பணம் கொடுத்துப் பெறும் மென்பொருளில் கூடுதல் வசதிகள் இருக்கும். இலவசமாக கிடைப்பதில் அடிப்படை வசதிகள் மட்டும் அமைந்திருக்கும்.
இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் |
கட்டண மென்பொருளே பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைத்தால் நன்மைதானே. அந்த வாய்ப்புகளை ஒரு சில இணையதளங்கள் வழங்குகின்றன. சில வெப்சைட்டுகள் சட்டத்திற்கு புறம்பாக மென்பொருளை உடைத்து, பதிவிறக்க கொடுத்திருப்பார்கள்.
அவர்கள் இலாபமின்றி அவற்றை கண்டிப்பாக செய்ய மாட்டார்கள். அவர்களுக்கு விளம்பரம் மூலம் வருமானம் கட்டாயம் வரும். அல்லது மென்பொருள் தரவிறக்கும்பொழுது, Adware போன்ற விளம்பர நிரல்கள் அல்லது தகவல்களை திருடக்கூடிய Virus போன்ற புரோகிராம்கள் அதனூடாக இணைத்தே வழங்குவர்.
அவ்வாறு பதிவிறக்கி பயன்படுத்திம்பொழுது தான் அது தரும் தொல்லை புரியும்.
மற்றொரு வகையில் “இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர்” சாப்ட்வேரை பெற முடியும். அது Give Away என்ற வகையில் மென்பொருளை கொடுக்கும் இணையதளங்கள் தன்னிடம் இருக்கும் மென்பொருளை குறிப்பிட்ட நபர்கள் மட்டும் பயன்படுத்த ஒரு சிறு போட்டி அல்லது சிறு வேலைகளை செய்வதன் மூலம் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்வது. இதில் இருதரப்பினருக்கும் இலாபம் உண்டு.
அதே சமயம் “ஒரிஜினல்” Download Manager மென்பொருளையும் Key உடன் பெற்றுக்கொள்ள முடியும்.
இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் கோப்புகளை விரைவாக டவுன்லோட் செய்து கொடுப்பதோடு நின்றுவிடாமல், இடையிடையே இன்டர்நெட் அல்லது கம்ப்யூட்டர் தடைபட்டு நின்று விட்டாலும், டவுன்லோடை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்திட உதவுகிறது.
இதுபற்றி மேலும் தெரிந்துகொள்ள “இலவச இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர்” என்ற பதிவை வாசிக்கவும்.
இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் சாப்ட்வேர் டவுன்லோட் செய்ய
Tags: Free Internet Download Manager, Internet Download Manager Original, Internet Manager Without Cost, Internet Download Manager Give Away.