தொடர்ந்து கம்ப்யூட்டரில் பணி புரிபவர்களுக்கு கண்களில் சோர்வு ஏற்படும். அதைத் தவிர்த்திட, 20 நிமிடங்களுக்கு ஒருமுறை பார்வை வேறொரு திசைக்கு திருப்புதல், எழுந்து நடத்தல், கண் சிமிட்டல் என சில செய்கைகளை செய்வதன் மூலம் அதன் பாதிப்பை குறைத்திடலாம்.
எனினும், கணினி திரையிலிருந்து வெளிப்படும் ஒளிக்கற்றைகள் கண்களில் பாதிப்பை ஏற்படுத்துவதை தவிர்த்திட முடியாது.
அதை தவிர்த்திட வேண்டுமெனில் கணினித் திரையின் வெளிச்சம், அது வெளிப்படுத்தும் வெப்பம் போன்றவற்றை சரியான அளவில் வைத்திட வேண்டும்.
மேலும் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒருமுறை கண்களுக்கான பயிற்சிகளை மேற்கொள்ள நினைவுபடுத்தல் அவ்வப்பொழுது நிகழ்ந்திட வேண்டும்.
இந்த செயல்களைச் செய்வதற்கென்றே சில மென்பொருட்கள் உள்ளன. அவைகள் உங்கள் கண்களை சிரமத்திலிருந்து பாதுகாத்திடும். அந்த மென்பொருட்களைப் பற்றி இப்பதிவில் தெரிந்துகொள்வோம்.
1. F.lux
இந்த மென்பொருள் உருவாக்கப்பட்டதின் நோக்கமே நாள், நேரத்திற்கு ஏற்ப கணினி திரையின் வண்ணங்களை மாற்றி அமைப்பதுதான்.
மிகச்சிறப்பாக செயல்படும் இம்மென்பொருள் உங்களுடைய சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப, கணினி திரையின் வெளிச்சம்/வண்ணத்தை மாற்றி அமைக்கிறது.
இம்மென்பொருள் OS X, Windows, Linux, iOS கணினிகள் அனைத்திற்கும் கிடைக்கிறது.
2. Awareness
கணினி பணிக்கிடையில் குறிப்பிட்ட நேர இடைவெளியில் நீங்கள் ஓய்வு எடுக்க நினைப்படுத்திடும் மென்பொருள் இது.
ஆழ்ந்த பணிக்கிடையில் இதுபோன்று நினைவு படுத்திடும் மென்பொருள் மிக அவசியம். அதற்கான நேரம், அலாரம் போன்றவற்றை நீங்களே இதில் அமைத்திடலாம்.
3. Timeout Free
இது குறிப்பிட்ட நேர இடைவெளியில் கணினி திரையை மங்கலாக மாற்றிவிட்டு, நீங்கள் எவ்வளவு நேரம் கணினியில் பணி புரிந்தீர்கள் என்பதையும், எவ்வளவு நேரம் ஓய்வு எடுக்க வேண்டும் என்பதையும் அதில் காட்டும். இதில் இரு முறைகள் உண்டு. Normal Mode, Micro Mode.
4. Protect Your Vision
குறிப்பிட்ட நேரத்தில் குறுகிய ஓய்வு எடுத்திட நினைவு படுத்திடும் மென்பொருள் இது. ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் 20நொடி ஓய்வு எடுத்த 20 அடி தொலைவில் உள்ள பொருளை பார்த்திட வலியுறுத்தும்.
அல்லது ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 5 நிமிடம் ஓய்வு எடுத்திட வலியுறுத்தும். இந்த இரண்டு வழிமுறைகள் உங்களுக்கு உகந்ததில்லை எனில் நீங்களே உங்களுக்கு ஏற்றவாறு நேரங்களை மாற்றி அமைத்திடலாம்.
இதுபோன்று,
- Shades
- Pangobright
- EyeLeo
- Calise
- Twilight