கம்ப்யூட்டர் அறை எப்படி இருக்க வேண்டும்?
- கம்ப்யூட்டர் அறை நல்ல காற்றோட்டமான இடமாக இருக்க வேண்டும்.
- போதுமான அளவிற்கு வெளிச்சத்தை தரக்கூடிய விளக்குகள் இருக்க வேண்டும்.
- சன்னல்களுக்கு எதிர்ப்புறமாக கணினி மேசை அமைந்திருக்க கூடாது.
- சன்னல்களின் வெளிச்சம், மின் விளக்குகளின் வெளிச்சம் போன்றவை கம்ப்யூட்டர் திரை மீதோ அல்லது உங்களின் மீதோ பட்டு எதிரொளிக்கும் வகையில் இருக்க கூடாது.
- கம்ப்யூட்டர் திரையிலிருந்து வெளிப்படும் வெளிச்சம் எதிர்புற சுவரில் பட்டு எதிரொளிக்காத வகையில் சுவரின் வண்ணம் இருக்க வேண்டும்.
image credit: pinterest.com
கம்ப்யூட்டர் இருக்கும் இடத்திற்கு பக்கவாட்டில் சன்னல்கள் அமைந்திருப்பது நல்லது. அதே நேரத்தில் அதிலிருந்து அதிகப்படியான வெளிச்சம் வரலாமல் இருக்க, அதற்கு தகுந்தாற் போன்ற நல்ல “சன்னல் திரைகள்” (Windows Screen) பயன்படுத்த வேண்டும்.
இதனால் வெளியிலிருந்து வரும் வெளிச்சத்தை குறைக்க முடியும். தூசிகள் போன்றவைகள் அறைக்கு வருவதை குறைத்திடலாம். மேலும் கண்கள் அதிக ஒளியால் பாதிபடைவதை தடுக்கலாம்.
சரியான மேசை & நாற்காலி :
என்ன வகையான கம்ப்யூட்டர் பயன்படுத்துகிறீர்கள் என்பது பொறுத்து உங்களுடைய மேசை மற்றும் நாற்காலி அமைய வேண்டும். கம்ப்யூட்டர் பயன்படுத்தவென (Desktop) மேசைகள் உள்ளன. அதற்கு பொருத்தமான சுழலும் நாள்காலிகள் இருக்கின்றன. அவற்றை வாங்கிப் பயன்படுத்தலாம்.
அந்தளவிற்கு வசதிகள் இல்லாதவர்கள் வீட்டில் இருக்கும் மேசையை பயன்படுத்தலாம். ஆனால் உங்களது உயரம், மற்றும் பார்வை நேர்கோட்டிற்கு 20 டிகிரி சாய்வாக திரை இருக்கும்படி அமைத்துக்கொள்ள வேண்டும்.
நீண்ட நேரம் கணினியில் பணிபுரிபவர்கள் முதுகு வலி, கழுத்து வலி வராமல் இருக்க, அதற்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்ட நாற்காலிகளைப் (Ergonomic Chairs) பயன்படுத்தலாம். இதுபோன்ற Heavy Duty Chairs விலை சற்று அதிகமாக இருப்பினும், எதிர்காலத்தில் முதுகு தண்டுவடப் பிரச்னை வராமல் இருக்க இது நிச்சயமாக உதவும்.
“கம்ப்யூட்டர் இருக்கை” யின் அமைப்பு இப்படிதான் இருக்க வேண்டும். இந்த அளவுகளில் இருந்தால் “முதுகுவலி”, “கழுத்துவலி” போன்ற பிரச்னைகளை குறைக்க முடியும் (பார்க்க படம்).
Laptop / மடிக்கணினி பயன்படுத்துபவர்கள் சாதாரண மேசைகளை தாராளமாக பயன்படுத்தலாம். மடிக்கணினிக்கு என உள்ள Cooler Fan வசதியுடன் கூடிய இருக்கைகளை Laptop Stand வாங்கி பயன்படுத்தலாம். இதனால் மடிக்கணினி விரைவில் சூடேறுவதை தவிர்த்து, வெப்பத்தையும் குறைக்க முடியும்.
ஓய்வு:
தொடர்ந்து ஒரு நாளைக்கு 18 மணி நேரத்திற்கு அதிகமாக கணினியில் பணிபுரிவர்கள், நிச்சயமாக 20-20-20 பார்முலாவை பயன்படுத்தியே ஆக வேண்டும். பணிக்கிடையில் தேவையான ஓய்வை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
image credit: pinterest.com
கணினியில் பணி புரிபவர்களுக்கு முதுகுவலி, கழுத்து வலி, கண்கள் வலி ஏற்படுவது இயல்பானதுதான். அதை முடிந்தளவிற்கு தவிர்த்திட,
- 20 நிமிடங்களுக்கு ஒரு முறை எழுந்து நடத்தல்
- 20 அடி தூரத்தில் இருக்கும் பொருட்களை பார்த்தல்
- இயல்பாக கண்களை சிமிட்டல்
- நாற்காலியிலிருந்து எழுந்து கை கால்களை அசைத்தல்
போன்ற சிறிய அசைவுகளை ஏற்படுத்தி உடலை இயல்பு நிலைக்கு திருப்பலாம்.
image credit :kneelingchairhq.com
கண்களுக்கு ஓய்வு:
கம்ப்யூட்டர் திரையிலிருந்து வெளிப்படும் வெளிச்சம் கண்களை பாதிக்காமல் இருக்க Anti – Glare Glass பயன்படுத்தலாம்.
கண்களுக்கு ஓய்வு கொடுத்திட, கண்களுக்கான சிறிய பயிற்சிகளை மேற்கொள்ள உதவும் மென்பொருட்கள் சில உண்டு. அது குறித்து விரிவாக தெரிந்துகொள்ள,
“கம்ப்யூட்டர் திரை ஒளியின் பாதிப்பிலிருந்து கண்களை பாதுகாத்திடும் மென்பொருட்கள்“
என்ற பதிவை வாசிக்கவும்.
உட்கார்ந்த நிலையில் அதிக நேரம் பணிபுரிவதால், உடலில் இயல்பு தன்மை மாறி உடலில் பல பிரச்னைகள் ஏற்படுகிறது. அதைத் தவிர்த்திட மேற்குறிப்பிட்டச் செயல்களை கட்டாயம் செய்திட வேண்டும்.
இந்த தகவல் உங்களுக்கு அதிர்ச்சி அளிக்கலாம். ஆனால் நடைமுறை உண்மை இதுதான்.
மிக அதிக நேரம் பணி புரிபவர்களுக்கு உடற்பயிற்சியே மேற்கொண்டால் கூட, ஆயுளை குறைத்து மரணத்தை நோக்கிச் செல்கிற கொடுமையான கேன்சர் போன்ற சில நோய்கள் வருவதற்கு வாய்ப்புகள் உருவாகிவிடும் என ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே கணினி முன்பு மிக அதிக நேரம் அமர்ந்து பணிபுரிவதை முடிந்தளவிற்கு தவிர்த்திட வேண்டும்.
Tags: Computer Room, disease, Computer Chair, Computer Table. #howtobeacomputerroom