Monday, December 23, 2024
Homecomputer tipsகம்ப்யூட்டர் டிப்ஸ் தமிழில்

கம்ப்யூட்டர் டிப்ஸ் தமிழில்

கம்ப்யூட்டர் அப்படிங்கிற ஒரு விஷயம் இப்போ எல்லோர் வீட்லயும் இருக்கு. இப்போ இருக்கிற பசங்க சாதாரணமாவே கெத்து காட்டுவாங்க. இந்த விஷயத்துல சும்மா இருப்பாங்களா? “மௌஸ்” தொடாமலேயே கீபோர்ட் ஷார்ட்கட்ஸ் வச்சி கம்ப்யூட்டரை தெறிக்க விடறாங்க. அப்படிப்பட்ட முக்கியமான சில “Computer Keyboard Shortcuts” இதோ…

tamilil computer tips

கம்ப்யூட்டர் ஷார்ட்-கட்ஸ்

    • ஒரு டெக்ஸ்ட் பைல்ல தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைய “ஹைபர் லிங்க்” ஆக்கணும்னா Ctrl+ Kஅழுத்தினால் போதும்.
    • Shift+ F3 அழுத்தி எழுத்துக்களை “Small to CAPS” “CAPS to Small” க்கு மாத்தலாம்.
    • Windows+ L அழுத்தி கணினியை Log செய்து வைக்கலாம்.
    • விண்டோஸ் கீயை அழுத்தி U இரண்டு முறை அழுத்தினால் ‘கம்ப்யூட்டர் ஆப்’ ஆகும்.
    • F7 அழுத்தி டெக்ஸ்ட் டாகுமெண்டில் உள்ள தவறுகளை கண்டுபிடிக்கலாம்.
    • Ctrl+Shift+Esc அழுத்தி “டாஸ்க் மேனேஜர்” திறக்கலாம்.
    • இணைய பக்கங்களை புக்மார்க் செய்ய Ctrl+ D அழுத்தினால் போதும்.
    • பிரௌசரில் ஒரு Tab லிருந்து அடுத்த TAB க்குச் செல்ல Ctrl+ Tab.
    • Alt+Print Screen அழுத்தினால் ஸ்கிரீன் காப்பி ஆகும்.
    • Alt + Tab அழுத்தினால் ஒரு விண்டோவிலிருந்து அடுத்த விண்டோவிற்கு செல்ல முடியும்.

    கம்ப்யூட்டர் பாகங்கள்:

    கம்ப்யூட்டரில் உள்ள பாகங்கள் பற்றித் தெரிந்துகொண்டால் அவசரத்திற்கு ஏதேனும் பிரச்னை என்றால் உடனடியாக நம்மால் முடிந்த அளவிற்கு அதை சரிசெய்திட முடியும். வெளியே தெரியும் மௌஸ், கீபோர்ட், ஸ்கிரீன் மட்டுமில்லாமல், CPU க்குள் இருக்கும் சில பாகங்கள் பற்றி அறிந்துகொள்வது அவசியமாகிறது.

    Mother Board, RAM, Processor, SMPS, Hard Disk, DVD போன்றவை அதில் இருக்கும் சில முக்கியமான பாகங்கள். இதைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள “கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் புத்தகம்” உதவும். 

    அப்புறம் கணினி எப்படி உருவானது? அதனோட வரலாறு என்ன? இதையெல்லாம் தெரிந்துகொண்டால் அதைப் பற்றிய புரிதல், இன்றைய கம்ப்யூட்டர் எத்தனை நிலைகளை கடந்து வந்திருக்கிறது என்பதையும் தெரிந்துகொள்ளலாம். இதனால் கம்ப்யூட்டர் எப்படி வேலை செய்கிறது என்ற புரிதல் உண்டாகும்.

    கம்ப்யூட்டர் எப்படி செயல்படுகிறது?

    ஒரு கம்ப்ட்டர் பூஜ்யம், ஒன்று ஆகிய எண்கள் அடங்கிய பைனரி எண்களைக் கொண்டுதான் செயல்படுகிறது. அதற்கு ஆங்கிலமோ, தமிழோ அல்லது வேறு எந்த மொழியோ புரியாது.

    இருப்பினும், ஒரு கணிப்பொறிரயை எந்தத் துறையிலும் பயன்படுத்த முடியுமா?

    என்று வியக்க வைக்கும் அளவிற்கு நம் அன்றாட வாழ்க்கையில் கணிப்பொறி பயன்பட்டு வருவதை நாம் அறிவோம்.

    உதாரணத்திற்கு நாம் தினமும் படிக்கும் பத்திரிகையில் இருந்து விண்ணில் செலுத்தும் செயற்கைக் கோள் வரை கணிப்பொறி பயன்படுத்தப்படுகிறது.

    ஆனால் எந்தத் துறையில் பயன்படுத்தினாலும் சரி, அந்தத்துறைக்குத் தேவையான தகவல்களை அதாவது டேட்டாவை எண்களாகத்தான் சேமிக்க வேண்டும்.

    கணிப்பொறியை ஒரு கணிப்பானாக (Calculator) நாம் பயன்படுத்தும் பொழுது எந்தத் சிக்கலும் ஏற்படாது.

    ஏனென்றால் அதற்குத் தேவையான தகவல்கள் எண்கள் தான். அதே கணிப்பொறியை நாம் அச்சுத்துறைக்குப் பயன்படுத்தும் பொழுது நாம் பேசும் ஒரு மொழியின் எழுத்துக்களைத்தான் பயன்படுத்திச் சேமிக்க வேண்டும் அல்லவா!

    அதனால் ஒரு கணிப்பொறி செயல்பாட்டுத் தேவையின்படி நாம் ஒவ்வொரு எழுத்தையும் ஒவ்வொரு எண்ணாக மாற்றித்தான் சேமிக்கவேண்டும்.

    ஒரு மொழியை நாம் கணிப்பொறியில் பயன்படுத்த வேண்டுமென்றால் அந்த மொழியின் ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு எண்ணை நிர்ணயிக்க வேண்டும். இவ்வாறு நிர்ணயிக்கும் முறையை நாம் “குறியீட்டு முறை” (Character Encoding) என்று அழைக்கிறோம்.

    நாம் இந்த குறியீட்டு முறையைப் பயன்படுத்தி ஒரு புத்தகத்தின் பக்கங்களைச் சேமித்துவிடுகிறோம் என்று வைத்துக்கொள்வோம்.

    பிறகு அதை நாம் அச்சிட்டோர் அல்லது கணிப்பொறி திரையிலோ பார்க்க விரும்பும் பொழுது அந்த எண்ணை எழுத்துக்களாக மாற்றித்தானே பார்க்கவேண்டும்.

    இதற்காக கணிப்பொறியில் எழுத்துரு (Font) என்ற ஃபைல் பயன்படுத்தப்படுகிறது. இந்த எழுத்துரு ஒவ்வொரு எண்ணுக்கும் என்ன வடிவம் என்பதை குறிப்பிட்டு விடும்.

    ஆங்கில மொழிக்கு “ஆஸ்கி” ASCII (American Standard Code For Information Interchange) அல்லது அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட விண்டோஸ் ஆன்ஸி என்ற குறியீட்டு முறையைப் பயன்படுத்துகிறார்கள்.

    தமிழில் ஒவ்வொரு மென்பொருள் எழுத்துரு தனியார் தயாரிப்பாளரும் ஒவ்வொரு குறியீட்டு முறையைப் பயன்படுத்தி வந்தார்கள்.

    இதனால் ஒரு எழுத்துரு குறியீட்டு முறையைப் பயன்படுத்திச் சேமித்த தகவல்களை மற்றொரு எழுத்துரு குறியீட்டு முறையைப் பயன்படுத்தும் மென் பொருளால் அறிய முடியாத நிலை நிலவியது.

    மேலும் புனேயில் உள்ள சி-டாக் நிறுவனம் பல்வேறு அறிவியல் அறிஞர்களின் கூட்டுடன் இஸ்கி (Indian Standard Code for Information Interchange-ISCII) என்ற குறியீட்டு முறையை அறிமுகப்படுத்தியது.

    இந்த இஸ்கி முறையானது இந்தியாவில் மொழிகள் அனைத்திற்கும் பொதுவனாதாகும் இந்திய மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் மாவட்ட ஆட்சி மையங்களில் புகழ்பெற்ற அளவுக்குப் பொதுமக்களிடம் இக்குறியீடு புகழ்பெறாததால் தோல்வியைத் தழுவியது.

    இந்த நிலையை மாற்றிட, ஆங்கிலம் போல் தமிழிலும் எல்லோரும் ஒரே குறியீட்டு முறையை பயன்படுத்த வேண்டும்.

    சென்னையில் 1999-ஆம் ஆண்டு பிப்ரவரி 7-8 தேதிகளில் நடைபெற்ற உலகத்தமிழிணைய மாநாட்டில் தமிழக அரசு இதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொண்டு சர்வதேச அங்கீகாரம் பெற்ற பொதுவான ஆஸ்கி குறியீட்டு முறையை அறிவித்தது.

    தற்போது யுனிகோட் சக்தி வாய்ந்த சர்வதேச குறியீட்டு முறையாக மாறியுள்ளது.

    Search Terms :

    RELATED ARTICLES

    Most Popular

    Recent Comments