இணையதளங்களில் வீடியோ பார்யிட உதவும் மென்பொருள் Adobe Inc Flash. இதன் மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ, ப்ளாஷ் போன்றவற்றை வலைத்தளங்களில் பதிவேற்றுவர்.
அந்த வெப்சைட் பார்வையிடும்பொழுது, அதில் உள்ள வீடியோவினை காண கட்டாயம் கம்ப்யூட்டரில் Adobe Flash இருக்க வேண்டும்.
அது இருந்தால் மட்டுமே வலைத்தளங்களில் உள்ள வீடியோவினை ப்ளே செய்து பார்க்க முடியும்.
ஃபிளாஷ் மென்பொருளை பயன்படுத்தியே கணனி விளையாட்டுகள், வீடியோ பிளேயர்கள் மற்றும் அப்ளிகேஷன்கள் மேம்படுத்தப்பட்டன.
அப்பிள் இன்க், மைக்ரோசொப்ட் கோர்ப், அல்பட்டி இன்க்கின் கூகுள், பேஸ்புக் இன்க் மற்றும் மொசில்லா கோர்ப் நிறுவனங்களின் பங்காளியான அடொப், தனது ஃப்ளாஷ் தொழில்நுட்பம் அடுத்த மூன்று ஆண்டுகளில் இணையதளத்தில் சரிவை சந்திக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.
எனவே 2020ஆம் ஆண்டுக்கு பின்னர் கைவிடப்படும் என்று அந்த மென்பொருள் நிறுவனம் அறிவித்துள்ளது.
2020 ஆம் ஆண்டுக்கு பின் ஃப்ளாஷ் அப்டேட்டுகள் வெளியிடப்படாது என்று குறிப்பிட்டிருக்கும் அடொப், இணைய உலாவிகள் அந்த மென்பொருளுக்கு ஏதுவாக இருக்காது என்றும் குறிப்பிட்டுள்ளது.
நிறுவனங்கள் தமது மென்பொருட்களை நவீன தரத்திற்கு மாற்ற ஊக்கமளித்து வருகின்ற நிலையிலேயே ஃப்ளாஷ் தொழில்நுட்பத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
ஆப்பிளின் ஐபோன்கள் பிளாஷின் உதவியின்றி அமைக்கப்பட்டதை அடுத்து Adobe Flash ன் முக்கியத்துவம் சரிய ஆரம்பித்தது. இந்நிலையில் அதன் போட்டி தொழில்நுட்பமான HTML5 அதிகம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
Tags: Adobe Flash, Flash Software, Video Software, Adobe