பொது இணைய சேவையை பயன்படுத்தி பிரௌசிங் செய்திடுகையில் நீங்கள் உங்களுடைய கணினியில் உள்ளிடும் தகவல்களை இணைய திருடர்கள் திருடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இன்டர்நெட் மோசடிகள் அதிகரித்து வரும் இந்த வேளையில், அதைத் தடுப்பதற்காகவும், உங்களுடைய டேட்டாக்களை பாதுகாத்திடவும், பாதுகாப்பான பிரௌசிங் செய்திடவும் உருவாக்கப்பட்டது தான் விபிஎன் மென்பொருள் (VPN Software). இது கட்டாயம் ஒவ்வொருவருக்கும் அவசியம் தேவை.
சிலர் இது பற்றிய தகவல்களை அறிந்து வைத்திருக்கிறார்கள். மிகப் பலருக்கு தெரியாமல் இருக்கிறது. ஜெனரல் WiFi கனக்ஷனை பயன்படுத்துகையில், அதன் வழியாக இணைய திருடர்கள் நுழைந்து உங்களுடைய தகவல்களை அணுகிவிடுகின்றனர்.
இணையதளங்களில் நீங்கள் உள்ளிடும் Banking Password போன்ற தகவல்களை பாதுகாப்பதற்கு கண்டிப்பாக உங்களுக்கு தேவை திடமான செக்யூரிட்டி கொடுக்கும் பிரைவேட் நெட்வொர்கிங். அதை வழங்கிற ஒரு இலவச மென்பொருள் VPN Software.
VPN Software என்ன செய்யும்?
இந்த மென்பொருளானது பாதுகாப்பான மறைகுறியாக்கம் (Encrypted) செய்யப்பட்ட வைஃபை வழியாக பயனர்களை இணையத்தை அணுக வழிவகை செய்கிறது. இதனால் இதன் வழியாக இணையத்தை அணுகும்போது, அதில் உள்ளிடப்படும் தகவல்களை பிறர் பயன்படுத்த முடியாது.
VPN சாப்ட்வேர் பயன்கள்:
- VPN Software பயன்படுத்துவதால் உங்கள் தகவல்களுக்கு பாதுகாப்பு கிடைத்திடும்.
- குறிப்பிட்ட தடுக்கப்பட்ட இணையதளங்களை இந்த VPN பயன்படுத்தி திறந்து பார்வையிட முடியும்.
இலவசமாக கிடைக்கும் VPN சாப்ட்வேர்கள்
விபிஎன் சாப்ட்வேர்கள் இலவசமாக டவுன்லோட் செய்திட கிடைக்கின்றன. அவற்றில் ஒரு சில VPN மென்பொருட்கள் பற்றி இங்கு தெரிந்துகொள்வோம்.
1. TunnelBear
இலவசமாக கிடைக்கும் மென்பொருளில் சிறந்ததாக கருதப்படுவது ட்யூனல்பியர் VPN. கட்டண மென்பொருளை போன்று அனைத்து அம்சங்களை கொண்டிருக்கிறது.
Download Link: Download Free TunnerlBear
2. CyberGhost
சிறந்த வசதிகள் கொண்ட மற்றொரு விபிஎன் மென்பொருள் இது.
டவுன்லோட் செய்ய சுட்டி: Downloa
d Free CyberGhost
மேலும் சில விபிஎன் மென்பொருட்கள்;
Hideme
IPVanish VPN
PureVPN
VPN Unlimited
Hide My Ass
விபிஎன் சாப்ட்வேர் டவுன்லோட் செய்ய சுட்டி: Download Free VPN Software