விளையாட்டு விதி என்வென்றால், ஒரு பூச்சியை உங்கள் மொபைலில் இருந்து வெளியேறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அங்கும் இங்கும் ஓடும் பூச்சிக்கு முன்னதாக ஒரு கோட்டை வரைகையில், அது வேறு திசை நோக்கி நகர்கிறது. இவ்வளவு தான் விளையாட்டு விதி.
இந்த எளிமையான விளையாட்டில் சவால் என்ன இருக்க முடியும் என்றும் நினைத்தால் ஸ்கோரில் 10 த்தை தாண்டுவது பெரும் பாடாக இருக்கிறது. விளையாட்டில் அவ்வப்போது கிடைக்கும் முட்டைகளை சேகரத்திதால் PowerUp கிடைக்கும். அதனை பயன்படுத்தியே அதிக ஸ்கோர் எடுக்க முடிகிறது.
குறைந்த ஸ்கோர் எடுத்து விளையாட்டில் தோற்றால் அந்த பூச்சி நம்மை பார்த்து சிரிப்பது கடுப்பேற்றுகிறது.
எவ்வளவு நேரம் அந்த பூச்சியை நாம் தொந்தரவு செய்கிறோமோ, அதாவது எவ்வளவு அதிக ஸ்கோர் செய்கிறோமோ அதற்கேற்றார் போல அந்த பூச்சியின் செயல்களும் மாறுவது சுவாரசியமாக உள்ளது.
மற்றபடி பெரிய அளவிலான ஸ்டேஜ்கள் எதுவும் இல்லாமல் பொழுது போக்க சவாலான விளையாட்டு இந்த “Stop the Bug”. தற்போது ஆண்டுராய்டு போன்களுக்கு மட்டுமேயான இந்த விளையாட்டை Google Play Store இன் search bar இல் “stopthebug” என்று இடைவிடாமல் டைப் செய்து தேடினால் கிடைக்கும்.
அல்லது இந்த லிங்க் சென்று இலகுவாக பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.