காரணம், விபத்து ஏற்பட்ட இடத்திற்கு வந்தடைய சரியான பாதையை தெரிவு செய்வதில் ஏற்படும் குழப்பம் மற்றும் வழியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் போன்றவைகளை குறிப்பிடலாம்.
இதனால் விபத்தில் சிக்கியவர்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாமல் போய்விடுகிறது. சரியான நேரத்திற்கு கொண்டு செல்ல முடியாமல் போனால் உயிர் சேதம் அதிகரிக்க வாய்ப்பு உண்டு.
இது போன்ற சிக்கல்களைத் தவிர்த்திடவும், விபத்து ஏற்பட்ட இடத்திற்கு அருகாமையில் உள்ள அவசர ஊர்தியை அங்கு வரவழைத்திட உதவுபவை தான் Emergency Android App.
ஸ்மார்ட் போனில் இந்த ஆப் இன்ஸ்டால் செய்யப்பட்டிருந்தால் போதும். அதன் மூலம் மிக துரிதமாக,
1. விபத்து நடந்த பகுதி
2. அருகே இருக்கும் மருத்துவமனை
3. அங்கு தயாராக இருக்கும் மருத்துவர்கள்
4. இரத்த வழங்குநர் குழு
போன்ற பல தகவல்களை அறிந்துகொள்ளலாம். அந்த தகவல்களைக் கொண்டு உடனடியாக விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனை அழைத்துச் சென்று காப்பாற்றிவிடலாம்.
கால் ஆம்புலன்ஸ் ஆப் டவுன்லோட் செய்திட சுட்டி:
“கால் ஆம்புலன்ஸ் ஆப்” எப்படி செயல்படுகிறது? (வீடியோ)
சமீபத்தில் தமிழக முதல்வர் Tamilnadu Ambulance, Fire, Police துறைகளை தொடர்புகொள்ள “Avasaram Emergency App” வெளியிட்டுள்ளார்.
அருகில் உள்ள 108 ஆம்புலன்சை அழைத்திட, ஃபயர்சர்வீசை தொடர்புகொள்ள, போலிசை தொடர்புகொள்ள இந்த ஆப் உதவும்.
அவசரம் ஆப் இன்ஸ்டால் செய்திட சுட்டி :