ஸ்மார்ட்போன் வரலாற்றில் சாதனை படைத்த ஆப்பிள் நிறுவனம் மடிக்கத் தக்க வகையில் அமைந்த ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது.
முன்னதாக ஆப்பிள் நிறுவனம் காப்புரிமை மற்றும் டிரேட் மார்க் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ள படிவத்தில் மடிக்க கூடிய டிஸ்பிளே, வெளிப்புறத்தில் அட்டகாசமான தோற்றம் கொண்ட ஸ்மார்ட்போன் குறித்த தகவல்களை பதிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து ஆப்பிள் நிறுவனம் ஸ்மார்ட்போன்களில் மடிக்க கூடிய டிஸ்பிளே கொண்ட OLED திரைகளை எல்ஜி நிறுவனத்திடமிருந்து வாங்குவதற்கான ஆயத்த பணிகளில் இறங்கியுள்ளது.
இதற்கு முன்பு சாம்சங் நிறுவனத்திடமிருந்து “டிஸ்பிளே” களை வாங்கி வந்தது. இருப்பினும் அந்நிறுவனம் ஸ்மார்ட் போன் குறித்த தகவல்களை வெளியிடுவதால், இம்முறை LG நிறுவனத்திடமிருந்து OLED திரைகளை வாங்கவிருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
இதனையடுத்து LG துணை நிறுவனமான “எல்.ஜி இன்னோடெக்” புதிய மடிக்கும் திரை போன்களுக்கு உதவும் Regid Flexible printed Circuit boards தயாரிப்பு பணிகளில் இறங்கியுள்ளது.