அதுபோன்ற அப்ளிகேஷன்களை பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அவற்றில் குறிப்பிட்ட செயலிகள் பயனர்களின் தகவல்களை மறைமுகமாக பெற்றுக்கொண்டு அந்த தகவல்கள் தவறாக பயன்படுத்தி வருகின்றன.
அதனால் பேஸ்புக் பயனர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதை உணர்ந்த முகநூல் அவ்வாறான அப்ளிகேஷன்கள் கண்டறிந்து நீக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
அந்த வகையில் முகநூல் பயனர்களின் தகவல்களை திருடிய ஆப்கள் சிலவற்றை அதிரடியாக நீக்கம் செய்துள்ளது.
பயனர்களின் அனுமதியில்லாமல் அவர்களின் தகவல்களை பயன்படுத்தும் அது போன்ற அப்ளிகேஷன்களை அனைத்தையும் கண்டறிந்து நீக்கப்படும் என ஃபேஸ்புக் அறிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் இதுவரைக்கும் 500 க்கும் மேற்பட்ட செயலிகள் நீக்கப்பட்டுள்ளன.
Tags: ஃபேஸ்புக், செயலி, நீக்கம்