இந்த வசதியால் பேஸ்புக்கில் இனி கஷ்டப்பட்டு டெக்ஸ்ட் டைப் செய்திட தேவையில்லை. Voice Clip வசதியை பயன்படுத்தி பேசியே ஸ்டேடஸ் போட்டுவிடலாம்.
எப்படி இந்த வசதியை கொண்டு வருவது?
உங்களுடைய மொபைல் பேஸ்புக் ஆட்டோமேட்டிக் அப்டேட்டில் இருந்தால் உங்களுக்கு அந்த வசதி தானாகவே வந்திருக்கும். அல்லது நீங்கள் உங்களுடைய பேஸ்புக் ஆப் அப்டேட் செய்திட வேண்டும். மொபைலில் பேஸ்புக் ஆப்பை அப்டேட் செய்து விட்டு, அதில் டெக்ஸ்ட் (Text) டைப் செய்ய வேண்டிய இடத்தில் டச் செய்தால் உங்களுக்கு இப்படி ஒரு ஆப்சன் காட்டும்.
பிறகு Record என்பதை கிளிக் செய்யவும்.
நினைத்ததை பேசவும். பேசி முடித்த பிறகு Stop அழுத்தவும்.
அவ்வளவுதான். இனி அருகில் இருக்கும் next என்பதை டச் செய்தால், அந்த ஆடியோ கிளிப் ஸ்டேடஸ் பகிர தயாராக இருக்கும்.
மேலே உள்ள Share என்பதினை டச் செய்தால், அது டைம் லைனில் Status ஆக பதிந்துவிடும். அதை நண்பர்கள் டச் செய்து கேட்டு தெரிந்துகொள்ளலாம்.
கீழுள்ள வீடியோ மிகத்தெளிவாக இந்த வசதியை எப்படி பயன்படுத்துவது என விளக்குகிறது. பார்த்து பயன்பெறுங்கள்.
வீடியோவில் காட்டப்பட்டிருப்பதை போலவே நீங்களும் இனி வாய்ஸ் போஸ்ட் செய்து உங்களுடைய நேரத்தை மிச்சப்படுத்தலாம்.
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு ஷேர் செய்ய மறக்காதீர்கள்.
Tags: Facebook tips, Facebook update, voice message in Facebook.