Saturday, November 23, 2024
HomeFree softwareஇலவச இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர்

இலவச இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர்

இணையத்தில் மென்பொருள் உட்பட பலவித கோப்புகள் தரவிறக்கம் செய்கிறோம். டவுன்லோட் ஆகும்போது திடீரென பாதியில் இணைய இணைப்பு தடை பட்டால், அந்த ஃபைலை மீண்டும் புதியதாக டவுன்லோட் செய்ய வேண்டும்.

அவ்வாறு பாதி பைல் (File)  டவுன்லோட் முடிந்த நிலையில், மீண்டும் தொடக்கத்திலிருந்து டவுன்லோட் செய்திடுகையில் “டேட்டா” அதிகமாக செலவாகும். அதே வேளை டவுன்லோட் செய்வதற்கான கால விரயம் ஏற்படும்.

internet download manager


இதைத் தவிர்க்க உருவாக்கப்பட்ட மென்பொருள் “இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர்“. 

இந்த மென்பொருள் மூலம் ஒரு ஃபைலை டவுன்லோட் செய்திடுகையில், பாதியில் தடை ஏற்பட்டு டவுன்லோட் நின்று விட்டாலும், மீண்டும் கணினி/இணையம் தொடங்குகையில் விடுப்பட்ட இடத்திலிருந்து டவுன்லோட் தொடர்ந்திடும்.

வீடியோ, சாப்ட்வேர், சினிமா போன்ற அதிக அளவு உடைய கோப்புகளை  டவுன்லோட் செய்பவர்களுக்கு IDM பயனுள்ளதாக இருக்கும். 

Internet Download Manager மூலம் இணையவழியில் அதி வேகமாக கோப்புகளை டவுன்லோட் செய்திடலாம்.

சுருக்கமாக சொல்வதென்றால்

    • அதிக சைஸ் கொண்ட கோப்புகளை தொடர்ச்சியாக டவுன்லோட் செய்திடலாம்.
    • ஒரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கோப்புகளை டவுன்லோட் செய்திடலாம்.
    • பாதியில் தடைபட்டாலும், விட்ட இடத்திலிருந்து டவுன்லோடை தொடங்கிடலாம். 
    • குறுகிய நேரத்தில் டவுன்லோட் செய்து முடித்திடலாம். 

முடிவாக,

ப்ரீ இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர்சாப்ட்வேர் பயன்படுத்தி அதிகமான அளவுகொண்ட கோப்புகளை தரவிறக்கம் செய்வதோடு, அதற்கு ஆகும் நேரத்தை குறைக்கவும் செய்ய முடியும். அதே நேரத்தில் அதிக வேகமாவும் ஃபைல்கள் தரவிறங்கும். 

இது இலவசம் என்பதால் பலரும் பயன்படுத்துகின்றனர். கட்டணம் இல்லாமல் இதுபோன்ற பயனுள்ள “இலவச மென்பொருட்கள்” இணையத்தில் கிடைப்பது உண்மையிலேயே அதிர்ஷ்டம் தான்.

இலவச இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் தரவிறக்கச் சுட்டி :

Start Download  INTERNET Download Manager 
RELATED ARTICLES

Most Popular

Recent Comments