Thursday, November 14, 2024
Home4 wheelerதிருடுபோன வாகனங்களை மீட்க உதவும் கருவி !

திருடுபோன வாகனங்களை மீட்க உதவும் கருவி !

தற்காலத்தில் முக்கிய பெருநகரங்களில் இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் அடிக்கடி திருடு போகின்றன. அவ்வாறு திருடு போன வாகனங்களை மீட்பது கடினம். வண்டியை பறிகொடுத்தவர்கள், வண்டியை மீட்க முடியாமல், கடனையும் அடைக்க முடியாமல் திண்டாடுவர்.

காணாமல் போகும் வானகங்களை கண்டுபிடித்து மீட்பதற்கு தற்பொழுது புதிய கருவி [GPS Device] ஒன்று வெளிவந்துள்ளது. அதை வாகனங்களில் பொருத்திவிட்டால் போதும்.

GPS Tracker for Two Wheeler

அக்கருவியுடன் எளிதாக தொடர்புகொள்ள கூடிய ஆன்ட்ராய்ட் செயலி மூலம் திருடுபோன வண்டி எந்த இடத்தில் உள்ளது என்பதை மிக எளிதாக தெரிந்துகொள்ள முடியும்.

இந்த கருவியை புதிய மற்றும் பழைய வாகனங்களில் கண்ணுக்குத் தெரியாத வகையில் சீட் அல்லது டேங்கிற்கு அடியில் பொருத்திக்கொள்ளலாம்.

திருடர்கள் சைட் லாக்கரை (Side Locker) உடைத்து, அல்லது சைட் லாக் ஓப்பன் செய்து எடுத்துச் செல்லும்போது, உடனடியாக இந்த டிவைஸ் செயல்பட்டு,  திருடர்கள் வண்டியை திருடிச் சென்று போய்க் கொண்டிருக்கும் இடம் எது என்ற தகவல் உரிமயாளருக்கு SMS மூலம் தகவல் போய் சேர்ந்துவிடும்.

டிவைசும் கைபேசியும், ஒரு, ‘ஆப்’ மூலமாக இணைக்கப்படுவதால், உரிமையாளருக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தெரிவிக்கப்படும். இதனால், திருடப்பட்ட வண்டி எங்கு இருக்கிறது, அது ஓடிக் கொண்டிருக்கிறதா, ‘ஓவர் ஸ்பீடில்’ போகிறதா, எந்த சிக்னலில் நின்று கொண்டிருக்கிறது என்பதை, ஜி.பி.எஸ்., வாயிலாக, தெள்ளத் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

வலைதளம் தொடர்பில்லாமல் இருந்தாலும், சாதாரண மொபைல் போனில், குறுஞ்செய்தி அனுப்பப்படும் வசதியும் இருக்கிறது. இத்தகைய கண்காணிப்பை, மூன்று நாட்கள் வரையிலும், மொபைல் போனில் வைத்துக் கொள்ள முடியும்.

பொதுவாக, திருடர்கள் வண்டி சாவி இல்லாமலோ, தலைபூட்டை உடைத்தோ அல்லது வண்டியை இயக்காமல் உருட்டி சென்றாலோ, தொடர்ந்து மொபைல் போனில் அலாரம் அடித்துக் கொண்டிருக்கும்.

அப்போது, குறுஞ்செய்தி மூலம் மொபைல் போனிலிருந்து வண்டியில் இருக்கும் டிவைசிற்கு கட்டளை அனுப்பி, இயக்கத்தில் இருக்கும் வண்டியை நிறுத்தலாம். இதற்கான செலவு, முதலில், 3,000 – 4,000 ரூபாய்.

அதைத் தவிர மாதம், 600 ரூபாய் செலவில், மொபைல் போனில் உள்ள செயலியை புதுப்பித்துக் கொள்ளலாம்.

Tags: GPS Tracker for Two Wheeler, Car GPS Tracker, GPS android app for CAR and Two Wheeler

Source:Dinamalar.com

RELATED ARTICLES

Most Popular

Recent Comments