கூகிள் ப்ளே ஸ்டோரில் பல லட்சக்கணக்கான செயலிகள் இடம்பெற்றுள்ளன. அவற்றை ஆன்ட்ராய்ட் போனில் “இன்ஸ்டால்” செய்து மட்டுமே பயன்படுத்த முடியும்.
தற்பொழுது ஆப்சை “இன்ஸ்டால் செய்யாமல்” முன்னோட்டம் பார்க்கும் “Try Now” என்ற வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
image credit: hacker news
“Android Instant App” மூலம் இந்த வசதி உருவாக்கப்பட்டுள்ளது.
மொபைல் விளையாட்டுகளுக்கு “Trailer” மற்றும் “Game Play Screen Shot” ம் சேர்க்கப்பட்டுள்ளது.
மொபைல் விளையாட்டுகளுக்கான பிரிமியம், பணம் செலுத்தும் வசதி தனிப் பகுதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“கூகிள் ஆப் ட்ரை நவ்” வசதியில் அதிகளவு ஆப்ஸ்கள் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.