Monday, December 23, 2024
Homeammyy adminரிமோட் டெஸ்டாப் கனெக்சன் மென்பொருள் !

ரிமோட் டெஸ்டாப் கனெக்சன் மென்பொருள் !

desktop remote software

ஒரு இடத்திலிருந்து, இன்னொரு இடத்திலிருக்கும் கம்ப்யூட்டரை உங்கள் கம்ப்யூட்டரை பயன்படுத்தி இயக்க முடியும். அதற்கு பயன்படும் மென்பொருள் தான் ரிமோட் டெஸ்க்டாப் மென்பொருள். உ.ம். டீம் வியூவர் மென்பொருளை குறிப்பிடலாம்.

சரி.. இது என்ன செய்கிறது?

 நீங்கள் கனெக்ட் செய்து இயக்க வேண்டிய கம்ப்யூட்டரின் திரையை உங்கள் கம்ப்யூட்டர் திரையில் காண்பிக்கிறது. அவ்வாறு காண்பிக்க வேண்டுமானால், இரு கம்ப்யூட்டரிலும் “டீம் வியூவர்” மென்பொருள் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

 அதை இயக்கி, அது தரும் ID – பாஸ்வேர்ட், ஐ இணைத்து செயல்பட வேண்டிய கம்ப்யூட்டரில் இயங்கும் “டீம் வியூவர்” மென்பொருளில் கொடுத்து, “கனெக்ட்” கொடுத்தால் போதும்.

 உடனே அந்த கம்ப்யூட்டர் திரையானது உங்களுடைய கம்ப்யூட்டரில் தெரிய ஆரம்பித்துவிடும். பிறகு, உங்களது கீபோர்ட், மௌஸ் பயன்படுத்தி, அந்த கம்ப்யூட்டரை உங்கள் திரையின் வழியாக இயக்கலாம்.

அவ்வாறு இயக்குவதை அங்கிருந்தவாறே கம்ப்யூட்டருக்கு உரியவர் அதை கண்ணுறலாம்.

 ரிமோட் டெஸ்க்டாப் மென்பொருள்

 ரிமோட் டெஸ்க்டாப் மென்பொருள்கள் சில உண்டு. அவற்றில் Team Viewer, Ammy Admin போன்றவை பயன்படுத்த எளிதாக இருக்கும்.

 தற்பொழுது ஆன்ட்ராய்ட் போன், டேப்ளட் போன்ற இணையம் பயன்படுத்தும் அனைத்து சாதனங்களுக்கும் இத்தகைய மென்பொருட்கள் உருவாக்கப்பட்டுவிட்டன.

கம்ப்யூட்டரை இயக்க, சந்தேகங்களை தீர்த்து வைக்க, மற்றவரின் கம்ப்யூட்டரில் பணி புரிய என பல வகைகளில் இந்த மென்பொருளானது பயன்படுகிறது. குறிப்பிட்டதக்க அளவுக்கு File களையும் இதன் மூலம் பகிர்ந்துகொள்ள முடியும். அதைப் போன்றே Text Message களை பரஸ்பரம் அனுப்பி பகிர்ந்துகொள்ளலாம்.

Team Viewer பற்றி அறிய டீம் வியூவர் – டெக்ஸ்டாப் ரிமோட் மென்பொருள் என்ற பதிவை வாசிக்கவும்.

Ammyy Admin பற்றி அறிய ரிமோட் டெஸ்க்டாப் மென்பொருள் – ஆம்மி அட்மின் என்ற பதிவை வாசிக்கவும்.

RELATED ARTICLES

1 COMMENT

Comments are closed.

Most Popular

Recent Comments