Wednesday, January 22, 2025
Homecomputer tipsகம்ப்யூட்டரை வேகபடுத்திட பயன்மிகு குறிப்புகள்

கம்ப்யூட்டரை வேகபடுத்திட பயன்மிகு குறிப்புகள்

You can do speed up your computer 99% faster that following the 5 steps. Finally You will get a faster computer as well.

கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களுக்கு அவ்வப்பொழுது வரும் மிக முக்கியமான பிரச்னை கம்ப்யூட்டர் திடீர் என ஸ்லோ ஆகிவிடுவதுதான்.

அதுபோன்ற நிலையில் என்னதான் வேகமாக செயல்பட்டாலும், கம்ப்யூட்டர் வேகம் அதிகரிக்காது.  விரைவாக பணி புரிவதற்கு ஒத்துழைக்காமல் கம்ப்யூட்டர் அடம் பிடிக்கும்.. அப்பொழுது ஏற்படும் மன உளைச்சலுக்கு அளவே இருக்காது. சரி, அதுபோன்ற திடீரென உங்கள் கம்ப்யூட்டர் ஸ்லோ ஆனால் என்ன செய்வது?  இதோ அதற்கான சில டிப்ஸ்கள்.

how to speedup windows 7

கம்ப்யூட்டர் வேகமாக செயல்பட 5 டிப்ஸ்

செய்து கொண்டிருக்கும் வேலையை சேமித்துவிட்டு, ஓப்பன் செய்த அனைத்து புரோகிராம்களையும் மூட வேண்டும். அப்படி மூட முடியவில்லை என்றால்  CTRL+ALT+DELETE அழுத்தி “Task Manager” உயிர்ப்பிக்க வேண்டும். அல்லது டாஸ்க்பாரில் ரைட் கிளிக் செய்து Task Manager கிளிக் செய்திட வேண்டும்.

start task manager

டாஸ்க்மேனேஜர் கிளிக் செய்து வரும் விண்டோவில் Application டேபிள் உள்ள புரோகிராம்கள் ஒவ்வொன்றாக தேர்வு செய்து End Task கொடுத்து மூடலாம்.
பிறகு கம்ப்யூட்டரை Restart கொடுத்து கம்ப்யூட்டரை உயிர்பிக்க வேண்டும். இப்பொழுது புரோகிராம்களை திறந்து வேலை செய்து பாருங்கள்.  கம்ப்யூட்டர் இயல்பாக இயங்கும்.
அப்படி செய்தும் இயல்பான வேகத்தில் செயல்படவில்லை எனில்,  கம்ப்யூட்டரில் தேவையற்ற புரோகிராம்களை நீக்க (Uninstall) வேண்டும்.

அதற்கு அடுத்து டெம்ப் ஃபைல்களை நீக்க வேண்டும். அதற்கு,

  • Start Button+R அழுத்தி ரன் விண்டோவை திறந்து, அதில் %temp% என டைப் செய்து என்டர் கொடுத்து,  டெம்ப்ரரி பைல்களை அனைத்தையும் செலக்ட் செய்து Delete கொடுத்திடலாம்.
windows-r
run-temp-ok
delete temp files
  • அதேபோல் விண்டோஸ் பட்டன் + ஆர் அழுத்தி ரன் விண்டோவை திறந்து, அதில் prefetch என டைப் செய்து, என்டர் கொடுத்து அதில் உள்ள பைல்களை அனைத்தையும் தேர்வு (Select+delete) நீக்கிடலாம். 
run-prefetch
  • பிரௌசர் ஸ்லோவாக இருப்பின் History Delete செய்திடலாம். பிரௌசர் ஹிஸ்டரி டெலீட் செய்ய CTRL+H அழுத்தி தோன்றும் விண்டோவில் clear history என்பதை கொடுத்து நீக்கிடலாம்.
  • விண்டோஸ் 7ல் டெஸ்க்டாப்பில் வெற்று இடத்தில் ரைட் கிளிக் செய்து “Personalize” கிளிக் செய்து, அதில் Windows 7 Basic என்பதை தேர்ந்தெடுப்பதன் மூலம் விண்டோஸ் பேசிக் இயக்கத்தை ஏற்படுத்திடலாம். இதன் மூலம் கம்ப்யூட்டர் வேகம் அதிகரிக்கும்.
  • ஸ்டார்ட் அப் புரோகிராம்களை நீக்குவதன் மூலம் கம்ப்யூட்டர் வேகத்தை அதிகரித்திடலாம். 
  • விண்டோஸ் பட்டனை அழுத்தி ஆர் அழுத்துவதன் மூலம் (Windows+R) ரன் விண்டோவை திறந்து, அதில் msconfig என டைப் செய்து என்டர் தட்டினால் ஒரு விண்டோ தோன்றும். அதில் Startup டேபை கிளிக் செய்து, அதில் உள்ள புரோகிராம்களில் தேவையற்ற புரோகிராம்களுக்கு டிக் மார்க்கை எடுத்துவிட்டு, Apply , Ok கொடுத்திடலாம். 
    இந்த 5 செயல்களை செய்திட்டாலே உங்களுக்கு விண்டோஸ் 7 கம்ப்யூட்டர் 90% வேகம் அதிகரித்திடும். செய்து பாருங்கள். உங்களுடைய கம்ப்யூட்டர் முன்பு இருந்ததைவிட கண்டிப்பாக வேகம் அதிகரித்திருப்பதை நீங்களே உணர்வீர்கள். 
    Tags: tags: windows 7 speedup, speed up windows 7 software, speed up windows 7 performance, 
    how to make windows 7 faster and improve its performance, how to speed up windows 7 startup, 
    performance troubleshooter windows 7, how to speed up windows 7 ultimate 32-bit, 
    how to turn off visual effects windows 7, change the size of virtual memory. windows 7, speed up windows 7 software.
    RELATED ARTICLES

    Most Popular

    Recent Comments