Saturday, November 23, 2024
Homefree format toolபென்டிரைவ் - மெமரி கார்டு பார்மட் செய்வது எப்படி?

பென்டிரைவ் – மெமரி கார்டு பார்மட் செய்வது எப்படி?

பென்டிரைவ் அல்லது SD Card பார்மேட் செய்திடும்பொழுது  “windows  was unable to complete format என்ற பிழைச் செய்தி வருகிறதா? 
என்ன செய்தாலும் பார்மேட் அடிக்க முடியவில்லையா? அது போன்ற பிரச்னைக்கு சில தீர்வுகள் உள்ளன. அதன்படி செய்திட்டால் மிக எளிதாக Format செய்திடலாம். பார்மேட் ஆகாத பென்டிரைவ்/SD Card ஐ எப்படி பார்மேட் செய்வது என பார்ப்போம். 
windows unable to complete format

பென்டிரைவ்/SD CARD பார்மேட் டூல்ஸ்

அதற்கென்றே சில இலவச டூல்கள் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தி மிக எளிதாக “பார்மட்” செய்திடலாம். அவற்றில் சிறப்பாக செயல்படும் ஒரு பார்மட் டூல் EaseUS partition tool

தரவிறக்கம் செய்திட சுட்டி:  

எப்படி பயன்படுத்துவது?
டவுன்லோட் செய்த டூலை இன்ஸ்டால் செய்து ஓப்பன் செய்யவும்.
இப்பொழுது இப்படி ஒரு விண்டோ வரும்.

அதில் பார்மேட் செய்யப்பட வேண்டிய டிவைசின் மீது ரைட் கிளிக் செய்யவும். இங்கு F பார்மேட் செய்ய ரைட் கிளிக் செய்யப்பட்டுள்ளது.

அதில் Format Partition என்பதை சொடுக்கவும்.

அதற்கு அடுத்து ஒரு சிறிய பாப்அப் விண்டோ தோன்றும். அதில் பைல் டைப் தேர்ந்தெடுத்து ஓ.கே கொடுக்கவும்.

அவ்வளவுதான். நீங்கள் தேர்ந்தெடுத்த SD Card, Pendrive பார்மேட் ஆகிவிடும்.

Tags: pendrive format, sd card format, free format tool, free software.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments