Tuesday, January 21, 2025
HomeAndroidஆன்ட்ராய்ட் போன் ரூட் செய்வது எப்படி?

ஆன்ட்ராய்ட் போன் ரூட் செய்வது எப்படி?

ஆன்ட்ராய்ட் ரூட் செய்வது என்றால் என்ன?

ஆன்ட்ராய்ட் ரூட் செய்வது என்பது, ஏற்கனவே மொபைல் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் System File களை நமது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரும் ஒரு செயல்.

இதனால் பல நன்மைகள் உண்டு. சில தீமைகளும் உண்டு.

நன்மைகள்:
1. சாதாரணமாக நாம் ஆன்ட்ராய்ட் போனில் இன்ஸ்டால் செய்ய முடியாத பல நன்மை தரும் அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்ய முடியும்.

உ.ம். TITANIUM BACKUP, ROOT BROWSER, FONT INSTALLER, SCREEN RECORDER போன்றவை.

2. விதவிதமான ஃபாண்ட்களை இன்ஸ்டால் செய்துகொள்ள முடியும். (Including Tamil Fonts.)

3. மேலும் பல அற்புதமான வசதிகளை அதில் பெறலாம்.

தீமைகள்:

1. வைரஸ் பிரச்னைகளை சந்திக்க வேண்டி வரும். இது அதிர்ச்சியாக இருக்கும். ஆனால் ரூட்செய்வதால் கிடைக்கும் நன்மைகளுக்கு ஒப்பிடும்பொழுது இது சர்வ சதாரணம்.

ஏதேனும் வைரஸ் எதிர்ப்பு செயலியை இன்ஸ்டால் செய்து, இந்த பிரச்னைக்கு தீர்வு காணலாம்.

2. Warranty போவது. ஆம். புதிய மொபைல் போன்கள் எனில் ‘ரூட்’ செய்த பிறகு, Warranty கிடைக்கப் பெறாது.

எனவே புதிய மொபைல்களை ரூய் செய்வதாக இருப்பின், அதன் வாரண்டி கால இறுதியில் செய்துகொள்ளலாம்.

எப்படி ரூட் செய்வது?

இரண்டு வழிகளில் செய்யலாம்.

1. PC துணையுடன், KINGO ANDROID ROOT மென்பொருள் இன்ஸ்டால் செய்து ரூட் செய்வது.

2. மொபைல் பிரசௌரில் ரூட்டிங் அப்ளிகேஷன் டவுன்லோட் செய்து, அதை இயக்கி ரூட் செய்வது.

இரண்டாம் முறை எளிதாக இருக்கும். ஆனால் ரூட் ஆகியிருப்பதை உறுதி செய்ய, அதற்கென இருக்கும் மற்றொரு செயலியை இன்ஸ்டால் செய்து உறுதி செய்திடல் வேண்டும்.

முதல் வழிமுறை சிறந்ததாக இருக்கும்.

அதற்கான வழிமுறைகள் கீழே உள்ளது. படித்து பயன்பெறுங்கள். ஆன்ட்ராய்ட் போன் ரூட் செய்வது குறித்த வீடியோ பதிவு கீழே உள்ளது.

How To Root Android Phone Device Using PC & KINGO ANDROID ROOT (Video)

How to Root Android Phone Without PC – One Click Method (video)

ஆன்ட்ராய்ட் போன் ரூட் செய்வது குறித்து கேள்வி பட்டிருப்பீர்கள். அதென்ன ’ஆன்ர்டாய்ட் ரூட்’ என்று ஒரு சந்தேகம் எழுகிறதா?

அப்படியென்றால் நீங்கள் இது குறித்து முழுமையாக அறிந்துகொள்ள விருப்பம் கொண்டீருக்கிறீர்கள் என பொருள். வாருங்கள் ஆன்ட்ராய்ட் போன் ரூட் செய்வது குறித்து தெரிந்துகொள்வோம்.

ஆன்ட்ராய்ட் ரூட்டிங் என்றால் என்ன?
நீங்கள் பயன்படுத்தும் ஆன்ட்ராய்ட் போனில் பல அப்ளிகேஷன்கள் இன்ஸ்டால் செய்து வைத்திருப்பீர்கள். ஆனால், அதில் குறிப்பிட்ட அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்ய முடியாது.

காரணம் அது ரூட்டிங் செய்யப்பட்ட மொபைல் போன்களில் மட்டுமே இன்ஸ்டால் செய்ய முடிவதாக இருக்கும். 

உதாரணமாக, TITANIUM BACKUP, ROOT BROWSER, FONT INSTALLER, SCREEN RECORDER  போன்ற அப்ளிகேஷன்கள் ரூட் செய்யப்பட்ட மொபைல் போனில் மட்டுமே இயங்கும்.
பொதுவாக ANDROID SYSTEN FILE-கள் அனைத்தும் மொபைல் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். அதனால் அதிலிருக்கும் SYSTEM FILEஐ உங்களால் COPY செய்யவோ அதில் எதாவது ஒரு FILEஐ PASTE செய்யவோ இயலாது.

ஆனால் ROOT செய்வதனால் SYSTEM FILEஐ முழுமையாக உங்கள் கட்டுப்பாட்டிற்க்கு SUPER USER உதவியுடன் கொண்டுவர முடியும்.

இதனால் நீங்கள் ஒரு FONTஐ கூட எளிமையாக இன்ஸ்டால் செய்திட முடியும் EXAMBLE சிலரது மொபைல்களில் தமிழ் FONT SUPPORT ஆவது இல்லை. ரூட் செய்வதன் மூலம் எளிமையாக உங்களது மொபைலில் தமிழ் FONTஐ INSTALL செய்யலாம்.

ஆன்ட்ராய்ட் போன் ரூட் செய்வது எப்படி?

அது மிக சுலபம்தான்.

1. உங்களிடம் ஒரு கம்ப்யூட்டர் கட்டாயம் இருக்க வேண்டும். 
2. மொபைல் Data Cable
3. ரூட் செய்ய உதவிடும் KINGO ANDROID ROOT மென்பொருள்.
வழிமுறைகள்:

  • முதலில் கிங் ஆன்ட்ராய்ட் ரூட் மென்பொருளை INSTALL கம்ப்யூட்டரில் செய்து கொள்ளுங்கள்.
  • உங்களுடைய மொபைலில் SETTINGS பகுதிக்கு சென்று DEVELOPER OPTIONS > USB DEBUGGINGஐ ENABLE செய்துகொள்ளுங்கள்
  • உங்களது மொபைலிற்க்கான USB DRIVERஐ கனினியில் நிறுவிக்கொள்ளுங்கள் (ஏற்கனவே இருக்கும் பட்சத்தில் அவசியம் இல்லை )
  • இப்பொழுது KINGO ANDROID ROOTERஐ OPEN செய்து
  • கனினியுடன் உங்களது போனை DATA CABLE வழியாக இனையுங்கள் சிறிது நேரத்தில் KINGO ANDROID ROOT உங்களது போன் MODEL எண்ணை காண்பித்து ROOT செய்ய அனுமதி கேட்கும் அனுமதி பெறப்பட்டதும் ROOT செயல்பாடு 2 நிமிடங்கள் நடைபெறும் முடிவில் உங்களது போன் RESTART ஆகும்.
அவ்வளவுதான்.

இப்போது MENUவில் சென்று பாருங்கள் SUPER USER என்ற APPLICATION INSTALL செய்யப்பட்டிருக்கும் அதுதான் உங்களது போன் ROOT செய்யப்பட்டிருப்பதற்கான அடையாளம்.

PC இல்லாமல் ஆன்ட்ராய்ட் போன் ரூட் செய்வது எப்படி?

தற்பொழுது கம்ப்யூட்டர் இல்லாமலேயே மிக எளிதாக “ஆன்ட்ராய்ட் போன்” ரூட் செய்திடலாம். அதற்கு பயன்படுகிறது Framaroot app என்ற ஆன்ட்ராய்ட் செயலி. இந்த செயலியை நேரடியாக உங்கள் மொபைல் பிரௌசர் மூலம் டவுன்லோட் செய்து, அதை இயக்கி, மொபைல் போனை ரூட் செய்திடலாம்.

ரூட் செய்வதால் ஏற்படும் தீமைகள்: 

ஆம். கட்டாயம் சில பின்னடைவுகள் இருக்கும். ஆனால் அதைவிட நன்மைகள் பல உண்டு.

ROOT செய்வதினால் SYSTEM FILE உங்களின் கட்டுப்பாட்டிற்க்கு வந்துவிடும் என்பதால் PROGRAMMING ERASER அதாவது VIRUS உங்களது போனை எளிமையாக தாக்கக்கூடிய அபாயம் இருக்கிறது ஆதலால் மிகவும் கவனமுடன் செயல்படுங்கள்.

ROOTசெய்யப்பட்ட  MOBILEகளுக்கு அதனுடைய நிறுவனததாரிடமிருந்து WARRENTY உங்களுக்கு கிடைக்கப்பெற மாட்டாது     அதனால் WARRENTY காலம் முடியும் தருவாயில் இதனை செய்வது நல்லது.

Tags: android phone rooting, how root android phone in Tamil, android phone tips. 

RELATED ARTICLES

1 COMMENT

  1. ஆன்ட்ராய்ட் போன் ரூட் மெத்தேட் அறிந்துகொண்டேன். நன்றி.

Comments are closed.

Most Popular

Recent Comments