Monday, December 23, 2024
Homeandroid appஆன்ட்ராய்டு டிவி - க்கான Twitter App அறிமுகமாகியது !

ஆன்ட்ராய்டு டிவி – க்கான Twitter App அறிமுகமாகியது !

ட்விட்டர் – உலக மக்கள் பலர் விரும்பி பயன்படுத்தும் சமூக வலைத்தளம். இதன் சிறப்பம்சமே “ட்விட்” செய்யப்படும் பதிவில் அதிக பட்சமாக 280 எழுத்துகள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

twitter android app for android tv

image credit: twitter.com

சொல்வன சுருங்கச் சொல் என்ற கூற்றுக் கேற்ப உருவாக்கப்பட்ட அற்புதமான Social Website இது. தொடங்கப்பட்ட ஆரம்பத்தில் 140 Charactor மட்டுமே அனுமதிக்கப்படிருந்தன.

140 கேரக்டர் என்ற TEXT மெசேஜ் கட்டுப்பாட்டை தளர்த்தி 280 ஆக உயர்த்தியது. கூடவே வீடியோ, படங்கள், GiF இமேஜ்களையும் ட்வீட்டில் சேர்க்கும் வசதி கொடுத்தது.

இதன் அடுத்த கட்டமாக, தற்பொழுது புகழ்பெற்று வரும்  “ANDROID TV” யில் Twitter பயன்படுத்திட “ட்விட்டர் ஆப்” அறிமுகம் செய்துள்ளது.

twitter app for android tv

image credit : android authority

ஆன்ட்ராய்ட் டிவி ட்விட்டர் ஆப் டவுன்லோட் செய்ய சுட்டி:

இதன் மூலம் ட்விட்டரில் அப்டேட் செய்யப்படும் தகவல்கள், அதன் வழியாக ஒளிப்பரப்படும் நேரடி வீடியோ ”  போன்றவற்றை உங்கள் வீட்டிலுள்ள ஆன்ட்ராய்ட் டி.வி. மூலம் பார்த்திடலாம்.

இதற்கு முன்பு ட்விட்டர் Apple TV,  Fire TV, மற்றும் Xbox One போன்றவற்றிற்கு ‘ஆப்’ வெளியிட்டிருந்தது  என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் ஃபாலோயர் QR கோட்

ட்விட்டரில் மற்றவர்கள் உங்களை தொடர Follow பட்டன் கொடுக்கப்பட்டிருந்தது. ஸ்மார்ட் போனில் அதை எளிமையாக்கி உள்ளது.

  மற்றவர்கள் ஃபாலோ செய்வதற்காக QR கோட் வசதியை ட்விட்டர் அறிமுகப்படுத்தியுள்ளது.

 Profile ==> Gear ==> QR Code என்ற வழியில் உங்களுக்கான QR Code -ஐ உருவாக்கிகொள்ள முடியும்.  அவ்வாறு உருவாக்கப்பட்ட கியூஆர் கோடை மற்றவர்கள்  ஸ்கேன் செய்து உங்களை  Follow செய்துகொள்ள முடியும்.

📢 hella pumped to announce the launch of QR codes on twitter! they work like snap codes!!

find yours: profile > gear > QR code pic.twitter.com/lvAr97bHj6

— brittany (@brittanyforks) November 16, 2016

மேலும் இதுபோன்ற “ட்விட்டர்” தகவல்களை தெரிந்துகொள்ள எங்களது முகநூல் பக்கத்தை லைக் செய்யவும்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments