பார்க்க

நாம் பத்து வருடத்திற்கு முன்பு எப்படி இருந்தோம். இப்படி எப்படி இருக்கிறோம் என்பது நம்மால் சரியாக சொல்ல முடியாது. ஆனால் போட்டோ, வீடியோ போன்றவற்றில் பதிவு செய்திருந்தால், அதைப் பார்த்து.. “ஓ… நாம எப்படி இருந்திருக்கோம்… இப்படி எப்படி மாறிட்டோம்.. ” என்று நம்மை நாமே பார்த்து ஆச்சர்யப்பட்டு கொள்வோம்.

10 years ago website

அது மாதிரியேதான் இதுவும். ஆனால் இதில் தொழில்நுட்பம் மேம்பாடு, பழைய வெப்சைட் வடிவமைப்பு போன்றவற்றை தெரிந்துகொள்ள முடியும். அதற்காகவே பத்து வருடத்திற்கு முன்பு ஒரு பிரபலமான வெப்சைட் (உ.ம். apple.com, Youtube.com)  எப்படி இருந்தது என்பதை வடிவமைத்திருக்கிறார் ஒருவர்.

“டென் இயர்ஸ் அகோ” என்ற இணையதளம் அதற்கு வழி செய்துள்ளது. இதன் முகப்பு பக்கத்தில் உள்ள லோகோவை கிளிக் செய்தால், பத்து ஆண்டுகளுக்கு முன்பு அந்த வெப்சைட் எப்படி இருந்தது என்பதை பார்க்க முடியும்.

முகவரி: Tenyearsago.com

இந்த இணையதளம் பழைய வெப்சைட்டுகளின் வடிவங்களை பாதுகாத்து வரும் வெப் ஆர்கேவ் இணையதளத்தில் சேமிக்கப்பட்ட இணையப் பக்கங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.  “Ten Years Ago” இணையதளத்தை நீல் அகர்வால் என்பவர் வடிவமைத்துள்ளார்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments