சிறிய ஃபைல் சைஸ், ஜூம் செய்யும் போது பிக்ஸல்கள் உடைபடுவது போன்ற தன்மைகள் கொண்ட போட்டோக்களை தரம் குறைவான (Low Quality) போட்டோ என்று சொல்கிறோம். இவற்றை தெளிவான போட்டோக்களாக மாற்றுவது போட்டோஷாப் போன்ற சாஃப்ட்வேர்களில் கில்லாடுகளுக்குக் கூட கஷ்டமான வேலை.
மொபைலில் என்றால் நம்மிடம் உள்ள மொக்கையான போட்டோவை என்னவெல்லாமோ செய்து கொஞ்சம் அழகாக மாற்றிப்பார்க்க சில அப்ளிகேஷன்கள் உண்டு. ஆனால், அதுவும் அவ்வளவு துல்லியமாக போட்டோவின் தரத்தை மேம்படுத்துவது இல்லை.
இந்த பிரச்னையை தீர்த்து வைக்க ஜெர்மனியில் உள்ள மேஸ் பிளாங்க் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் புதிய தொழில்நுட்பம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இதற்காக அவர்கள் EnhanceNet-PAT என்ற அல்காரிதம் (Algorithm) ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
மிகவும் பழைய போட்டோக்களைக் கூட ஸ்கேன் செய்து உயர்தரத்தில் மாற்ற நினைப்பவர்களுக்கு இந்த தொழில்நுட்பம் பயன்படும். பழைய திரைப்படங்களை 4K தரத்தில் மாற்ற இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும் முயற்சி மேற்கொண்டு வருகிறோம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நன்றி: தொழில்நுட்பம்.காம்.