மல்வேர் ஃபைட்டர் மென்பொருள் பற்றி தெரிந்துகொள்வதற்கு முன்பு இதை தெரிந்துகொள்வோம். இயற்கையில் ஒரு சீற்றம் ஏற்பட்டால், அது குறித்த செய்திகளை அறிந்துகொள்வதில் அனைவருக்குமே ஆர்வம் இருக்கும். அல்லது ஏதேனும் ஒரு பெரிய விபத்து போன்ற சம்பவங்கள் நிகழ்ந்தால் இயற்கையாகவே அது பற்றிய தகவல்களை அனைவரும் அறிந்துகொள்ள ஆர்வமாக இருப்பார்கள்.
மலேசிய விமானம் காணமல் போனபோது, அதை வைத்து ஹேக்கர்கள் சில சதி செய்தார்கள். அது என்ன தெரியுமா? காணாமல் போன மலேசிய விமானம் பெர்முடா முக்கோணப் பகுதியில் விழுந்ததுள்ளதாகவும், அதில் பயணித்த அனைவரும் பத்திரமாக இருக்கின்றனர் எனவும் ஒரு வீடியோ லிங்கை அனுப்பி இருந்தார்கள்.
அதை கிளிக் செய்தவுடன் உங்களைப் பற்றிய விபரங்களை பதிவிடுங்கள், அதன் பிறகே வீடியோ ப்ளே ஆகும் என கண்டிசன் போட்டிருந்தார்கள். பல ஆயிரக்கணக்கோர் வீடியோவை பார்க்கும் ஆர்வத்தில் விபரங்களை கொடுத்துவிட்டனர். அதன் பிறகு நடந்தது என்ன தெரியுமா?
அவர்கள் இணையத்தில் பதிவு செய்யும் அனைத்து தகவல்களும் திருடப்பட்டன. விபரம் புரியாமல் ஆர்வ கோளாறில் சொந்த தகவல்களை பகிர்ந்தவர்களின் நிலை பரிதாபமாகிவிட்டது.
இப்படி ஆர்வத்தை தூண்டும் வகையில் ஹேக்கர்கள் சில தகவல்களை பரப்பி அதனூடாக தவறான வெப்சைட்டுகளுக்கு விசிட்டர்களை வர வழைப்பது, அவர்களிடம் தகவல்களை திருடுவது, அந்த இணைப்பின் வழியாக மால்வேர் போன்ற புரோகிராம்களை கம்ப்யூட்டரில் இறக்கிவிடுவது என பல ஜிகினா வேலைகள் எல்லாம் செய்துவிடுவார்கள்.
கடைசியில் அனைத்து பாதிப்புகளும் பயனர்களை வந்து சேரும். எனவேதான் ஒரு கம்ப்யூட்டர் அல்லது ஆன்ட்ராய்ட் போன் எப்பொழுதும் பாதுகாப்பு கருதி கண்டிப்பாக ஒரு ஆன்ட்டி வைரஸ் / மால்வேர் தடுப்பு மென்பொருள் ஒன்றினை வைத்திருக்க வேண்டியது அவசியமாகிறது.
அதுபோன்றதொரு மென்பொருள்தான் IObit Malware Fighter.
கணினி பயனர்கள் மற்றும் பெரு நிறுவனங்கள் ஆன்லைன் அட்டாக்கிலிருந்து காத்திட பயன்படும் செக்யூரிட்டி இரகசிய காப்பு மென்பொருள் ஆக இது செயல்படுகிறது. உங்கள் கம்ப்யூட்டருக்கு Petya மற்றும் oldenEye போன்ற ரேன்சம் மால்வேர்கள் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது.
இலவசமாக கிடைக்கும் இந்த மென்பொருளில் அடிப்படை வசதிகள் உண்டு. கட்டணம் செலுத்தி பெறப்படும் மென்பொருளில் மேலதிக வசதிகள் இடம்பெற்றுள்ளன.
டவுன்லோட் செய்ய சுட்டி:
IObit Malware Fighter is a security & privacy software package that is designed to protect casual web users and corporations from online attacks. Use it to prevent malware such as Petya and GoldenEye from ransoming the use of your PC.