Wednesday, December 25, 2024
Homecinemaவடிவேலுவுக்கு தகுதி இல்லை! சினிமாவுக்கு துரோகம் செய்தவர் - கடும் எச்சரிக்கை விடுத்த பிரபல தயாரிப்பாளர்

வடிவேலுவுக்கு தகுதி இல்லை! சினிமாவுக்கு துரோகம் செய்தவர் – கடும் எச்சரிக்கை விடுத்த பிரபல தயாரிப்பாளர்

நகைச்சுவை நடிகர்களில் நடிகர்களில் வடிவேலுவின் பங்கு சினிமாவில் பல படங்களின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. தவிர்க்க முடியாத ஒரு நடிகராக அவர் இருந்து வருகிறார்.

ஆனால் அண்மைகாலமாக அவருக்கும் 23 ம் புலிகேசி படக்குழுவுக்கும் அடுத்த பாகத்தை படமாக எடுக்க கருத்து வேறுபாடு இருந்து வந்தன. வடிவேலுவின் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

அண்மையில் நேசமணி என அவரின் ஃபிரண்ட்ஸ் பட கேரக்டர் உலகளவில் டிரெண்டிங்கில் இடம் பெற்று பேசப்பட்டது. இதன் பின் தனியார் சானலுக்கு பேட்டியளித்த அவர் புலிகேசி பட இயக்குனர் சிம்புதேவன் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தை கடுமையாக சாடி பேசியிருந்தார்.

மேலும் இயக்குனரை ஒருமையிலும் பேசியிருந்தார். தயாரிப்பாளரை போண்டா டீ திண்பவர்கள், கட்டப்பஞ்சாயத்து செய்பவர்கள் என விமர்சித்தது சர்ச்சையானது.

தற்போது அம்மா கிரியேஷன்ஸ் தயாரிப்பாளர் சிவா அளித்துள்ள பேட்டியில் வடிவேலு தொழிலுக்கு துரோகம் செய்தவர். தயாரிப்பாளர் சங்கத்தை பற்றி தவறாக பேச தகுதி இல்லை.

இயக்குனரை ஒருமையில் பேசியது தவறு. இனியொரு முறை சங்கத்தை தவறாக பேசினார் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதை எச்சரிக்கையாக சொல்கிறேன்.

தயாரிப்பாளர் சங்கத்தில் அவர் மீது 16 பக்கங்கள் அளவிற்கு புகார் உள்ளது. வெளியிட்டால் மக்கள் மத்தியில் அவர் மீதுள்ள மதிப்பு போய்விடும் என்பதால் வெளியிடவில்லை என கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments