வீடியோ எஃபக்ட், ஆடியோ எஃபக்ட் போன்வைகளை கொடுத்திடவும், வீடியோ – ஆடியோ வெட்டி ஒட்டவும் பயன்படுகிறது. இது User Friendly சாப்ட்வேர். அதனால் பயன்படுத்துவது எளிது. யார் வேண்டுமானாலும் இதைப் பயன்படுத்தலாம்.
Image Credit : Camstasia
ஸ்கிரீன் ரெக்கார்டிங் – Screen Recording
கம்ப்யூட்டர், மொபைல் திரைகளில் நீங்களில் செய்யும் செயல்கள் அனைத்தையும் வீடியோ வடிவில் ரெக்கார்ட் செய்யலாம். அதாவது திரையில் நிகழ்பவற்றை அப்படியே வீடியோவாக பதிவு செய்தல் ஸ்கிரீன் ரெக்கார்டிங்.
வீடியோ எடிட்டிங் – Video Editing
ஸ்கிரீன் ரெக்கார்டிங் மூலம் உருவாக்கிய வீடியோவை எடிட் செய்தல். தேவையற்ற பகுதிகளை நீக்குவது, ஆடியோ சேர்ப்பது போன்ற வேலைகள் இதில் உள்ளடங்கும். வீடியோ கேமிரா, மொபைல் கேமிரா மூலம் எடுக்கப்பட்ட வீடியோக்களையும் இதில் திறந்து “வீடியோ எடிட்” செய்திடலாம்.
Camtasia கட்டண மென்பொருள்:
இலவச மென்பொருள் 30 நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்திட முடியும். இதிலுள்ள அனைத்து வசதிகளையும் பெற வேண்டுமானால் கட்டணம் செலுத்தி பெற வேண்டும்.
காம்டாசியா எப்படி பயன்படுத்துவது? (வீடியோ)
கேம்டாசியா இலவசமாக டவுன்லோட் செய்ய சுட்டி: