LG Software & Drivers என்ற இணையதளத்தின் ஊடாக அதைச் செய்திடலாம்.
இந்த பக்கத்தில் Browse By Product என்ற பட்டனை அழுத்தி, பிராடக்ட் வைசாக எந்த தயாரிப்பு பொருளுக்கு சாப்ட்வேர் தேவை என்பதை தேர்ந்தெடுத்திடலாம்.
அல்லது அருகில் உள்ள “சர்ச் பாக்சில்” Type in Your Model Number என்பதில் ப்ராக்ட்கு உரிய மாடல் எண்ணை உள்ளிட்டு தேடலாம்.
சில நேரங்களில் பொருட்கள் பழுது அடைந்தால், அல்லது அதற்கு மீண்டும் சாப்ட்வேர் ரீ இன்ஸ்டால் செய்திட வேண்டிய சூழ்நிலையில் இங்கு சென்று டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்திடலாம்.
LG தரும் பிரபலமான சாப்ட்வேர்கள்
- Windows Monitor Drivers
- LG Mobile Drivers
- LG PC Suite
- LG Bridge
- Smart Share
விண்டோஸ் மானிட்டடர் டிரைவர்ஸ் (Windows Monitor Drivers)
விண்டோஸ் 7, விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் 8, 8.1, 10 போன்ற இயங்குதளங்களில் இயங்குவதற்கு ஏற்ற வகையில் LG Windows Monitor Drivers அமைக்கப்பட்டுள்ளது.
எல்.ஜி. மொபைல் டிரைவர்ஸ் (LG Mobile Drivers)
செல்போன் மற்றும் டேப்ளட் ற்றுக் தேவையான “மொபைல் டிரைவர்ஸ்” இங்கு கிடைக்கும்.
எல்.ஜி. பி.சி. சூட் (LG PC Suite)
கம்ப்யூட்டர், மொபைல், டேப்ளட் போன்றவற்றில் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு பிக்சர்ஸ், மியூசிக் மற்றும் இதர ஃபைல்களை நகர்த்திட பயன்படும் மென்பொருள் இது.
எல்.ஜி. பிரிட்ஜ் (LG Bridge)
இதுவும் LG PC Suite போலவே படங்கள், மியூசிக் மற்றும் வேறு வகையான ஃபைல்கள் நகர்த்திட உதவும்.
ஸ்மார்ட் ஷேர் (Smart Share)
உங்களிடம் உள்ள செல்போன் அல்லது டேப்ளட் போன்ற டிவைஸ்களை வைஃபை அல்லது USB வழியாக ஸ்மார்ட் டிவியில் இணைத்து படங்கள், மியூசிக் வீடீயோஸ், போன்றவற்றை பார்த்திட உதவுகிறது.
நீங்கள் LG Product ளை பயன்படுத்தினால் கண்டிப்பாக இந்த பக்கம் உங்களுக்கு உதவும். பதிவு பயனுள்ளதாக இருந்தால் FB யில் ஷேர் செய்யவும்.