இந்த இணையதளத்தில் விண்டோஸ், மேக் கணினிகள், மொபைல் போன்கள் போன்றவற்றிற்குத் தேவையான Software, Tools, Utilities போன்ற அனைத்தும் இலவசமாக டவுன்லோட் செய்ய கிடைக்கின்றன.
Security, Browsers, Business, Communications, Desktop Enhancements, Developer Tools, Digital Photo, Drivers, Education, Entertainment, Games, Graphic Design போன்ற பல்வேறு தலைப்புகளில் மென்பொருட்கள் டவுன்லோட் செய்ய இந்த இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளன. பெரும்பாலான மென்பொருட்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய கிடைக்கின்றன.
உங்கள் கம்ப்யூட்டருக்குத் தேவையான அனைத்து புரோகிராம்களை ஒரே கிளிக்கில் இது தரும் எக்யூட்டபிள் ஃபைல் வழியாக இன்ஸ்டால் செய்திடலாம். அதே போல கம்ப்யூட்டரில் உள்ள தேவையற்ற மென்பொருட்களையும் ஒரே கிளிக்கில் (Bulk) அன் இன்ஸ்டால் செய்திடலாம்.
புதிய கம்ப்யூட்டருக்கு புரோகிராம்களை ஒரே வேளையில் இன்ஸ்டால் செய்திட NINITE அற்புதமான இணையதளம்.
805000 ஃபைல்களுக்கு மேல் ஹோஸ்ட் செய்யப்பட்டிருக்கும் இணையதளம் இது. இதில் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கும் மேற்பட்ட சாப்ட்வேர்கள் அப்டேட் செய்யப்படுகின்றன. Windows, Mac, Linux, Android, iOS, மற்றும் Windows Mobile சாதனங்களுக்குத் தேவையான அனைத்து புரோகிராம்கள் மற்றும் சாப்ட்வேர்கள் இதில் கிடைக்கின்றன. பயனர்கள் மிக எளிதாக தங்களுக்குத் தேவையான புரோகிராம்களை கண்டறியும் விதமான இவ்விணையதளம் அட்டகாசமான வடிமைப்பைப் பெற்றிருக்கிறது.
பதினைந்து ஆண்டு காலமாக செயல்பட்டும் இவ்விணையதளத்தில் பல அசத்தலான மென்பொருட்களை டவுன்லோட் செய்திடலாம். சாதாரணமான வெப்சைட் போல காட்சி அளித்தாலும் இடது புறம் அளிக்கப்பட்டுள்ள அற்புதமான சாப்ட்வேர்களின் தொகுப்பு பலருக்கும் பயன்படும் என்பதில் சந்தேகமில்லை.
முகப்பு பக்கத்திலேயே பலவிதமான மென்பொருட்களின் தொகுப்பை கொடுத்துள்ள அருமையான இணையதளம் இது. பயனர்களுக்குத் தேவையான மென்பொருட்களை உடனடியாக கண்டறியும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மென்பொருளை டவுன்லோட் செய்திட கிளிக் செய்யப்பட்டவுடன், அந்த மென்பொருளின் முந்தைய பதிப்புகளை சைட் பாரில் கொடுத்திருப்பது பயனுள்ளதாக இருக்கிறது. பழைய பதிப்புகளை எங்கும் தேடாமல் அந்த பக்கத்திலிருந்தாவேற டவுன்லோட் செய்திடலாம்.
மேலும் சில ப்ரீ சாப்ட்வேர் டவுன்லோட் வெப்சைட்டுகள்: