கம்ப்யூட்டர், டேப்ளட், ஸ்மார்ட்போன் போன்ற எந்த ஒரு சாதனத்திலிருந்தும் மற்றொரு சாதனத்திற்கு Direct WiFi Connection வழியாக ஃபைல்களை ஷேர் செய்திட பயன்படும் செயலி Shareit. இது வீடியோ, ஆடியோ, டாகுமெண்ட் மற்றும் ஆப்ஸ்களை அனுப்புகிறது.
எந்த ஒரு Cloud Storage இல்லாமலேயே ஃபைல்களை டிரான்ஸ்பர் செய்கிறது ஷேர்இட் அப்ளிகேஷன். இதன் வழியாக photos, videos, local music files, documents, மற்றும் apps களை மற்றொரு சாதனத்திற்கு அனுப்பி வைக்கலாம்.
நீங்கள் எந்த சாதனத்தை பயன்படுத்துகிறீர்கள் என்பது ஒரு பொருட்டல்ல.. Shareit செயலி செயல்படுத்தப்பட்ட இரு சாதனங்களின் வழியாக File களை ஷேர் செய்திட முடியும்.
ஒன்றுக்கு மேற்பட்ட சாதனங்களிலும் ஒரே சமயத்தில் ஃபைல்களை ஷேர் செய்யும் வசதி இதில் உள்ளதால், ஒரு சாதனத்தில் ஃபைல் ஷேர் செய்துகொண்டிருக்கும்பொழுது, மற்ற சாதனத்தை Clone செய்து, அதிலும் ஃபைல்களை ஷேர் செய்திடலாம்.
ShareIt அப்ளிகேஷன் எப்படி செயல்புரிகிறது என்பதை காட்டும் வீடியோ:
Windows PC உட்பட பல தளங்களில் இந்த செயலி செயல்புரிகிறது.
“ஷேர்இட்” அப்ளிகேஷன் ஃபைல் டவுன்லோட் செய்ய சுட்டி:
இந்த பதிவை விரும்பியிருந்தால், ரிமோட் ஃபைல் ஷேரிங் மென்பொருள் எந்த இந்த பதிவையும் ஒருமுறை வாசித்துப் பாருங்கள்.