Saturday, September 21, 2024
Homeandroid appமாணவர்கள் எளிதாக கல்வி கற்க 3D android app

மாணவர்கள் எளிதாக கல்வி கற்க 3D android app

கல்வி என்பது மாணவர்களுக்கு கசப்பாக இருக்க கூடாது. அதை விரும்பி படிக்க வேண்டும். அப்பொழுதுதான் அந்த கல்வி அவர்களுக்கு எதிர்காலத்தில் நல்ல பலனைத் தரும். தற்பொழுது உள்ள கல்விமுறை மாணவர்களுக்கு பெரும் சுமையாகதான் இருக்கிறதேயன்றி, அது அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கக் கூடியதாக இல்லை.

இந்நிலையை தவிர்க்க “இன்ட்ராக்ட்டிவ்” கல்விமுறையை செயல்படுத்த வேண்டும் என்பது கல்வியலாளர்களின் கருத்து.

tn schools live 3d app


அப்பொழுதுதான் ஈடுபாட்டுடன் மாணவர்கள் கற்றலை மேற்கொள்வார்கள்.

இந்தியாவைப் பொறுத்தவரை மெல்ல மெல்லதான் கல்வித்துறையில் சிற்சில மாற்றங்களை கொண்டு வந்துக்கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் கல்வியை மாணவர்கள் சிரமின்றி கற்றுத்தேற புதிய ஆன்ட்ராய்ட் 3D ஆப் வெளியிட்டுள்ளனர்.

இது பத்தாம் வகுப்பு மாணவர்கள் கல்வியை எளிதாக பரிந்து படிக்க உதவுகிறது.
புரிந்து படிக்கும்பொழுது, படித்தவைகள் அப்படியே மனதில் நிற்கும். தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறலாம்.
அதற்கு தகுந்தாற் போல பாடப்புத்தகங்கள் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. அறிவியல் பாடப்புத்தகத்தில் உள்ள படங்களை இந்த ஆப் மூலம் ஸ்கேன் செய்திடும்பொழுது, 3D வடிவத்தில் படங்கள் விளக்கத்துடன் காட்சி அளிக்கின்றன.
எப்படி பயன்படுத்துவது?
  • ஆன்ட்ராய்ட் போன் மூலம் Google Play Store சென்று அங்கு “TN SCHOOLS LIVE” என்ற ஆப்பை டவுன்லோட் செய்யவும்.
  • ஆப்பைத் திறந்தவுடன் பத்தாம் வகுப்பா, பன்னிரெண்டாம் வகுப்பா எனத் தெரிவு செய்துவிட்டு, புத்தகத்தில் உள்ள படத்திற்கு நேராக போன் கேமிராவை காண்பிக்கவும்.
  • உடனே அந்த ஆப் புத்தகத்தில் உள்ள தகவல்களை உணர்ந்து, அதற்குரிய 3 படங்களை காட்டும்.
10, 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே ’டிஎன்ஸ்கூல்லைவ்” ஆப் வெளியிடப்பட்டுள்ளது. வெகு விரைவில் 6 முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் இந்த ஆப் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: Android App, Tn Schools Live, 10, +2 Students.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments