Monday, December 23, 2024
HomeMobile app developmentமொபைல் அப்ளிகேஷன் டவலப்மெண்ட் படித்தால் வேலை

மொபைல் அப்ளிகேஷன் டவலப்மெண்ட் படித்தால் வேலை

மொபைல் அப்ளிகேஷன் டவலப்மெண்டு கோர்ஸ் படித்தால் வேலை வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. இன்று உலகம் முழுவதும் சுமார் 800 கோடி மொபைல் போன்கள் பயன்படுத்தபடுகின்றன. உலக மக்கள் தொகையில் 90 சதவிகிதம் இது.  இந்தியாவில் மட்டும் சுமார் 113 கோடி மொபைல்கள் பயன்பாட்டில் உள்ளன.

2017 மே புள்ளி விவரப்படி இணையத்துடன் கூடிய மொபைல் பயன்பாட்டின் எண்ணிக்கை 50 கோடி. ஒவ்வொரு மொபைல் பயனரும் தங்கள் மொபைல் போனில் சுமார் 30 அப்ளிகேஷன்கள் வைத்துள்ளனர்.

mobile app development course

ஒவ்வொருவரும் மாதம் ஒரு முறை 8 பழைய அப்ளிகேஷன்களை நீக்கிவிட்டு, புதிய 7 அப்ளிகேஷன்களை மொபைல் போனில் நிறுவிக்கொள்கின்றனர். இத்துறையில் உலக அளவில் 14 ஆயிரம் கோடி புழங்கி வருகிறது என்றால் இதன் அசுர வளர்ச்சியை நாம் புரிந்துகொள்ள முடியும்.

இந்தியாவில் மொபைல் போன் பயன்படுத்தாத எஞ்சிய 23 கோடி பேருக்கும் சிம்கார்டு விற்பதில் தொலைத்தொடர்பு நிறுவனங்களும், 83 கோடி பேருக்கு ஸ்மார்ட் போனை விற்பதில் மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்களும் போட்டியிட்டு வருகின்றன.

பொதுவாக, இந்தியாவில் கர்நாடகா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், பிகார் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் மொபைல் அப்ளிகேசன் டெவலப்பர், மொபைல் வெப் டெவலப்பர், Cloud-based Technology கோர்ஸில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர். 

இந்தியாவில், Simplilearn, Edureka, Koenig, Manipal Global, UpGrade ஆகிய கல்வி நிறுவனங்கள் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து மொபைல் டெவலப்பர் கோர்ஸ்களை நடத்துகின்றன. நிகழாண்டில், 40-க்கும் அதிகமான தனியார் மற்றும் மாநில தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள் ‘Android Fundamental கோர்ஸை தங்களது நிறுவனங்களில் முழுநேர நிரந்தர பாடத்திட்டமாகக் கற்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய நிலையில் இந்தியாவில் நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் மொபைல் அப்ளிகேசன் டெவலப்பர் கோர்ஸை நடத்திவந்தாலும், Mobignosis, Learnfly, Geniusport, Geek Mentors, Bharti Vidyapeeth Deemed University  ஆகிய 5 நிறுவனங்கள் முன்னிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

பெங்களூரைச் சேர்ந்த மொபிக்னோசிஸ் நிறுவனத்தில், App development for iPhone, Android, Windows mobile, Mobile App Testing, HTML5, jQuery mobile, CSS3, Phone Gap, Xamarin, Titanium, Sencha, UX Design course for Web and Mobile  ஆகியன கற்றுத் தரப்படுகின்றன.   தில்லியைச் சேர்ந்த லீர்ன்பிளை நிறுவனம் Android iOS development-ஐ கற்பிப்பதில் Expert என தெரிகிறது.

பெங்களூரைச் சேர்ந்த ஜீனியஸ்போர்ட் நிறுவனம் Android, iOS, Windows 8, HTML 5 ஆகிய  மொபைல் அப்ளிகேசனில் உயர்தர பயிற்சி அளிப்பதாக உள்ளது.

நொய்டாவில் உள்ள Android, iOS Application development, Mobile Game Development ஆகிய பாடத்திட்டங்களை வழங்கி வருகிறது. புணேவில் உள்ள பார்தி வித்யாபீத் பல்கலைக்கழகம் B.Sc., Mobile App Development 3 வருட பட்ட வகுப்பை நடத்துகிறது. கட்டணம் ரூ. 2 லட்சத்திற்கும் அதிகம்.

கொச்சியில் உள்ள Sacred Heart college- BCA in Mobile Application and Cloud Technology  என்ற 3 வருட பட்ட படிப்புக்கான வகுப்பை நடத்துகிறது. கட்டணம் ரூ. 2.2 லட்சம்.  அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு யு.கே., ஜெர்மனி, நெதர்லாந்து, ஹங்கேரி, இந்தியா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளில் இயங்கிவரும் Virtusa ஐடி நிறுவனம் Rich Internet Application (RIA) and Mobile Apps Development Lab-ஐ அமைக்க சென்னை  சத்யபாமா பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. 

இங்கு மாணவர்களுக்கு வழங்கப்படும் மொபைல் அப்ளிகேசன் டெவலப்மென்ட் கோர்ஸில் உள்ள 5 நிலைகளில் முதல் 2 அடிப்படை நிலைகளை பல்கலைக்கழக ஆசிரியர்களும், எஞ்சியுள்ள மேம்பட்ட 3 நிலைகளை விர்சுசா நிறுவனமும் கற்பிக்கின்றன.

மொபைல் அப்ளிகேஷன் டெவலப்மென்ட் கோர்ஸ் பல இணையதளங்களில் இலவசமாகவும் கிடைக்கிறது. குறிப்பாக www.imad.tech  இணையதளம் வாயிலாக Introduction to Modern Application Development என்ற இலவச ஆன்லைன் கோர்ஸை IIT-M, Hasura ஆகியவை இணைந்து வழங்குகின்றன.

இந்தியாவில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் கற்றுத்தரப்படும் C and Java Programming அடிப்படை அளவில் மட்டுமே உள்ளதாகவும், இதைப் பயன்படுத்தி ஒருவர் அப்ளிகேசன் டெவலப்பர் ஆக முடியாது என்ற கருத்தும் உள்ளது.   பிளஸ் 2 முடித்தவர்கள் B.Sc., BCA  3 ஆண்டு மொபைல் டெவலப்பர் கோர்ஸில் சேரலாம். பி.எஸ்சி., கணினி அறிவியல், பொறியியல் படித்து இதில் அடிப்படை தெரிந்தவர்கள் 3 மாதம் தொடங்கி ஓராண்டு வரை உள்ள கிட்டத்தட்ட 8 வகையான சான்றிதழ் பயிற்சிகளில் சேரலாம்.

உரிய பயிற்சியை முடித்தவர்களுக்கு Software Engineer, Web Developer, Computer Programmer, Graphic Designer, Video Game Designer, Database Administrator, IT Security Specialist போன்ற பதவிகளில் நிறைய வேலைவாய்ப்புகள் உள்ளன. 

மொபைல் அப்ளிகேசன் டெவலப்பர், மொபைல் சாப்ட்வேர் இன்ஜினியர், ஐ போன், ஐ பேட், ஜாவா, ஆன்ட்ராய்ட், அப்ளிகேசன் டெவலப்பர்களுக்கு சர்வதேச அளவில் ஆண்டு ஊதியம் ரூ. 65 லட்சம். ஐஓஎஸ் இன்ஜினியர், சீனியர் ஐ போன் டெவலப்பர், சீனியர் ஆன்ட்ராய்ட் டெவலப்பர், லீட் ஜாவா டெவலப்பர், சீனியர் மொபைல் டெவலப்பருக்கு ஆண்டு ஊதியம் ரூ. 75 லட்சம். Javascript Jquery Developer-க்கு ஊதியம் ரூ. 85 லட்சம் வரை வழங்கப்படுகிறது. இதில், பட்டம் அல்லது சான்றிதழைக் காட்டிலும் படைப்பாற்றல் மிக்கவர்களின் ஊதியத்திற்கு எல்லையே இல்லை. 

– இரா.மகாதேவன்

நன்றி: தினமணி.

விக்கிபீடியாவில் Moble App Development பற்றி படிக்க

RELATED ARTICLES

Most Popular

Recent Comments