Monday, December 23, 2024
Homeblogger tipsப்ளாக்கர் வலைப்பூவில் விளையாட்டு

ப்ளாக்கர் வலைப்பூவில் விளையாட்டு

How to Embedded A Game in Blogger Blog

இணையத்தில் பல வலைத்தளங்களில் கேம்ஸ் விளையாடுவதற்கான வசதியை வைத்திருப்பார்கள். அதுபோல உங்களுடைய Blogger Blog -ல்
கேம்ஸ் எம்பட்டெட் (Game Embedded) செய்வது எப்படி என்பதை தெரிந்துகொள்வோம்.

இணையத்தில் கேம்ஸ் விளையாட பல வெப்சைட்கள் உள்ளன. அவைகளில் ஒரு சில மற்ற இணையதளங்களில் கேம்ஸ் கோட் பதிக்கும் வசதியை அளிக்கின்றன.

embedded game in blogger blog

அவ்வாறு கொடுக்கப்படும் Embedded Code – ஐ காப்பி செய்து, ப்ளாக்கர் பதிவுகளில் (Blog Page / Blog Post) பதிந்துவிட்டால் போதுமானது.

அந்த Game -ஐ உங்கள் வலைப்பூவிற்கு வரும் வாசகர்கள் விளையாடி மகிழ்வர்.

உதாரணத்திற்கு இந்த கேம் இங்கு பதியப்பட்டுள்ளது.

இதனால் உங்களுடைய ப்ளாக்கர் வலைத்தளத்தில் வாசகர்கள் அதிக நேரம் செலிடுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

எப்படி கேம் கோட் ப்ளாக்கர் தளத்தில் பதிவது?

மிக சுலபம்தான்.

1. Kongregate இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2. அங்கு பல விதமான கேம்ஸ்கள் இருக்கும்.
3. அருகே கொடுக்கப்பட்டிருக்கும் “embedded code” காப்பி செய்யவும். (பார்க்க படம்).

game embedded code website

4. ப்ளாக்கர் பதிவு பெட்டியில் HTML மோடில் வைத்து அதை “பேஸ்ட்” செய்யவும்.

5. தேவைப்பட்டால் Width, Height உங்களது வலைப்பூவிற்கு ஏற்ற வகையில் மாற்றிக்கொள்ளலாம்.

6. இறுதியில் Publish கொடுத்துவிடவும்.

நீங்கள் வெளியிட்ட பதிவில், அந்த கேம் விளையாடுவதற்கு ஏற்ற வகையில் டிஸ்பிளே ஆகியிருக்கும். உங்கள் வலைப்பூவிற்கு வரும் வாசகர்கள் கேம் விளையாடி மகிழலாம்.

தனி கேட்ஜெட்டில் கேம் எம்பட் செய்வது எப்படி?

ப்ளாக்கர் டேஷ்போர்டில் Layout கிளிக் செய்து, அதில் Add Gadget என்பதை கிளிக் செய்து, அங்கு HTML/Javascript விட்ஜெட் தேர்ந்தெடுத்து, அதில் மேற்குறிப்பிட்ட Game Embedded நிரலை காப்பி-பேஸ்ட் செய்து, Save கிளிக் செய்து சேமித்து விடலாம்.  இந்த விட்ஜெட்டை சைட்பார், ஹெட்டர், பூட்டர் என எந்த இடத்திலும் நகர்த்தி வைத்துக்கொள்ளலாம்.

game embedded in widget

இவ்வாறு தனி கேட்ஜெட்டில் கேம் பதிந்துகொள்ளலாம்.

Tags: How to Embeded Game in a Blogger Post, Game Websites, Games in Blogger Blog.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments