விற்பனைக்கு வந்த ஐந்தே நிமிடத்தில் மள மளவென விற்றுத் தீர்ந்திருக்கிறது ஒரு ஸ்மார்ட்போன். அது எது தெரியுமா?
OnePlus 5T. இதுதான் விற்பனைக்கு வந்த 5 நிமிடத்தில் விற்று சாதனை புரிந்துள்ளது. சீன நிறுவனத்தின் தயாரிப்பான இந்த ஸ்மார்ட்போன்தான் அமேசான் இணையதளத்தில் விற்பனைக்கு வந்த அடுத்த ஐந்து நிமிடத்தில் விற்றுத் தீர்ந்துவிட்டதாம்.
Features of OnePlus 5T Smartphone
அப்படி அதிலென்னா விஷேசங்கள் இருக்கு? பார்ப்போமா?
- 20 மெகா பிக்சல் கொண்ட கேமிரா
- மிக குறைந்த வெளிச்சத்தில் தெளிவான படம் எடுக்கும் வசதி – இன்டெலிஜண்ட் பிக்சல் தொழில்நுட்பம்
- சூரிய வெளிச்சத்திலும் தெளிவாக பார்க்க கூடிய “சன்லைட் டிஸ்பிளே“
- அதி விரைவாக சார்ஜ் ஏற்றக்கூடிய வசதி – அரை மணி நேரம் ஏற்றினால் நாள் முழுவதும் பயன்படுத்தலாம்.
- மொபைலை பார்ப்பதன் மூலம் திறக்கும் வசதி – பேஸ் அன்லாக்
- துரித கதியில் வீடியோ கேம் விளையாட – ஸ்னாப்டிராகன் பிராசசர்
OnePlus 5T Video
இதுவரைக்கும் வெளிவந்த ஸ்மார்ட் போன்களில் இல்லாத வசதிகளை கொண்டிருப்பதால் பலரையும் “OnePlus 5T” ஸ்மார்ட்போன் கவர்ந்ததில் ஆச்சர்யம் இல்லை.
இது தொடர்பாக ஒன்ப்ளஸ் இந்தியாவின் மேளாளர் “இதற்கு முன்பு எப்பொழுதுமே இல்லாத அளவிற்கு இந்த முதன்மை விற்பனை அமைந்துள்ளது எங்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று பேசியுள்ளார்.
இதன் மூலம் அவர்களே எதர்பாராத வகையில் விற்பனை படு ஜோராக நடந்துள்ளது என்பதை தெரிந்துகொள்ள முடிகிறது.
இதன் விலை ரூபாய் 32,999 ல் தொடங்குகிறது என்பதுதான் மீடியம் பட்ஜெட் காரர்களுக்கு சற்று உதறலாக உள்ளது.
இது தொடர்புடைய பதிவு :
- அதிக பேட்டரி- லைஃப் கொடுக்கும் சாம்சங் ஸ்மார்ட்போன்
- 5000 ரூபாய்க்கு கிடைக்கும் வீடியோகான் ஸ்மார்ட்போன்
- BP, Suger அளவை அறிந்திட உதவும் ஸ்மார்ட்போன்
Tags: OnePlus 5T smartphone, OnePlus 5T launch, OnePlus 5T specs,