80 சதவிகிதத்தினர் அதனைப் படித்துப் பார்க்காமல் ’ஆம்’ என்பதைத் தேர்வு செய்வதாக ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது. அந்தளவுக்கு அந்தக் கொள்கையைப் படிப்பது கடினமான செயலாகப் பார்க்கப்படுகிறது.
இது தீங்கு விளைவிக்கும் செயலிகள் அல்லது இணையதளம் உருவாக்குவோருக்குச் சாதமாக அமைந்து விடுகிறது. இதற்குக் காரணமாக சொல்லப்படுவது அதில் கொடுக்கப்படும் சட்டம் சார்ந்த விளக்கங்கள் மற்றும் வாசிப்பதற்குக் கடினமான முறையில் எழுதப்பட்டிருக்கும் மொழியும்தான்.
எந்த ஒரு செயல் நமக்குக் கடினமாக இருப்பினும் அதற்கென ஒரு சாதனத்தையோ செயலியையோ வடிவமைப்பது நிகழும். அதைப் போலவே இதற்கும் ஒரு மென்பொருளை உருவாக்கியுள்ளனர் பெடரல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (switcherland), யுனிவர்சிட்டி ஆஃப் விஸ்கான்சின்( america) மற்றும் யுனிவர்சிட்டி ஆஃப் மிச்சிகன் ஆகியவற்றைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்.
இதைப் பற்றி பெடரல் இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஹம்சா ஹார்க்கவுஸ் கூறியதாவது.
“தனியுரிமை கொள்கையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களைப் பயனர்களுக்குக் காட்சிப்படுத்தினால் என்ன என்ற கேள்வியுடனே இந்த ஆராய்ச்சியைத் தொடங்கினோம். அதில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்துத் தரவுகளையும் காட்சிப்படுத்துவது இதன் நோக்கம் அல்ல;
அந்தக் கொள்கையில் கொடுக்கப்பட்டுள்ள முக்கியமான மற்றும் சுவாரஸ்யமான தரவுகளைச் சுலபமாக நீங்கள் அறிந்து கொள்ளும் வகையில் உங்களுக்கு வழங்கும்” என்றார்.
இவர்கள் உருவாக்கியிருக்கும் இந்த மென்பொருளின் பெயர் ‘பொலிஸிஸ்’ (polisis) இது ஒரு இணையதளமாகவும், உலாவி நீட்டிப்பாகவும் (browser extention) செயல்பட்டு நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் குறிப்பிட்ட இணையதளத்தின் தனியுரிமை கொள்கையை ஆய்ந்து பல்வேறு பகுதிகளாகப் பிரித்து இன்போ கிராபிக்ஸ் முறையில் வழங்கும்.
உதாரணமாக ஃபேஸ்புக்கின் தனியுரிமை கொள்கையை நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம்.
அந்நிறுவனத்தின் கொள்கையில் குறிப்பிட்டுள்ளவாறு எந்தெந்த தரவுகளைப் பயனர்களிடம் பெற்றுக்கொள்ளும், மூன்றாம் தர நிறுவனங்களுக்கு எந்தெந்த தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும், அதில் கூறப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்கள் எவை, எந்தெந்தத் தரவுகளை அது சேமித்துக்கொள்ளும், எந்தக் குறிப்பிட்ட பயனர்களுக்கான இணையதளம் அது, அந்த இணையதளத்தில் நீங்கள் ஏதேனும் மாற்றம் செய்ய முடியமா, அப்படி இருப்பின் எவை எவை எனப் பல பிரிவுகளாகப் பிரித்து அதனை இன்போகிராபிக்ஸ் செய்து உங்களுக்கு வழங்கும்.
ஒருவேளை அதனைப் பார்த்த பிறகும் உங்களுக்கு அந்தக் கொள்கையில் சந்தேகம் இருக்கும் எனில், ‘பிரைபாட்'(pribot) என்ற சாட்பாட்டை அறிமுகம் செய்கிறது இந்தக் குழு. இந்த சாட்பாட்டுடன் அந்தக் கொள்கையில் இருக்கும் சந்தேகங்களை விவாதித்துத் தெளிவு பெறலாம்.
இந்த மென்பொருளைப் பயிற்றுவிப்பதற்காக 115 இணையதளங்கள் மற்றும் கூகுள் ப்ளேஸ்டோரில் இருந்து பெறப்பட்ட 130000 செயலிகளின் தனியுரிமை கொள்கைகளையும் ஃபோர்தாம் பல்கலைக்கழக மாணவர்களின் உதவியுடன் பகுப்பாய்வு செய்து உரைவிளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
Thanks and Source: Vikatan.com