Wednesday, January 22, 2025
Homeillavsa menporulகட்டற்ற மென்பொருள், கட்டில்லா மென்பொருள் - ஒரு பார்வை

கட்டற்ற மென்பொருள், கட்டில்லா மென்பொருள் – ஒரு பார்வை

Kinds of Software

ஆங்கிலத்தில் “சாப்ட்வேர்” என குறிப்பிடப்படும் மென்பொருள் பல வகைகளில் கிடைக்கிறது. இன்று கணினி மயமாக்கப்பட்ட டிஜிட்டல் சாதனங்களில் அவற்றை இயக்கிட பயன்படுபவை அத்தகைய மென்பொருட்களே.

கணினியில் பயன்படுத்தக் கூடிய வகைகளை அறிந்துகொள்ள கணிப்பொறி மென்பொருள் விளக்கம் என்ற பதிவை வாசிக்கவும்.

பொதுவாகவே மென்பொருட்களை   1. கட்டுப்பாடற்ற மென்பொருட்கள். 2. கட்டுடைய மென்பொருட்கள் இரு வகைகளாக பிரிப்பர். மேலும் அவற்றிற்கு தொடர்புடைய சொற்களில் குறிப்பிடப்படும் மென்பொருட்கள் சிலவும் உண்டு.

1. கட்டுப்பாடற்ற மென்பொருட்கள்

எந்தக் கட்டுப்பாடும் அற்று, எவரும் எப்படியும் பயன்படுத்தக்கூடிய வகையில் வெளியிடப்படுவை கட்டுப்பாடற்ற மென்பொருட்கள் என குறிப்பிடப்படுகின்றன.

இவற்றின் மூல நிரல்கள் கிடைக்கப்பெறும். அவற்றில் மாற்றம் செய்தோ, செய்யாமலோ பயன்படுத்திடலாம்.

கட்டற்ற மென்பொருள் சுதந்திரத்தை அடிப்படையாக க் கொண்டது. விலையை அடிப்படையாக கொண்டது அல்ல.  இலவச மென்பொருள் என்பதற்கும் “சுதந்திர மென்பொருள்” என்பதற்கும் வித்தியாசமுண்டு.

சுதந்திர மென்பொருளில் நாம் நம் வசதிக்கு தகுந்தவாறு அவற்றை மாற்றிட அமைத்திடும் சுதந்திரம் உண்டு. இலவசம் என குறிப்பிடுபவை அந்த பொருளில் வந்தடங்கா.

2. கட்டுடைய மென்பொருட்கள்

கட்டுப்பாடற்ற மென்பொருள் விதிமுறைகளுக்கு அடங்காதவை கட்டுடைய மென்பொருள் என குறிப்பிடப்படுகிறது. அதன் பயன்பாடு, மறுவிநியோகம் அல்லது மாற்றம் தடை செய்யப் பட்டிருக்கும்

அல்லது அதற்கென தாங்கள் அனுமதி பெற வேண்டியிருக்கும் அல்லது கட்டற்று செய்ய இயலாத படிக்கு அதிகத் தடைகளை கொண்டிருக்கும்.

3. திறந்த மூல மென்பொருள்

 கட்டுப்பாடற்ற மென்பொருள் வகையை சார்ந்தது திறந்த மூல மென்பொருள். ஆங்கிலத்தில் “ஓப்பன் சோர்ஸ்- Opern Source” என குறிப்பிடுவர். பயனர்களை கட்டுப்படுத்தும் என கருதும் உரிமங்களை ஏற்றுக்கொண்டு அவற்றிலிருந்து விலக்கு அளிப்பவை திறந்த மூல மென்பொருள்.

எனினும் கட்டுப்பாடற்ற மென்பொருள் என்ற பதத்திற்கும் திறந்த மூல மென்பொருள் என்ற வார்த்தைக்கும் மயிரிழை வித்தியாசமுண்டு.

4. பொதுவுடைமை மென்பொருள்

பதிப்புரிமைப் பெறாத மென்பொருள் பொதுவுடைமை மென்பொருளாகும். மூல நிரல்கள் பொதுவுடைமையாய் இருந்தால் , அது காபிலெஃட் பெறப்படாத கட்டற்ற மென்பொருட்களுள் சிறப்பு வகையைச் சார்ந்தது.

இதன் பொருள் இவற்றின் சில நகல்கள் அல்லது மாற்றப் பட்ட வகைகள் கட்டற்று இல்லாது போகலாம்.

சில சந்தர்ப்பங்களில், இயக்கத் தக்க நிரலொன்று பொதுவுடைமையாக இருக்கலாம். ஆனால் மூல நிரல்கள் கிடைக்காது போகலாம். மூல நிரல்கள் கிடைக்கப் பெறாத காரணத்தால் இது கட்டற்ற மென்பொருளாகாது.

அதே சமயம் பெரும்பாலான கட்டற்ற மென்பொருட்கள் பொதுவுடைமையாக கிடைக்கப் பெறாது. அவை பதிப்புரிமைப் பெற்றவை. பதிப்புரிமைப் பெற்றவர்கள், கட்டற்ற மென்பொருட்கள் உரிமமொன்றினைக் கொண்டு, அதனை அனைவரும் சுதந்தரமாகப் பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளனர்.

சில சமயங்களில் மக்கள் “பொதுவுடைமை” என்பதை “இலவசம்” அல்லது “தானமாகக் கிடைப்பது” எனும் பொருள் படிக்கு ஏனோ தானோவென்று பயன்படுத்துகின்றனர். ஆனால், “பொதுவுடைமை” என்பது சட்ட ரீதியான வாசகம்.

அது பதிப்புரிமைச் செய்யப் படாதது எனக் குறிப்பாக பொருள் தருவது. தெளிவு பெறும் பொருட்டு நாங்கள்“பொதுவுடைமை” எனும் பதத்தினை அப்பொருளிலேயே பயன் படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம். வேறு பொருள்களைச் சுட்ட வேறு பதங்களை பயன்படுத்துங்கள்.

பெரும்பாலான நாடுகள் ஒப்பமிட்டுள்ள, பெர்னே உடன்படிக்கையின் படி,எழுதப் படும் எதுவுமே தானாகவே பதிப்புரிமைப் பெற்றவையாகின்றன. நிரல்களுக்கும் இது பொருந்தும்.

தாங்கள் எழுதும் நிரலொன்றைப் பொதுவுடைமையாக்க விரும்பினால், அதன் மீதான பதிப்புரிமையினை நீக்க சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டியிருக்கும். இல்லையெனில் அந்நிரல் பதிப்புரிமைப் பெற்றதே.

காபிலெப்ட் மென்பொருள்

கட்டற்ற மென்பொருளின் விநியோக விதிகள் அதனை மறு விநியோகம் செய்வோரை அங்ஙனம் மறுவிநியோகம் செய்யும் போது அதன் மீது கூடுதல் கட்டுக்களை சுமத்த அனுமதிக்காவிட்டால் அது காபிலெப்ட் மென்பொருள்.

இதன் பொருள் மென்பொருளின் பிரதியொரு நகலும், அவை மாற்றப் பட்டாலும், கட்டற்ற மென்பொருளாகவே இருக்க வேண்டும்.

குனுத் திட்டத்தில், பெரும்பாலும் நாம் இயற்றும் அனைத்து மென்பொருளையும் காபிலெப்ட் செய்வது வழக்கம். ஏனெனில் நமது இலக்கு “கட்டற்ற மென்பொருள்” எனும் பதம் வலியுறுத்தும் சுதந்தரங்களை ஒவ்வொரு பயனருக்கும் வழங்க வேண்டும் என்பதே.

மேற்கொண்டு விவரங்கள் அறியவும் நாங்கள் ஏன் அதனைப் பயன்படுத்துகிறோம் என அறியவும் காபிலெப்ட் பக்கத்தின் துணையினை நாடவும்.

காபிலெப்ட் பொதுவானதொரு கருத்தாகும். ஒரு நிரலை காபிலெப்ட் செய்வதற்குத், தாங்கள் ஒரு வகையான விநியோக விதிகளைப் பயன்படுத்த வேண்டும்.

காபிலெப்ட் விநியோக விதிகளை இயற்றப் பல வழிகள் உள்ளன. ஆக கொள்கையளவில் கட்டற்ற மென்பொருளுக்கான பல காபிலெப்ட் உரிமங்கள் இருக்கலாம். ஆனால் நடைமுறையில் காபிலெப்ட் செய்யப் படும் அனைத்து மென்பொருளும் குனு பொது மக்கள் உரிமத்தினைப் பயன்படுத்துகின்றன.

பொதுவாக இருவேறு காபிலெப்ட் உரிமங்கள் “பொருந்தாதவையாக” இருக்கும். இதன் பொருள் ஒரு உரிமத்தைப் பயன்படுத்தும் நிரலொன்றை மற்றொரு உரிமத்தைப் பயன்படுத்தும் நிரலுடன் பொருத்துவது சட்ட விரோதமாக இருக்கலாம். ஆக மக்கள் ஒரு காபிலெப்ட் உரிமத்தினைப் பயன்படுத்துவது சமூகத்திற்கு நல்லது.

காபிலெப்ட் செய்யப் படாத கட்டற்ற மென்பொருள்

மென்பொருளை இயற்றியவர் அதனை மறுவிநியோகம் செய்ய, மாற்ற மட்டுமல்லாது கூடுதல் கட்டுக்களை விதிக்க அனுமதியளித்தால் அது காபிலெப்ட் செய்யப் படாத கட்டற்ற மென்பொருள்.

ஒரு மென்பொருள் கட்டற்று இருக்கும் அதே வேளையில் காபிலெப்ட் செய்யப்படாது போனால், அதன் மாற்றப் பட்ட வகைகளின் சில நகல்கள் கட்டற்று இல்லாது போகலாம்.

மென்பொருள் நிறுவனம் ஒன்று , மாற்றியோ மாற்றதவாரோ அந்நிரலை ஒடுக்கி, அதன் இயக்கவல்லக் கோப்பினை தனியுரிம மென்பொருளாக விநியோகிக்கலாம்.

எக்ஸ் விண்டோஸ் முறை இதற்கான சான்றாகும். எக்ஸ் கன்சார்டியம் எக்ஸ்11 னை வெளியிடும் விதிகளின் படி அது காபிலெப்ட் செய்யப்படாத கட்டற்ற மென்பொருளாகும்.

தாங்கள் விரும்பினால் அவ்விதிகளைக் கொண்டதும் கட்டற்றதுமான அம்மென்பொருளை தங்களால் பெற முடியும். அதே சமயம் கட்டுடைய வகைகளும் உள்ளன. பிரபலமான கணினிகள் மற்றும் வரைகலைத் தகடுகள் கிடைக்கப் பெறுகின்றன.

அவற்றுள் கட்டுடைய வகைகள் மாத்திரமே இயங்கும். தாங்கள் இவ்வன்பொருளைப் பயன்படுத்தினால், எக்ஸ்11 தங்களைப் பொருத்த மட்டில் கட்டற்ற மென்பொருளாகாது. எக்ஸ்11 னை உருவாக்குவோர் சில காலங்களுக்கு எக்ஸ்11 யையே கட்டுடையதாக்கி வைத்திருந்தனர்.

ஜிபிஎல் வகை மென்பொருள்

நிரலொன்றை காபிலெப்ட் செய்ய பயன்படும் விநியோக விதிகளுள் குனு பொது மக்கள் உரிமமும் ஒன்று. பெரும்பாலான குனு மென்பொருட்களுக்கு குனு திட்டம் அதனையே விநியோகிப்பதற்கான விதியாகப் பயன்படுத்துகின்றது.

குனு இயங்குதளம்

முற்றிலும் கட்டற்ற மென்பொருளால், நாங்கள் 1984 லிருந்து உருவாக்கிய யுனிக்ஸ் போன்றதொரு இயங்கு தளம் குனு அமைப்பாகும்.

யுனிக்ஸ் போன்றதொரு இயங்குதளம் பல நிரல்களைக் கொண்டது. குனு அமைப்பு அனைத்து குனு மென்பொருட்களையும் டெக்ஸ், எக்ஸ் விண்டோ அமைப்பு போன்ற குனு அல்லாத மென்பொருளையும் உள்ளடக்கியது.

முழுமையான குனு அமைப்பின் முதல் சோதனை வெளியீடு 1996 ல் இருந்தது. இது 1990 லிருந்து உருவாக்கப் பட்டு வந்த குனு ஹர்டினையும் உள்ளடக்கியிருந்தது. 2001ல் குனு அமைப்பு (குனு ஹர்ட்டும் உள்ளடக்கிய) ஓரளவுக்கு நம்பகத் தன்மை வாய்ந்ததாக பணி புரியத் துவங்கியது.

ஆனால் ஹர்ட் இன்னும் சில முக்கியமான அம்சங்கள் இல்லாது இருக்கிறது. அதனால் அது பரவலாகப் பயன்படுத்தப் படுவதில்லை. அதே சமயம், குனுவின் விரிவாக்கமாகிய, லினக்ஸினைக் கருவாகப் பயன்படுத்தும் குனு/ லினக்ஸ் அமைப்பு 1990 லிருந்து மிகப் பெரிய வெற்றியினைத் தந்துள்ளது.

கட்டற்று இருப்பதுவே குனுவின் நோக்கமாகையால், குனு அமைப்பின் ஒவ்வொரு பாகமும் கட்டற்ற மென்பொருளைக் கொண்டிருக்க வேண்டும்.

அவை அனைத்தும் காபிலெப்ட் பெற்றிருக்க வேண்டும் என்றில்லை. ஆயினும், தொழில்நுட்ப இலக்குகளை அடைய உதவும் எந்தவொரு கட்டற்ற மென்பொருளும் சட்டப் படி பொருந்துதற் குகந்ததே.

குனுநிரல்கள்

குனு மென்பொருட்களுக்கு நிகரானவை குனு நிரல்களாகும். பூ எனும் பெயர் கொண்ட நிரல் குனு மென்பொருளானால் அது குனு நிரலாகும். சில சமயங்களில் அதனை நாங்கள் “குனு பொதி” எனவும் வழங்குவதுண்டு.

குனு மென்பொருள்

குனு திட்டத்தின் மேற்பார்வையில் வெளியிடப் படும் மென்பொருள்குனு மென்பொருள் ஆகும். ஒரு மென்பொருள் குனு மென்பொருள் என்றால் அதனை நாங்கள் குனு நிரல் அல்லது குனு பொதி எனவும் வழங்குவோம்.

எம்மை வாசி அல்லது குனு பொதியின் உதவிக் கையேடு அவை ஒன்றெனவே சொல்லும். மேலும் கட்டற்ற மென்பொருள் பட்டியல் அனைத்து குனு பொதிகளையும் இனங்காணும்.

பெரும்பாலான குனு மென்பொருள் காபிலெப்ட் செய்யப் பட்டது. ஆனால் அனைத்தும் அல்ல. ஆனால் அனைத்து குனு மென்பொருளும் கட்டாயம் கட்டற்ற மென்பொருளாக இருத்தல் வேண்டும்.

குனு மென்பொருட்களுள் சில கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளையின் பணியாளர்களால் இயற்றப் பட்டுள்ளன. ஆனால் பெரும்பாலான குனு மென்பொருட்கள் தன்னார்வலர்களால் பங்களிக்கப் பட்டவை.

பங்களிக்கப் பட்ட சில மென்பொருட்களுள் சிலவற்றுக்கு கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை பதிப்புரிமைப் பெற்றுள்ளது. சில அதனை இயற்றியவரின் பதிப்புரிமைப் பெற்றவை.

கட்டுடைய மென்பொருள்

கட்டற்ற மென்பொருளுள் அடங்காதவை கட்டுடைய மென்பொருளாகும். அதன் பயன்பாடு, மறுவிநியோகம் அல்லது மாற்றம் தடை செய்யப் பட்டிருக்கும்.

அல்லது அதற்கென தாங்கள் அனுமதி பெற வேண்டியிருக்கும் அல்லது கட்டற்று செய்ய இயலாத படிக்கு அதிகத் தடைகளை கொண்டிருக்கும்.

தனியுரிம மென்பொருள்

கட்டுடைய மென்பொருள் நிகரானவை தனியுரிம மென்பொருளாகும்.

தனியுரிம மென்பொருளொன்றுக்கு மாற்றினை இயற்றும் ஒரு நோக்கத்தினைத் தவிர வேறெந்த நோக்கத்திற்காகவும் எங்கள் கணினிகளில் தனியுரிம மென்பொருட்களை நிறுவ இயலாது எனும் நெறியினை கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை கடைபிடிக்கின்றது.

இதைத் தவிர்த்து தனியுரிம மென்பொருளை நிறுவதற்கான காரணம் எதுவும் இருப்பதாக எங்களுக்குத் தோன்றவில்லை.

உதாரணத்திற்கு 1980 களில் யுனிக்ஸினை எங்கள் கணினிகளில் நிறுவுவதை நாங்கள் ஏற்புடையதாகக் கருதினோம். ஏனெனில் அதனை யுனிக்ஸுக்கு கட்டற்ற மாற்றினைப் இயற்ற பயன்படுத்திவந்தோம்.

தற்சமயம், கட்டற்ற இயங்குதளங்கள் கிடைக்கின்ற காரணத்தால், இக்காரணம் இனியும் பொருந்தாது. எங்களிடத்திருந்த அனைத்து கட்டுடைய இயங்குதளங்களையும் நாங்கள் ஒழித்து விட்டோம்.

நாங்கள் நிறுவும் எந்த வொரு கணினியும் இனி கட்டற்ற இயங்கு தளங்களைக் கொண்டே இயங்க வேண்டும். குனுவின் பயனர்களோ அல்லது குனுவிற்கு பங்களிப்பவர்களோ இவ்விதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை.

இது எங்களுக்கு நாங்களே விதித்துக் கொண்ட ஒன்று. ஆனால் தாங்களும் அங்ஙனம் கடைபிடிக்கத் தீர்மானிப்பீர்கள் என நம்புகின்றோம்.

இலவச மென்பொருள்

“இலவச மென்பொருள்” எனும் பதத்திற்கு ஏற்கத் தக்க எந்தவொரு விளக்கமும் இல்லை. ஆனால் பொதுவாக அவை மாற்றத்தினை அனுமதிக்காது, (அவற்றின் மூல நிரல்கள் கிடைக்கப் பெறாததால்) மறுவிநியோகத்தினை அனுமதிக்கும் பொதிகளைக் குறிக்கப் பயன்படுகின்றன.

இப்பொதிகள் கட்டற்ற மென்பொருள் அல்ல. ஆகையால் “இலவச மென்பொருள்” என்பதைக் கட்டற்ற மென்பொருளைக் குறிக்க பயன்படுத்த வேண்டாம்.

பகிர் மென்பொருள்

மறுவிநியோகம் செய்வதற்கான அனுமதியுடன், அதே சமயம் நகலொன்றைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்தும் ஒருவர் உரிமக் கட்டணத்தை செலுத்த வேண்டும் எனச் சொல்வது பகிர் மென்பொருளாகும்.

பகிர் மென்பொருள் கட்டற்ற மென்பொருளும் அல்ல குறை கட்டற்ற மென்பொருளும் அல்ல. அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன:

பெரும்பாலான பகிர் மென்பொருட்களுக்கு மூல நிரல்கள் கிடைப்பதில்லை.எனவே தங்களால் நிரலை மாற்றுவது என்பது முடியவே முடியாது.

நகலெடுக்கவோ நிறுவவோ உரிமக் கட்டணம் செலுத்தாது பயன்படுத்தும் அனுமதியுடன் பகிர் மென்பொருள் வருவதில்லை. இலாப நோக்கமற்ற செயல்களுக்காகப் பயன்படுத்தும் மக்களுக்கும் இது பொருந்தும்.

(நடைமுறையில் மக்கள் விநியோக விதிகளை புறக்கணித்து விட்டு நிறுவி விடுவார்கள், ஆனால் விதிகள் அதனை அனுமதியாது.)

தனியார் மென்பொருள்

பயனர் ஒருவருக்காக உருவாக்கப் படும் மென்பொருள் தனியார் மென்பொருளாகும் (சாதாரணமாக ஒரு அமைப்பிற்கோ அல்லது நிறுவனத்திற்கோ).

அப்பயனர் அதனை தன்னகத்தெ வைத்துக் கொண்டு பயன்படுத்துவார். அதன் மூல நிரல்களையோ அல்லது இருமங்களையோ வெளியிட மாட்டார்.

தனியார் நிரலானது அதன் பிரத்யேகப் பயனர் அதன் மீது முழு உரிமமும் கொண்டிருந்தால் அதிக முக்கியத்துவமல்லாத கட்டற்ற மென்பொருளாகிறது.

 ஆனால், ஆழ்ந்து நோக்குகின்ற பொழுது அத்தகைய மென்பொருள் கட்டற்ற மென்பொருளா இல்லையா எனக் கேட்பதில் அர்த்தம் எதுவும் இல்லை.

பொதுவாக நிரலொன்றை உருவாக்கிவிட்டு அதனை வெளியிடாது இருப்பதை தவறாக நாங்கள் கருதுவது இல்லை. மிகவும் பயனுள்ள ஒரு நிரலை வெளியிடாது இருப்பது மானுடத்தை சங்கடத்திற்கு உள்ளாக்குவது எனத் தோன்றும் சந்தர்ப்பங்களும் உண்டு.

ஆயினும் பெரும்பாலான நிரல்கள் அப்படியொன்றும் பிரமாதமானவை அல்ல. அவற்றை வெளியிடாது இருப்பதால் குறிப்பாக எந்தத் தீமையும் இல்லை. ஆக கட்டற்ற மென்பொருள் இயக்கத்தின் கொள்கைகளுக்கும் தனியார் மென்பொருள் உருவாக்கத்திற்கும் எந்த முரண்பாடும் கிடையாது.

பெரும்பாலும் நிரலாளர்களுக்கான அனைத்து வேலை வாய்ப்புகளுமே தனியார் மென்பொருள் உருவாக்கத்தில் தான் உள்ளன. ஆகையால் பெரும்பாலான நிரலாக்கப் பணிகள் கட்டற்ற மென்பொருள் இயக்கத்தோடு பொருந்துகின்ற வகையில் இருக்கலாம் அல்லது இருக்கின்றன.

வர்த்தக மென்பொருள்

மென்பொருளின் பயன்பாட்டால் பணம் ஈட்டும் பொருட்டு வணிக நிறுவனமொன்றால் உருவாக்கப் படும் மென்பொருள் வர்த்தக மென்பொருளாகும்.“வர்த்தகம்” மற்றும் “தனியுரிமம்” இரண்டும் ஒன்றல்ல. மிகையான வர்த்தக நோக்கமுடையது தனியுரிம மென்பொருள்.

ஆனால் வர்த்தக ரீதியான கட்டற்ற மென்பொருளும் உண்டு, வர்த்தக நோக்கமற்ற கட்டுடைய மென்பொருளும் உண்டு.

உதாரணத்திற்கு குனு அடா எப்பொழுதுமே குனு பொது மக்கள் உரிமத்தின் கீழ் விநியோகிக்கப் படுகின்றது. மேலும் அதன் ஒவ்வொரு நகலும் கட்டற்ற மென்பொருளாகும்.

ஆனால் அதனை உருவாக்குவோர் ஆதரவு ஒப்பந்தங்களை விற்பார்கள். அதன் விற்பனைப் பிரதிநிதி நல்ல வாடிக்கையாளர்களைத் தொடர்புக் கொள்ளும் போது , சில சமயம் வாடிக்கையாளர், “வர்த்தக ஒடுக்கி ஒன்று எங்களுக்கு போதுமானதாக இருக்கும் எனச் சொல்வதுண்டு.”

“குனு அடா ஒரு வர்த்தக ஒடுக்கி. அது கட்டற்ற மென்பொருளும் கூட என விற்பனையாளர் பதிலளிப்பார்.”

குனு திட்டத்தைப் பொறுத்த வரையில் முக்கியத்துவம் வேறு விதமாக இருக்கின்றது. முக்கியமான விடயம் யாதெனில் குனு அடா ஒரு கட்டற்ற மென்பொருள்.

அது வர்த்தக ரீதியானதா என்பது முக்கியமானக் கேள்வியன்று. குனு அடா வர்த்தக ரீதியாக இருப்பதால் ஏற்படும் கூடுதல் உருவாக்கம் நிச்சயம் பயனுள்ளதே.

வர்த்தக ரீதியான கட்டற்ற மென்பொருள் சாத்தியம் எனும் விழிப்புணர்வை ஏற்படுத்த உதவுங்கள். “தனியுரிமம்” எனும் போது “வர்த்தக ரீதியானது” எனச் சொல்லாது இருக்க முயற்சிப்பதன் மூலம் இதனைத் தாங்கள் செய்யலாம்.

நன்றி: குனு இயங்குதளம்

RELATED ARTICLES

Most Popular

Recent Comments