இணையதளங்கள் மூலம் பயனர்களின் தகவல்கள் திருடப்படுவது தற்பொழுது வாடிக்கையாகிவிட்டது. அதற்கு பேஸ்புக் மட்டும் விதிவிலக்கல்ல.
சமீபத்தில் பேஸ்புக் பயனர்களின் தகவல்கள் திருடப்பட்ட விடயம் வெளியாகி, பயனர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. பேஸ்புக்கும் தகவல்கள் திருட்டப்பட்டது உண்மைதான் என ஒப்புக்கொண்டது. அதிகளவு பாதுகாப்பு அம்சங்கொண்ட facebook க்கே இந்த நிலைமை என்றால் சாதாரண பயனர்களாகிய நமக்கு இணையத்தில் தகவல் பாதுகாப்பு என்பது கேள்விக்குறிதான்.
எனினும் குறிப்பிட்ட செயல்களை மேற்கொள்வதன் மூலம் இணையத்தின் வழியாக தகவல்கள் திருடப்படுவதை தடுக்க முடியும்.
முகநூலின் வழியாக உங்களுடைய தகவல்கள் திருடு போகாமல் இருக்க குறிப்பிட்டச் செயல்களை செய்யலாம்.
தகவல் திருடும் பேஸ்புக் ஆப்
பேஸ்புக் ப்ளாட்பார்மில் கேம்ஸ் உட்பட பல்வேறு ஆப்ஸ்கள் உள்ளன. அவற்றை பயன்படுத்துவோர்களின் எண்ணிக்கை அதிகம். அதுபோன்ற ஆப்ஸ்கள் மூலம் தகவல்கள் பெறப்பட்டு, அதை பயனர்களின் அனுமதியில்லாமல் பயன்படுத்தியிருக்கிறக்கிறார்கள்.
பேஸ்புக் தகவல் திருடும் ஆப் கண்டறிந்து நீக்குவது எப்படி?
பேஸ்புக் செட்டிங்ஸ் சென்று, அதில் App கிளிக் செய்து, அதில் நீங்கள் பயன்படுத்திடாத ஆப்கள் உள்ளனவா எனப் பார்த்து, அவற்றை நீக்கிவிட வேண்டும்.
செயல்முறை:
1. பேஸ்புக் SETTINGS கிளிக் செய்யவும்.
2. அதில் Apps and Websites கிளிக் செய்யவும்.
3. அதில் நீங்கள் அனுமதிப்ப ஆப்ஸ் காட்டப்படும்.
4. தேவையில்லாத ஆப்களில் டிக் மார்க் ஏற்படுத்தவும்.
5. இறுதியாக மேலுள்ள REMOVE பட்டனை அழுத்தவும்.
6. அவ்வளவுதான்.
அவ்வாறு நீக்குவதன் மூலம் ஆப் மூலம் உங்களுடைய தகவல்கள் திருடுபோகாமல் பாதுகாக்க முடியும். (இதற்கு முன்பு உங்களுடைய தகவல்களை அந்த ஆப்கள் பெற்றிருந்தால் ஒன்றும் செய்ய இயாலது.)
எனினும் தேவையில்லாத ஆப்களை நீக்குவதன் மூலம் எதிர்காலத்தில் உங்களுடைய தகவல்கள் திருடு போகாமல் தடுக்க முடியும்.
பேஸ்புக்கும் தற்பொழுது விழித்துக்கொண்டு அதுபோன்ற ஆப்கள் இருந்தால் அவற்றை நீக்க அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
Data Theft app, Remove App, Facebook Tricks, Facebook Tips.