உயிர் பற்றிய பயம் மற்றும் குடும்பம் பற்றிய கவலை இல்லாதோர்தான் அவ்வாறு முன்னெச்சரிக்கையாக இல்லாமல் அசாரணமாக செல்கின்றனர். சாதாரணமாக சாலையில் சென்று கொண்டிருப்பவர்களைக் கூட வழியில் குறிக்கிடும் நாய், பன்றி, ஆடு, மாடு போன்ற கால்நடைகளால் விபத்து ஏற்பட்டு விடுகிறது.
உடலில் நோய் மற்றும் பிற பிரச்னைகளால் திடீரென பொது இடங்களில் விழுந்து மயங்கி விடுவோர் உண்டு.
அதுபோன்றவர்களுக்கு உடனடியாக உதவிட 108 ஆம்புலன்ஸ் போன்ற சேவை இருப்பினும், அவர்களைப் பற்றிய தகவல்களை உறவினர்/நண்பர்களுகுத் தெரிவிப்பது சிரம மான காரியமாக உள்ளது.
அதுபோன்ற விபத்து/ஆபத்து நேரத்தில் உடனடியாக விபத்தில் சிக்கியவர்களின் உறவினர் மற்றும் நண்பர்களுக்கு தகவல் தெரிவித்திட உதவுகிறது இந்த செட்டிங்ஸ்.
இதைச் செய்வதன் மூலம் போனின் PATTERN LOCK, PASSWORD, FINGER PRINT கொடுக்காமலேயே Emergency Contact இருக்கும் எண்களுக்கு அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.
அவசர காலங்களில் தகவல்களை உடனடியாக தெரிவிக்க இந்த முறை உதவுகிறது.
எப்படி அவசரகால அழைப்புகள் மேற்கொள்ள எண்களை அமைப்பது?
- ஸ்மார்ட்போனில் contacts செல்லவும்.
- அதில் groups என்ற option இருக்கும்
- அதை ஓபன் செய்தால் ICE- Emergency contacts இருக்கும்.
- அதில் உங்கள் பெற்றோர், சகோதரர், உறவினர், நண்பர்கள் உள்ளிட்ட நெருக்கமானவர்களின் அலைபேசி எண்களை உள்ளிட்டு சேமித்து (SAVE) விடவும்.
அவ்வளவுதான். இனி அவசரகாலங்களில் உங்களுடைய போனிலிருந்து நீங்கள் குறிப்பிட்டு வைத்துள்ள எண்களுக்கு அழைப்புகளை மேற்கொண்டு உடனடியாக தகவல்களை உறவினர்/நண்பருக்கு தெரிவிக்க முடியும்.
அவசரகாலங்களில் போன் லாக் எடுக்காமல் எப்படி போன் செய்வது?
- போன் லாக்கில் இருக்கும் போது, லாக்கின் கீழே emergency calls-ஐ க்ளிக்
- செய்தால், number pad open ஆகும்.
- அதில் உள்ள contact symbol ஐ க்ளிக் செய்தால் அதில் Save செய்யப்பட எண்கள் காண்பிக்கும்.
- அதில் உள்ள அலைபேசி எண்களுக்கு உடனே தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்க முடியும்.
நிச்சயமாக இந்த தகவல் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். ஒவ்வொருவரும் இந்த செட்டிங்சை போனில் மறக்காமல் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.
Tags: Emergency, Screen lock, Emergency Contacts.