Tuesday, January 21, 2025
Homefree computer softwareகம்ப்யூட்டருக்குத் தேவையான அதிமுக்கியமான 22 இலவச மென்பொருட்கள் !

கம்ப்யூட்டருக்குத் தேவையான அதிமுக்கியமான 22 இலவச மென்பொருட்கள் !

கம்ப்யூட்டருக்குத் தேவையான மென்பொருட்கள்:

விண்டோஸ் கம்ப்யூட்டர் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது நமக்குத் தெரியும். புதியதாக வாங்கிய கம்ப்யூட்டர் அல்லது பார்மேட் செய்யப்பட்ட கம்ப்யூட்டருக்கு என்னென்ன மென்பொருட்கள் அவசியம் தேவை என்பதில் சில நேரம் குழப்பம் ஏற்படலாம்.

அதை தீர்த்து வைக்கிறது இப்பதிவு. இதில் கம்ப்யூட்டருக்குத் அவசியம் தேவைப்படும் 22 மென்பொருட்கள் பட்டியிடப்பட்டுள்ளன.

avasiyam irukka vendiya menporul 22

நிச்சயம் அவைகள் உங்களுக்கு எந்த குழப்பத்தையும் ஏற்படுத்தாது, உங்களுக்கு வேண்டிய மென்பொருட்களை “இன்ஸ்டால்” செய்திட உதவியாக இருக்கும். விண்டோஸ் கம்ப்யூட்டர்களில் 95% மிகவும் பயனுள்ள மென்பொருட்களை இங்கு குறிப்பிட்டிருக்கிறேன்.

சிறந்த ஆன்ட்டி வைரஸ்:

அச்சுறுத்தும் மால்வேர், த்ரோஜன், ஸ்பைவேர் போன்ற தீங்கிழைக்கும் புரோகிராம்களிலிருந்து கம்ப்யூட்டருக்கு கட்டாயம் பாதுகாப்பு தேவை. அதற்கு உதவுபவை ஆன்ட்டி வைரஸ் மென்பொருட்கள்.

இது மட்டுமல்லாமல் விண்டோசில் இன்பில்ட்டாக கிடைக்கும் Microsoft Security Essentials பயன்படுத்தலாம். 
வி.எல்.சி. மீடியா பிளேயர்

கம்ப்யூட்டரில் நாம் செய்யும் முக்கியமான விஷயங்கள் பாடல் கேட்பது, வீடியோ பார்ப்பது. அதற்கு நல்ல “மீடியா பிளேயர்” தேவை. அந்த வகையில் VLC Media Player இரண்டாம் இடத்தைப் பிடிக்கிறது.

ரெஜிஸ்ட்ரி கிளீனர் / ட்யூன்அப் அட்டிலிட்டிஸ்

கம்ப்யூட்டர் வேகமாக, மென்மையாக செயல்பட ரெஜிஸ்ட்ரி எர்ர்ரர், ஜங்க் ஃபைல்கள் நீக்கவேண்டும். அதற்கு உதவுபவை ரெஜிஸ்ட்ரி கிளீனர் / ட்யூன்அப் அட்டிலிட்டிஸ் மென்பொருட்கள்.

Tuneup Utilities, Uniblue Power Suite or Ccleaner போன்றவை அந்த வேலைகளை செய்யும் மென்பொருட்கள். இதில் Tuneup Utilities மென்பொருள் மூன்றில் சிறந்ததாக இருக்கும்.

நீங்கள் கம்ப்யூட்டர் ஸ்டார்ட் செய்த பிறகு இதில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தினால் கட்டாயம் உங்கள் கம்ப்யூட்டர் அதி வேகமாக செயல்படும்.
அதற்கு நான் உறுதி அளிக்கிறேன்.

இமேஜ் பர்னர்:

CD அல்லது DVD பதிவு செய்ய கட்டாயம் “இமேஜ் பர்னர்” தேவை. இதற்கு Nero சாப்ட்வேர் சரியான தேர்வாக இருக்கும். ஆனால் இது கட்டணம் செலுத்தி பெற வேண்டியதிருக்கும். அதற்கு பதிலாக இலவசமாக கிடைக்க கூடிய Img Burner பயன்படுத்தலாம்.

ஃபயர்பாக்ஸ் மற்றும் கூகிள் குரோம்

தற்பொழுது மிக பிரபலமாக இருக்கும் பிரௌசர்கள் இவைகள். இவற்றை ஏதேனும் ஒன்றை பிரௌசிங் செய்ய பயன்படுத்திடலாம். இரண்டையும் இன்ஸ்டால் செய்து வைத்துக்கொண்டாலும் பிரச்னை ஏதும் இல்லை. ஏதாவது பிரச்னையால் ஒன்று செயல்படாத பொழுது

வெவ்வேறு தேவைகளுக்கு ஃபயர்பாக்ஸ் பயன்படுத்திடலாம். வேகம் மற்றும் துரிதத்திற்கு கூகிள் குரோம் பயன்படுத்திடலாம்.

எம்.எஸ். ஆபிஸ் / ஓபன் ஆபிஸ்

எம்.எஸ்.ஆபிஸ் இல்லாமல் கம்ப்யூட்டரை நினைத்துக் கூட பார்க்க முடியாது. வணிக, வேலை ரீதியாக பயன்படும் புரோகிராம். மாணவர்கள் மற்றும் வணிகர்கள் (Business Man) க்கு பயன்படும் புரோகிராம் இது. MS-Office இலவசமாக கிடைக்காது. அதற்கு மாற்றாக Open Office ஐ பயன்படுத்திடலாம்.

அடோபி ரீடர்

இ-புக்ஸ், பிடிஎப் ஃபைல்களை படிக்க உதவுவது Adobe Reader. கட்டாயம் கம்ப்யூட்டரில் இருக்க வேண்டிய மென்பொருள்.

7சிப்

ஆவண காப்பகங்களை கையாள பயன்படும் ஓப்பன் சோர்ஸ் பயன்பாடு இது. 7z, ZIP, GZIP, BZIP2 and TAR போன்ற சுருக்கப்பட்ட கோப்புகளை விரித்திட பயன்படும் மென்பொருட்கள். ஃபைல்கள் Zip வடிவில் சுருக்கவும் இவை பயன்படும்.

இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர்

கம்ப்யூட்டரில் கட்டாயம் இருக்க வேண்டிய மென்பொருள் IDM. இது 5 மடங்கு டவுன்லோட் வேகத்தை அதிகரித்துக் கொடுக்கிறது.

யுடொரண்ட்

அதிகமான அளவுடைய மென்பொருட்களை டவுன்லோட் செய்திட உதவும் மென்பொருள் யுடொரண்ட்

ரெவோ அன்இன்ஸ்டாலர்

விண்டோசில் உள்ள Add/Remove புரோகிராமைவிட துரிதமாக செயல்படக்கூடியது Revo Uninstaller இது. அன்-இன்ஸ்டால் செய்வதற்கு முன்பும், பின்பும் ஸ்கேன் செய்து மென்பொருளை முற்றிலும் நீக்குகிறது.

அடோபி பிளாஸ் பிளேயர்

கம்ப்யூட்டரில் Flash Video வை பார்க்க பயன்படும் மென்பொருள் Adobe Flash Player. 

மல்வேர்பைட்ஸ்

தீங்கு தரும் ஃபைல்கள் மற்றும் பாதிக்கப்பட்ட ஃபைல்களை கண்டறிந்து நீக்குவதற்கு உதவும் புரோகிராம் Malware Bites.

சோன் அலாரம் ஃபயர்வால்

இது ஃபயர்வால் செக்யூரிட்டி புரோகிராம். ஆபத்தான இணையதளங்கள் மற்றும் டவுன்லோட்கள் போன்றவற்றை அறிய தரும் புரோகிராம். Two way firewall வசதியுடன் வெளிவந்துள்ள இந்த புரோகிராம் அவட்கோயிங் – இன்கமிங் டிராபிக்கை டிராக் செய்து கொடுக்கக் கூடியது.

டீம் வியூவர்

ரிமோட் டெஸ்க்டாப் வியூவிங் மென்பொருள் இது. இதன் மூலம் உங்களுடைய டெஸ்க்டாப்பை உலகில் எந்த ஒருவருடனும் Share செய்துகொள்ளலாம்.

நோட்பேட் ++

இது இலவசமானது. புரோகிராம் லாங்குவேஜ்களை எழுதிட உதவும் Text Editor.

கீ ஸ்கிராம்பளர்

கீ ஸ்கிராம்ளர் மென்பொருள் உங்கள் கம்ப்யூட்டரில் கீலாகர் புரோகிராம்கள் உங்கள் தகவல்கள் (Passwords) திருடாமல் இருக்க அவற்றை என்கிரிப்சன் செய்திடுகிறது. கிலாகர் என்பொருள் உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கிறதா என நீங்கள் எப்பொழுதும் கண்காணித்துக் கொண்டிருக்க முடியாது. இந்த மென்பொருள் கிலாகர் திருட்டிலிருந்து உங்கள் நம்பகமாக பாஸ்வேர்ட்களை பாதுகாக்கிறது Keyscrambler.

ஃபைல் ஓபனர்

File Opener புரோகிராம் உங்களிடம் இல்லாத 10 வகையான ஃபைல்களை திறந்திட பயன்படுகிறது. உதாரணமாக உங்களிடம் PDF ரீடர் இல்லை என்றால், அதை திறந்து படித்திட முடியாது. அந்நிலையில் இந்த மென்பொருளைப் பயன்படுத்தி PDF பைலை படித்திடலாம்.

விம்வேர் ஒர்க்ஸ்டேசன்

இது ஒரு அபிரிதமான பயன்பாடு கொண்ட மென்பொருள். உங்களிடம் விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் இருந்தால், அதை அன் இன்ஸ்டால் செய்யாமலேயே ( Boot ) அப்படியே  வேறொரு ஆபரேட்டிங் சிஸ்டம் ( விண்டோஸ் 10, Linux) இன்ஸ்டால் செய்திட உதவிடும் மென்பொருள்.

Download VM Workstation

டீப் ப்ரீசி

சந்தேகத்திற்கு இடமான ஒரு மென்பொருளை கட்டாயம் உபயோகப்படுத்தியே தீர வேண்டும் என்ற சூழ்நிலையில் அதை பயன்படுத்திடும்பொழுது அதனால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் கூட,  முன்பு இருந்த நிலைக்கு அப்படியே கொண்டு வர  இந்த மென்பொருள் உதவுகிறது.

Download Deep Freeze

சைபர் ஹோஸ்ட் விபிஎன் CYBERGHOST VPN

முக்கியமாக நீங்கள் பார்க்க வேண்டிய இணையதளங்கள் உங்களை (IP) தடை செய்திருந்தால், அவற்றை பார்த்திட CYBERGHOST VPN பயன்படுகிறது. பல மென்பொருட்கள் இருப்பினும் “சைபர் ஹோஸ்ட் விபிஎன்” மென்பொருளை போல உங்கள் கம்ப்யூட்டருக்கு முழுமையான பாதுகாப்பினை அளிப்பதில்லை. மற்றவைகள் பிரௌசர் அளவில் மட்டும் தடுப்பினை மேற்கொள்கின்றன. சைப்ர் ஹோஸ்ட் விபிஎன் கம்ப்யூட்டருக்கு முழுமையான பாதுகாப்பினை வழங்குகிறது.

Download CYBERGHOST VPN

Tags: Free Computer Software, Most Popular Software , 22 Free Software for Personal Computer.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments