Tuesday, December 24, 2024
Home108 avasaram android appஅவசரத்திற்கு உதவிடும் Call Ambulance ஆன்ட்ராய்ட் ஆப்

அவசரத்திற்கு உதவிடும் Call Ambulance ஆன்ட்ராய்ட் ஆப்

திடீரென ஏற்படும் விபத்துகளில் சிக்கியவர்களை மிக விரைவாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றிட பயன்படும் சேவை “ஆல்புலன்ஸ்” சேவை. ஆம்லன்ஸ் சேவையிலும் சில நேரங்களில் காலதாமதம் ஏற்படுவதுண்டு.

காரணம், விபத்து ஏற்பட்ட  இடத்திற்கு வந்தடைய சரியான பாதையை தெரிவு செய்வதில் ஏற்படும் குழப்பம் மற்றும் வழியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் போன்றவைகளை குறிப்பிடலாம்.

இதனால் விபத்தில் சிக்கியவர்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாமல் போய்விடுகிறது. சரியான நேரத்திற்கு கொண்டு செல்ல முடியாமல் போனால் உயிர் சேதம் அதிகரிக்க வாய்ப்பு உண்டு.

emergency android app

இது போன்ற சிக்கல்களைத் தவிர்த்திடவும், விபத்து ஏற்பட்ட இடத்திற்கு அருகாமையில் உள்ள அவசர ஊர்தியை அங்கு வரவழைத்திட உதவுபவை தான் Emergency Android App.

ஸ்மார்ட் போனில் இந்த ஆப் இன்ஸ்டால் செய்யப்பட்டிருந்தால் போதும். அதன் மூலம் மிக துரிதமாக,

1. விபத்து நடந்த பகுதி
2. அருகே இருக்கும் மருத்துவமனை
3. அங்கு தயாராக இருக்கும் மருத்துவர்கள்
4. இரத்த வழங்குநர் குழு

போன்ற பல தகவல்களை அறிந்துகொள்ளலாம். அந்த தகவல்களைக் கொண்டு உடனடியாக விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனை அழைத்துச் சென்று காப்பாற்றிவிடலாம்.

கால் ஆம்புலன்ஸ் ஆப் டவுன்லோட் செய்திட சுட்டி: 

“கால் ஆம்புலன்ஸ் ஆப்” எப்படி செயல்படுகிறது? (வீடியோ)


சமீபத்தில் தமிழக முதல்வர் Tamilnadu Ambulance, Fire, Police துறைகளை தொடர்புகொள்ள “Avasaram Emergency App” வெளியிட்டுள்ளார்.

அருகில் உள்ள 108 ஆம்புலன்சை அழைத்திட, ஃபயர்சர்வீசை தொடர்புகொள்ள, போலிசை தொடர்புகொள்ள இந்த ஆப் உதவும்.

அவசரம் ஆப் இன்ஸ்டால் செய்திட சுட்டி :

INSTALL AVASARAM 108 ANDROID APP

இந்த பதிவு நிச்சயமாக பயனுள்ளதாக இருக்கும் என நம்புகின்றேன். உங்களுக்கும் அப்படி தோன்றினால் உடனடியாக Facebook, Twitter, Google + போன்ற சமூக வலைத்தளங்களில் இந்த கட்டுரையை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments