Monday, December 23, 2024
Homedifferent websiteஒருவர் ஒரு நிமிடம் மட்டுமே பார்க்க கூடிய வெப்சைட் !

ஒருவர் ஒரு நிமிடம் மட்டுமே பார்க்க கூடிய வெப்சைட் !

எதையும் வித்தியாசமாக செய்தால், இணைய உலகில் அதிகமாக கவனத்தை ஈர்க்கும். அதன்படி, ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே பார்க்க கூடிய வித்தியாசமான வெப்சைட் (Website) ஒன்றை வடிமைத்து உள்ளார் அமெரிக்கரான ஜஸ்டின் போலே.

இந்த வெப்சைட்டைப் பார்க்க டோக்கன் (Token – Ticket) பெற்றுக்கொண்டு வரிசையில் இருந்தான் பார்க்க வேண்டும். ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே பார்க்க முடியும் என்பதால் டோக்கன் சிஸ்டத்தை இதில் வைத்துள்ளார்.

vidyasamana website

தளத்தின் பெயர் “மோஸ்ட் எக்ஸ்க்ளூசிவ் வெப்சைட்“. பெயருக்கு ஏற்ற மாதிரி இது வித்தியாசமானதுதான். (Totally Different Website)

நான் இந்த வெப்சைட்டை பார்க்கும்போது 38,509,901 நிமிட காத்திருப்புகள் (Waited)முடிந்திருந்தன.

இந்த இணையதளத்திற்கு சென்றவுடனே அதில் உள்ள Name கட்டத்தில் உங்களது பெயரைக் கொடுத்துவிட்டு ‘get in line’ பட்டனைத் தட்டினால் அடுத்த பக்கம் தோன்றும். அதில் பெயர் , வெப் யூஆர்எல் (Web Url) கொடுத்துவிட்டு காத்திருந்தால் அந்த வெப்சைட்டை பார்வையிடலாம்.

ஒரு நிமிடம் மட்டும் பார்க்க அந்த வெப்சைட்டில் என்னதான் இருக்கிறது என்று கேட்டால் அது சஸ்பென்ஸ்.

நீங்களே பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். 🙂

இணையதள முகவரி : Most Exclusive Website

RELATED ARTICLES

Most Popular

Recent Comments