ஒரு ஆயிரமா? ரெண்டு ஆயிரமா? பல ஆயிரங்கள் செலவழித்து ஒரு ஸ்மார்ட் போன் வாங்கி பயன்படுத்திக் கொண்டிருக்கும்பொழுது, அது தொலைந்து போனால் (திருடு போய்விட்டால்) ஏற்படும் மன உளைச்சலுக்கு அளவே இருக்காது.
ஆசை ஆசையாய் மிகவும் சிரப்பட்டு வாங்கிய செல்போன் திருடுபோனால் மனது கஷ்டபடாமல் இருக்குமா என்ன?
திருடுபோன மொபைல் போனை கண்டுபிடிக்க ஆப்
அவ்வளவு விலைமதிப்புள்ள செல்போன் தொலைந்து விட்டால், அதைப் பற்றி பதற்றப்படாமல் மிக எளிதாக அந்த போன் இருக்கும் இடத்தினை கண்டுபிடித்துவிடலாம் என்பதுதான் தற்பொழுது உள்ள ஆறுதலான விடயம்.
யார் வைத்திருக்கிறார்கள்? எங்கே இருக்கிறார்கள்? எந்த வகையான சிம் பயன்படுத்துகிறார்கள் என்பதை அனைத்தையும் இப்போதுள்ள தொழில்நுட்ப வசதிகள் காட்டிக்கொடுத்துவிடும். குறிப்பாக ஆன்ட்டி தெப்ட் ஆன்ட்ராய்ட் ஆப் இன்ஸ்டால் செய்து வைத்திருந்தால் கண்டுபிடிப்பது இன்னும் சுலபமாகிவிடும்.
உங்களுடைய மொபைல் போனை ஒருவர் திருடி, உங்களுடை சிம்கார்டை நீக்கிவிட்டு, அவருடைய சிம்கார்ட் போட்டுப் பயன்படுத்தினாலும், உங்களுடைய குடும்ப நபர்கள் அல்லது நண்பர்களின் போனிற்கு அந்த நபரின் சிம்கார்ட், அவர் அதைப் பயன்படுத்தும் ஏரியா என அனைத்து தகவல்களையும் நொடி நேரத்தில் உங்களுக்கு வழங்கிவிடும்.
எனவே இந்த ஆப் உங்களுடைய மொபைலில் இன்ஸ்டால் செய்து வைத்திருந்தால் போதும். மற்ற எதுவும் தேவையில்லை.
தொலைந்து போனவுடன் காவல்நிலையத்தில் ஒரு புகார் செய்துவிட்டு காத்திருந்தால் ஒரு வார காலத்திற்குள் உங்களுடைய போனை டிரேஸ் அவுட் (Traceout) செய்து, பயன்படுத்தும் நபரை கையும் களவுமாக பிடித்துவிடுவார்கள். திருடிய நபர் உடனே உங்களுடைய போனை பயன்படுத்த ஆரம்பித்தாலும், ஆன்ட்டி தெப்ட் ஆப்பில் நீங்கள் ஏற்கனவே பதிவு செய்த எண்களுக்கு (உங்களுடைய நண்பர்/குடும்ப நபர்) போனிற்கு அது பற்றிய தகவல்களை உடனடியாக SMS ஆக அனுப்பி வைத்துவிடும்.
உங்களுடைய போனும் உங்கள் கைக்கு வந்துவிடும்.
திருடுபோன மொபைல் போன் கண்டுபிடிக்க உதவும் ஆப் டவுன்லோட் செய்ய சுட்டி: Download Best Anti-Theft Android App
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் “ஷேர்” செய்திடுங்கள். இதுபோன்ற மற்றொரு பயனுள்ள பதிவின் வழி சந்திப்போம். நன்றி.
#anti-theft app, #android anti-theft app #android security app