Wednesday, January 22, 2025
Homedownload videos from facebookபேஸ்புக் வீடியோ டவுன்லோட் செய்வது எப்படி?

பேஸ்புக் வீடியோ டவுன்லோட் செய்வது எப்படி?

HOW TO DOWNLOAD FACEBOOK VIDEOS ON ANDROID

தற்பொழுது உள்ள சமூக வலைத்தளங்களில் முதல் இடத்தில் இருப்பது முகநூல் என்ற பேஸ்புக். இந்த சமூக இணையதளத்தில் பல்வேறுபட்ட பதிவுகள் பதிவேற்றப்படுகின்றன. பயனர்கள் தங்களது எண்ணங்களை எழுத்துக்களாகவோ, அல்லது படங்கள் மற்றும் வீடியோ வாக பதிவிட்டு வருகின்னர். 
HOW TO DOWNLOAD FACEBOOK VIDEOS ON ANDROID

பேஸ்புக்கில் உள்ள சிறப்பான வசதிகள் இவை. அனைத்து மீடியாக்களையும் பதிவிட பயன்படுவதால் பயனர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். முகநூல் என்பது நண்பர்களை ஒருங்கிணைக்கும் களமாகவும் செயல்படுகிறது. முதன்மை குறிக்கோள் இதுவே. 
அதன் பிறகு பேஸ்புக் அப்டேட் ஆகி, Facebook Page, Page Group, தகவல்களை பரிமாறிக்கொள்ள Facebook Messenger என பல்வேறு வசதிகளை கொடுத்தது. அதன் பிறகு அதன் மூலம் சம்பாதிக்க, வியாபாரத்தை பெருக்க என பல்வேறு நுட்பங்களை புகுத்தியது. 
தற்பொழுது யூடியூப் தளத்தைப் போல, வீடியோக்களை பதிவேற்றவும், அதன் மூலம் விளம்பரம் வைத்து வருவாய் ஈட்டவும் வழி வகை செய்கிறது. 

facebook video download

இப்படி பல்வேறு தகவல்களை உள்ளடக்கிய பேஸ்புக்கில் நமக்கு விரும்பமான  படங்கள், டெக்ஸ்ட்கை காப்ப பேஸ்ட் செய்து சேமித்துக் கொள்ளலாம். ஆனால் வீடியோவை டவுன்லோட் செய்திடும் வசதி அதில் இல்லை. மொபைல் போன் என்றால் வீடியோ டவுன்லோட் செய்துகொள்வது மிக சுலபம். ஆனால் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில் அது கடினம். 

வீடியோக்களை டவுன்லோட் செய்வதற்கு எந்த ஆப்சனும் அதில் இல்லை. ஆனால் அதற்கென சில “சாப்ட்வேர்கள்” உண்டு. அவற்றைப் பயன்படுத்தி டவுன்லோட் செய்துகொள்ளலாம்.
Online Facebook Video Download Tool மூலமும் பேஸ்புக் வீடியோ டவுன்லோட் செய்திடலாம். அதற்கென சில ஆன்லைன் டூல் (Websites) உண்டு.

பேஸ்புக் வீடியோ டவுன்லோட் செய்திட உதவும் வெப்சைட்டுகள்

1. Download Facebook Videos
2. Download Vids
3. FB Down
4. Private Facebook videos
5. Save From
6. Keep Vid

சாப்ட்வேர் இல்லாமல் பேஸ்புக் வீடியோ டவுன்லோட் செய்திட

எந்த ஒரு சாப்ட்வேர் இன்றியும் ஃபேஸ்புக் வீடியோவை டவுன்லோட் செய்திடலாம்.

1. உங்கள் கம்ப்யூட்டரில் Facebook Video வை Play செய்யவும்.
2. அதன் மீது ரைட் கிளிக் Show Video Url என்பதை கிளிக் செய்யவும்.
3. தற்பொழுது அதை காப்பி செய்து புதிய டேபிள் பேஸ்ட் செய்யவும்.
4. அதில் முதலில் உள்ள hppts://www என்பதை நீக்கி விட்டு, அதற்கு பதிலாக m என்பதை சேர்க்கவும்.

(உ.ம்.)

https://www.facebook.com/kalakkalkanoli/videos/1659393550777794/ 

என இருப்பின்,

m.facebook.com/kalakkalkanoli/videos/1659393550777794/ 

என மாற்றி என்டர் கொடுக்க வேண்டும்.

5. இப்பொழுது வீடியோவை Play செய்யவும்.
6. பிளே ஆகும் வீடியோவின் மீது ரைட் கிளிக் செய்தால் Save Video As என்ற ஆப்சன் காட்டும். அதை கிளிக் செய்தால் அந்த வீடியோ உங்கள் கம்ப்யூட்டரில் டவுன்லோட் ஆகிவிடும்.

மற்றொரு முறை: 

மேற்கண்ட முறையில் உங்களுக்கு டவுன்லோட் செய்யும் முறை வரவில்லை என்றால் இந்த முறையை நீங்கள் முயற்சி செய்யலாம்.

மேற்சொன்ன முறையில் m.facebook.com என்பதற்கு பதிலாக mbasic.facebook.com என மாற்றி டவுன்லோட் செய்துகொள்ளலாம். அதாவது m என்பதற்குப் பதிலாக mbasic என இருக்க வேண்டும்.

உதாரணம் :

1. m.facebook.com/kalakkalkanoli/videos/1659393550777794/ 
2. mbasic.facebook.com/kalakkalkanoli/videos/1659393550777794/ 


அவ்வளவுதான். இந்த இரு வழிமுறைகளில் நீங்கள் எந்த ஒரு சாப்ட்வேர் இன்றி நேரடியாக பேஸ்புக் தளத்திலிருக்கும் வீடியோக்களை டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

Tags: Facebook Video Download, Fb Video Download, FB Vid Download, Downplay FB Videos without software, Free FB video Download Tool.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments