திடீரென வித்தியாசமான பெயரில் வைரஸ் பரவி கம்ப்யூட்டரை முடக்குவது, நம்மை அறியாமலேயே நம்முடைய தகவல்களை அறிந்து வைத்துக்கொள்வது, வங்கி கணக்கு விபரங்கள் போன்றவற்றை திருடுவது என்பது போன்ற தகவல்களால் “இன்டர்நெட்” ல் ஆபத்தும் அதிகம் என்பதை உணர முடிகிறது.
எனவேதான் நாம் அணுகவிருக்கும் இணையதளத்தின் நம்பகத்தன்மையை நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. சரி, இணையத்தை அணுகி ஒரு வலைத்தளத்தை பார்வையிடும்பொழுது அது நம்பகமானதுதானா என்பதை எப்படி அறிந்து கொள்வது?
1. ஒரு இணையதளம் நம்பகமானதுதானா என்பதை அட்ரஸ் பாரில் https: என பச்சை நிறத்தில் இருந்தால் நம்பகமானதுதான் என்பதை அறிந்துகொள்ள முடியும்.
2. VriSign, TRUSTe, McAfee Secure போன்ற அங்கீகார வழங்குநர்களால் வழங்கப்பட்ட நம்பிக்கை முத்திரை (Trust Seal) இருந்தால், அவ்விணையத்தளம் பாதுகாப்பானதுதான் என்பதை அறிந்துகொள்ள முடியும்.
3. நீங்கள் பார்வையிடும் வலைத்தளத்தின் உள்ளடக்கம், அந்த இணையதளத்தின் தரத்தை பறைசாற்றும். நம்பிக்கையான இணையதளம் என்றால், அதன் வடிவமைப்பு, அதில் இடம்பெற்றிருக்கும் கட்டுரைகள், வாசகர்களின் கருத்துகள் போன்றவை இடம்பெற்றிருக்கும். அதில் அமைந்திருக்கும் கட்டுரைகள் பிழையின்றி இருக்கும். அதே சமயம் அதில் இடம்பெற்றிருக்கும் About US, Contact Us, Privacy Policy போன்ற பக்கங்களை பார்வையிட்டாலே அந்த தளத்தைப் பற்றி நம்பக்தன்மையை அறிந்துகொள்ளலாம்.
4. ஒரு இணையதளத்தின் நம்பகத்தன்மையை அறிந்துகொள்வதற்கு, WOT, Webutation, Trustpilot போன்ற பிரபலமான Browser Extensions உள்ளன. அவற்றை வலை உலவியில் இணைப்பதன் மூலம், நீங்கள் எந்த ஒரு இணையத்தளத்தை திறந்திடும்பொழுதும், அவ்விணையதளத்தின் “நம்பகத்தன்மை” குறித்த தகவல்களைக் காட்டும்.
அதேபோல, AVG Link Scanner , McAfee SiteAdvisor மற்றும் Dr.Web LinkChecker போன்ற ஆன்ட்டி-வைரஸ் புரோகிராம்களும் வலைத்தளங்களின் நம்பகத்தன்மை மற்றும் வைரஸ் போன்ற புரோகிராம்களின் ஆபத்து குறித்த தகவல்களை உடனடியாக காட்டிவிடும்.
Tags: Internet Tips, How To, Trusted Website, Useful Tips.