Monday, December 23, 2024
Hometurbo c++Turbo C++ இன்ஸ்டால் செய்வது எப்படி?

Turbo C++ இன்ஸ்டால் செய்வது எப்படி?

how to install turbo c++

C++ கணினி மொழி கற்றுக்கொள்ள உதவும் ஒரு மென்பொருள் Turbo C++. இது இருந்தால் C++ மிக எளிதாக கற்றுக்கொள்ளலாம். உங்கள் கணினியில் ’டர்போ சி++ எப்படி நிறுவுவது (Install) என தெரிந்துகொள்வோம்.

டர்போ சி ப்ளஸ் பிளஸ் நிறுவும் முறை:

  • டர்போ சி ++ கீழுள்ள சுட்டியின் மூலம் தரவிறக்கம் (Download) செய்து கொள்ளுங்கள்.
  • பிறகு அதில் இருக்கும்   சோர்ஸ் டிரைவினை தேர்ந்தெடுத்து இயக்கவும். பெரும்பாலும் C டிரைவில்தான் extract செய்யப்பப்பட்ட கோப்பு இருக்கும்.
  • அடுத்து திரையில், Install.exe இருக்கும் போல்டர் காட்டப்படும். இப்பொழுது enter தட்டவும்.
  • அடுத்து தோன்றும் திரையில் சில ஆப்சன்கள் காட்டும். அதில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்யாம் F9 பட்டனை அழுத்தவும். அவ்வளவுதான்.

முக்கியமாக செய்ய வேண்டிய மாற்றம் ஒன்று உள்ளது. அது கமாண்ட் பிராம்பட்டில் எந்த போல்டரில் இருந்தும் TC என தட்டசிட்டு enter கொடுத்தால் turbo c++ இயங்க வேண்டும். அதற்கு Path variable – இல் C:/TC/BIN என்று சேர்க்க வேண்டும்.

ஏற்கனவே Path variable -ல் இருப்பதோடு அதை நீக்காமல், அதனுடன் தொடர்ச்சியாக C:/TC/BIN என்பதை இணைக்க வேண்டும். எப்படியென்றால் பாத்வேரியபிளின் முடிவில் ஒரு செமகோலன் உள்ளீடு செய்து அதற்கு பிறகு C:TCBIN என உள்ளீடு செய்ய வேண்டும்.

இறுதியில் பாத்வேரியபிள் அப்டேட் செய்வதற்கு உங்கள் கம்ப்யூட்டரை ஒரு முறை ரீஸ்டார்ட் செய்திடுங்கள்.

ரீஸ்டார்ட் ஆகி முடிந்தவுடன் டர்போ சி ++ பயன்படுத்தத்தொடங்கலாம்.

How to install Turbo C++ in Windows 7 (VIDEO)

RELATED ARTICLES

Most Popular

Recent Comments