Monday, December 23, 2024
Homedocument to pdfஇணையதள பக்கங்களை பிடிஎப் ஆக மாற்ற

இணையதள பக்கங்களை பிடிஎப் ஆக மாற்ற

நீங்கள் விரும்பும் இணையதளப் பக்கங்களை (Web Page) ஒரே கிளிக்கில் PDF ஃபைலாக சேமிக்க உதவுகிறது ஒரு இணையதளம். உங்களுக்குப் பிடித்தமான கட்டுரைகள் அடங்கிய ஒரு வலைத்தளப் பக்கத்தை PDF வடிவில் சேமித்து பிறகு நேரம் இருக்கும்போது அதை படித்திடலாம்.

online webpage pdf converter

இதனால் உங்களுடைய இணைய உலாவல் நேரம் (Browsing Time), இணைய பயன்பாடு (Internet Usage) ஆகியவற்றை குறைக்கலாம்.

முகவரி : Online-Convert

இந்த இணையதளத்திற்கு சென்று, உங்களுக்கு PDF ஆக மாற்ற வேண்டிய இணைய பக்கத்தின் URL கொடுத்து, எந்த மொழியில் மாற்ற வேண்டும் என்பதை தேர்ந்தெடுத்து Convert கொடுத்தால் போதுமானது.

இவ்விணையதளத்தில் Tamil உட்பட பல பிராந்திய மொழிகளில் PDF File உருவாக்கிட முடியும் என்பது தனிச்சிறப்பு.

url to pdf online convert

ஒரு சில வினாடிகளில் உங்களுக்கு PDF ஃபைல் தயாராகி டவுன்லோட் ஆகிவிடும்.

மேலும் இதில் உள்ள Converter வசதிகள்:

  • Audio converter
  • Video converter
  • Image converter
  • Document converter
  • Ebook converter
  • Archive converter

இந்த இணையதளத்தின் மூலம் அனைத்துவிதமான ஃபைல்களையும், அதன் தொடர்புடைய Format க்கு “கன்வர்ட்” செய்துகொள்ளலாம். ஒரே இணையதளத்தில் இத்தனை வசதிகளும் கிடைப்பதால் நிச்சயமாக இது ஒரு பயனுள்ள இணையதளம் என்பதில் சந்தேகமில்லை.

இப்பதவு உங்களுக்கு பிடித்திருந்தால் பேஸ்புக், ட்விட்டர்,கூகிள் ப்ளஸ் போன்ற சமூக இணையத்தளங்களில் “ஷேர்” செய்ய மறக்காதீர்கள். 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments