Monday, December 23, 2024
Homefacebookபோலி தகவல்களைத் தடுக்க பேஸ்புக்கின் புதிய முயற்சி

போலி தகவல்களைத் தடுக்க பேஸ்புக்கின் புதிய முயற்சி

பேஸ்புக்கில் உண்மைத் தகவல்களைவிட, போலியான இட்டுக்கட்டி எழுத்தப்பட்ட தகவல்கள் அதிவிரைவில் பரவிவிடுகிறது. மேலும் ஒருவரின் தகவல்களை மற்றவர்கள் அப்படியே காப்பி பேஸ்ட் செய்து பதிவதும் அதிகரித்து வருகிறது.

அதுபோன்ற தகவல்கள் மற்றும் செயல்களைத் தடுக்க பேஸ்புக் முயற்சி எடுத்து வருகிறது.

machine learning technology

இதன் ஒரு பகுதியாக, Machine Learning எனும் தொழில்நுட்பட்பத்தை பயன்படுத்த விருப்பதாக தகவல்கள் வெளியாகிவுள்ளது.

இத்தொழில்நுட்பத்தின் மூலம் போலி தகவல்கள், நகலெடுக்கப்பட்ட தகவல்கள் போன்றவற்றை மிக எளிதாக கண்டறிந்து தடுக்க முடியும் என ஃபேஸ்புக் பிராடக்ட் மேனேஜர் Tessa Lyons தெரிவித்துள்ளார்.

மெசின் லேர்னிங் செயல்பாட்டுக்கு வரும் பட்சத்தில், காப்பி பேஸ்ட் பதிவுகள், புரளிகள், பொய்யான தகவல்கள் அனைத்தும் குறைந்துவிடும் என ஃபேஸ்புக் நம்புகிறது.

Tags: Facebook, New Technology, Machine Learning.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments