Monday, December 23, 2024
Homecashbackஜியோ பிரைம் உறுப்பினர்களுக்கு 3 மடங்கு கேஷ்பேக் சலுகை: ரிலையன்ஸ் அறிவிப்பு

ஜியோ பிரைம் உறுப்பினர்களுக்கு 3 மடங்கு கேஷ்பேக் சலுகை: ரிலையன்ஸ் அறிவிப்பு

ரூ.399 முதல் அதற்கு அதிகமாக மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு ரீசார்ஜுக்கும் ரூ.2,599 வரை கேஷ்பேக் சலுகை வழங்கப்படும் என்று ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளது. இந்த சலுகை ஜியோ பிரைம் உறுப்பினர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

reliance jio cashback

image credit : google.com

அமேசான் பே, ஆக்சிஸ் பே, ஃப்ரீசார்ஜ், மொபிக்விக், பேடிஎம் மற்றும் போன்பே ஆகிய இ-வாலட்டுகள் மூலமாக மேற்கொள்ளப்படும் ரீசார்ஜுகளுக்கு ரூ.300 கேஷ்பேக் சலுகை உடனடியாக வழங்கப்படும்.

இந்த ஜியோ பிரைம் சலுகை நவம்பர் 10 முதல் 25-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் வழங்கப்படும்.

இந்த ஜியோ கேஷ்பேக் சலுகையில் 3 பிரிவுகள் இருக்கின்றன.

1. ரூ.400 (ரூ. 50 x 8) மதிப்பிலான ஜியோ கேஷ்பேக் நவம்பர் 15 முதல் மைஜியோ-வில் கிடைக்கப்பெறும்.

2. மேலே குறிப்பிட்ட இ- வேலட்களில், அதற்கான கேஷ்பேக் உடனடியாக வாடிக்கையாளருக்கு அளிக்கப்படும்.

3. இ-காமர்ஸ் வவுச்சர்கள் நவம்பர் 20-ம் தேதி முதல் கிடைக்கப்பெறும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோ பிரைம் என்பது ஜியோ வாடிக்கையாளர்கள், ஒரு முறை ஆண்டு உறுப்பினருக்கான தொகை (one- time annual membership) ரூ.99-ஐ செலுத்தி ஜியோ பிரைம் உறுப்பினர் ஆவதாகும்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments