Monday, December 23, 2024
Homeandroid appஇந்த ஆப் மட்டும் இருந்தால் உங்களுடைய போன் பாதுகாப்பாக இருக்கும் !

இந்த ஆப் மட்டும் இருந்தால் உங்களுடைய போன் பாதுகாப்பாக இருக்கும் !

இணையம் பயன்படுத்தும் ஒவ்வொரு சாதனத்திற்கும் கட்டாயம் பாதுகாப்பு அப்ளிகேஷன்கள் தேவைப்படுகிறது. அதுவும் உலகில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் ஆண்ட்ராய்ட் போனிற்கு பாதுகாப்பு கட்டாயம் தேவைப்படுகிறது.  இணையத்தின் வழி ஊடுருவும் “மால்சியஸ்” “வைரஸ்” போன்ற கேடுதரும் புரோகிராம்களால் அவைகள் சரி வர இயங்காமல் போகலாம்.

10 security apps for android phone

முக்கியமான தகவல்கள் அதிலிருந்து திருடபடலாம். இதுபோன்ற தீங்கிழைக்கும் புரோகிராம்களை கண்டறிந்து நீக்குவதற்கு “Android Security Apps” கள் நிறைய உண்டு. அவற்றில் மிக முக்கியமான “டாப் 10” ஆன்ட்ராய்ட் மொபைல் “செக்யூரிட்டி ஆப்ஸ்கள்” இங்கு வழங்கப்பட்டுள்ளன.

1. Systweak Anti-Malware App:

யூசர் ப்ரண்ட்லி அப்ளிகேஷனான ‘சிஸ்ட்வீக் ஆன்ட்டி மால்வேர்’ ஆன்ட்ராய்ட் போன், டேப்ளட் போன்ற சாதனங்களுக்கு மால்வேர் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பு அளித்து அவற்றை நீக்குகிறது. எனவே “Malware” பற்றி இனி அதிகம் கவலைகொள்ள தேவையில்லை. இதில் உள்ள “Real Time Protection” மால்வேர் தாக்குதலுக்கு எதிராக செயல்பட்டு அவற்றை நீக்கி, பயனர்களுக்கு மகழ்ச்சியான தருணத்தை கொடுக்கிறது.

டவுன்லோட் செய்ய சுட்டி: Get it ON google Play

2. Norton Security and Anti-virus

நோர்டன் செக்யூரிட்டி ஆன்ட்டிவைரஸ் உங்களுடைய சாதனத்திற்கு வைரஸ் பாதுகாப்பினை வழங்குகிறது. உங்களுடைய சாதனத்தை தீங்கு செய்து பாதிக்கும் “மால்வேர், மால்சியஸ், வைரஸ்” போன்ற புரோகிராம்களை கண்டறிய முழு சாதனத்தையும் “Scan” செய்கிறது. ஒருவேளை உங்கள் மொபைல் போன் திருடு போனால், அதை லாக் செய்திடும் வசதியை இது வழங்குகிறது. இது உங்களுடைய தகவல்களை பெற்று அனுப்பும் மோசமான அப்ளிகேஷன்களை கண்டறியும் செயல்திறனுடைய அணுகுமுறையை பின்பற்றுகிறது.

டவுன்லோட் செய்ய சுட்டி: Get the App Here

3. Avast Mobile Security

நம்பகத்தன்மை உடைய ஒரு அற்புதமான செக்யூரிட்டு மென்பொருள் இது. உங்கள் சாதனத்தை பாதிக்கும் மால்சியஸ், வைரஸ் உள்ளடக்கிய மென்பொருள் (ஃபைல்) ஏதேனும் டவுன்லோட் செய்தால் உடனே அதை உங்களுக்கு தெரிவித்து, அதை தடுக்கிறது.

Get the app here

மேலும் சில முக்கியமான ஆன்ட்ராய்ட் பாதுகாப்பு அப்ளிகேஷன்கள்

4. CM Security antivirus
5. 360 Security
6. AVG Antivirus
7. Bitdefender Antivirus
8. ESET Mobile Security
9. Avira Antivirus Security
10. Trust Go Antivirus and Mobile security

இதுபோன்று “ஆன்ட்ராய்ட் செக்யூரிட்டி” ஆப்ஸ்கள் ஒவ்வொன்றும் தனித்தனி சிறப்பம்சங்களுடன் உள்ளன. இவற்றில் உங்களுக்கு விருப்பமான Security App – ஐ டவுன்லோட் செய்து உங்களுடைய ஆன்ட்ராய்ட், டேப்ளட் சாதனங்களுக்கு தேவையான பாதுகாப்பினை மேற்கொள்ளலாம். 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments